Wednesday, March 16, 2011

அத்தியாயம் ஏழு. படுகளம்

என் ஈகோவின் வீழ்ச்சியை என்னால் பார்க்க முடியவில்லை. என் குரல் எனக்கே தெரியாமல் உயர்ந்திருந்தது.

“ரெண்டு நாள்டி, ரெண்டே நாள் ராத்திரி, நான் உன் கூட படுக்கல, அவ்ளோதான் அன்னிக்கு வந்த உன் புருசனோட படுத்துகிட்ட, நீ என்ன குத்தம் சொல்றியா?”

“நான் என் புருசனோட படுத்ததில என்ன தப்பு? நீதான இடையில வந்தவன்” என்றாள்
“அதான் நான் போய்ட்டேன். சும்மா போல விஜி, உன் கூட பழகின ஆறு மாசத்துக்கு லட்சம் லட்சமா அள்ளி கொடுத்துதான் போனேன். நீ நல்லா இருக்கனும்னுதான் நினைச்சேன்”
“நான் ஒண்ணு கேக்குரேன், ஒலகத்துல எவனுமே ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிறது இல்லயா? புருசன் ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிட்டான்னு, ரெண்டு பொண்டாட்டில எவளாவது ஒருத்தி ஓடிப்போய்டுறாளா என்ன?”
நான் திகைப்பாய் பார்த்தேன். விஜி தொடர்ந்தாள்.
“எனக்கு ஏன் ரெண்டு புருசங்க இருக்க கூடாது? நீதான் பயங்கரமா படிச்சவனாச்சே? கவிதயா பேசுவியே? நிர்வாணம்தான் சுதந்திரம்னு மூச்சுக்கு மூச்சு சொன்னவனாச்சே? மாற்றுக் கலவி, மாற்று உச்சம், காமத்தின் அடியாழம்னு ஏதேதோ குடிச்சிட்டு பேசுவியே? எல்லாமே பொய்யா? அன்னிக்கு ராத்திரி ஒரு மூணாந்தர ஆண் மாதிரி ஓடிப்போனியே, ஏதோ பெரிய கற்புக்கரசன் மாதிரி”
நான் சிலையாய் சமைந்தேன். அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு சொன்னேன்.

“விஜி நான் அன்னிக்குப் போனது நீ இன்னொருத்தரோட படுத்திருந்தேன்னு இல்ல. எங்க நான் உன் வாழ்க்கைய பாழாக்கிடுவனோன்னு நினைச்சிதான் போனேன்”
விஜி சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தாள்.
“நல்ல ஜோக் இது. நான் இன்னொருத்தன் பொண்டாட்டின்னு தெரிஞ்சிதானே என்கிட்ட பழகின? ஆரம்பத்துல இருந்தே நான் இன்னொருத்தன் பொண்டாட்டிதானே, அன்னிக்கு ராத்திரி மட்டும் என்ன உனக்கு திடீர் ஞானோதயம்?”
எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அவளே தொடர்ந்தாள்
“ரொம்ப சிம்பிள் இது. ஒரு பொண்ணு மத்தவங்களுக்கு வேணா துரோகம் பண்ணலாம். ஆனா உனக்கு பண்ணக்கூடாது. உன் கிட்ட வர்ரதுக்கு முன்னாடி தெவுடியாவா இருந்தாலும் பரவால்ல, ஆனா உன் கிட்ட வந்ததும் உடனடியா பத்தினியாகிடனும். நீ அடிக்கடி சொல்வியே மிடில்க்ளாஸ் ஆண் சைக்காலஜின்னு அதுதானே இது? ஒரு வேள புரட்சிகர ஆண்ங்கிறவன் பொண்ணோட அம்மணத்த மட்டும் பாக்குறவனோ?

நான் திகைத்துப் போனேன். இப்படி ஒரு கோணம் இருக்குமென்பது எனக்குப் பிடிபடவே இல்லை. எல்லா விஷயத்தையும் என் பார்வையிலேயே என் அளவுகோலிலேயேதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வார்த்தை கூட பேசாமல் தளர்ந்து சோபாவில் அமர்ந்தேன்.
விஜி பக்கத்து மேசையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் சரித்துக் கொண்டாள். நான் குற்ற உணர்விலும் தன்னிரக்கத்திலும் தவித்தேன்.
0
விஜி தொடர்ந்து பேசினாள். ”அன்னிக்கு நைட் நீ போனது அப்ப எனக்கு நிறைவாதான் இருந்திச்சி. உன் மேல மரியாதை கூடுச்சி. இனிமே எந்த தப்பும் செய்யாம புருசனோட உத்தமியா வாழனும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா அப்படி நடக்கல வாழ்க்கை கசாமுசான்னு ஆகிப் போச்சி. என் புருசன் உன் கிட்ட வாங்கிட்டுப் போன பணம் மொத்தத்தையும் சித்தூர்ல ஏதோ தெவுடியா வீட்ல அழிச்சிருக்கான். அத லோகுதான் நடத்திட்டு இருந்திருக்கான். எல்லாத்தையும் வுட்டுட்ட இவன் மேல ஒரு இரக்கம் வந்து, அவனோடவே சேர்த்துகிட்டிருக்கான். கங்காவரத்துல தொழில் நடத்துனம்னு முடிவு பண்ணி, என் புருசன இங்க அனுப்பி இருக்கான். இந்த எடத்த புடிச்சி, பொண்ணுங்கள தேடிப் பிடிச்சி கொண்டாந்தும் என் புருசனால சரியா மேய்க்க முடியல. வாகா பொண்ணுங்களும் மாட்டமப் போவவே, கிராக்கி ஒண்ணும் வரல. என்னப் பழி வாங்கனும்னு நினைச்சிதான் திரும்ப என்கிட்ட வந்திருக்கான். என் உடம்பு சரியா வில போகும்னு நினைச்சித்தான் வந்திருக்கான். நீ போன பதினைஞ்சி நாள் ஈஸ்வரன் கோயில் தெரு வீட்லதான் இருந்தோம். வீட்ல இருந்த சாமான் செட்டு எல்லாத்தையும் வித்துப் பணமாக்கி அதையும் எடுத்துகிட்டு ஆந்திரா வந்தோம். நிறைய கனவோட வந்தேன். புருசன் பிசினெஸ்ல பெரிய ஆளாகி, பெரிய கார்லதான் பாண்டிக்கு திரும்பப் போவனும்னு ஆசப்பட்டேன். மொத நாள் இந்த வீட்டுக்கு வந்ததும் எல்லா கனவும் காணாம போய்டுச்சி. பாத்ததுமே இது அந்த மாதிரி இடம்னு எனக்கு புரிஞ்சிடுச்சி. அப்ப ரெண்டு பொண்னுங்கதான் இருந்தது. தப்பிச்சிப் போகவும் முடியல. செத்துப் போகவும் முடியல. எப்பவும் ரெண்டு ஆம்பளைங்க என் பின்னாலயே இருந்தானுங்க. இவனுக்குத்தான்னு இல்லாம, வறவன் போறவனெல்லாம் என் மேல வுழுந்து புடுங்கினானுங்க. என் ஒடம்பு மேல அத்தன பேருக்கும் பேராச இருந்தது. ரெண்டு வாரத்துல எல்லாம் மறத்துப் போச்சி. இந்த சூழ்நிலைக்குப் பழகிட்டேன். அரசாங்கத்துல சில பெரிய மனுசங்களுக்கு என்ன ரொம்பவே புடிச்சது. அவனுங்கள பயன்படுத்திட்டு மத்தவனுங்கள கிட்ட வர விடாம பாத்துகிட்டேன். லோகுவையும் என் கைக்குள்ள போட்டுகிட்டு என் புருசன இங்க இருக்க தடியனுங்களோட ஒருத்தனா ஆக்கிட்டேன். கொஞ்ச நாள்லயே எல்லாரையும் கட்டி மேய்க்கிற குணம் வந்திடுச்சி. ஒரு ஆம்பளய பழி வாங்க இன்னொரு ஆம்பளைய பயன்படுத்திகிட்டேன். இந்த வீடு ரொம்ப பேமஸ். நான் இப்ப நினைச்சா ஆந்திராவுல என்ன வேணா பண்ண முடியும். எல்லா மட்டத்துலயும் எனக்கு ஆளுங்க இருக்காங்க. என் புருசன வெட்டிக் கூறு போடனும்னுதான் ஆரம்பத்துல ஆத்திரம் வந்தது. ஆனா நான் இவ்ளோ அதிகாரமா இருக்க அவனும் ஒரு காரணம். இதுக்கெல்லாம் ஆரம்பக் காரணம் நீ. சொல்லப்போனா உன்னாலதான் நான் அழிஞ்சேன். அந்த அழிவை மறைக்கதான் இந்த வேசம்னும் எனக்கு நல்லா புரியுது. ஆனா இந்த அதிகாரம் இப்ப எனக்குப் பழகிடுச்சி. உன் மேலயும் சரி, என் புருஷன் மேலயும் சரி விருப்பமோ வெறுப்போ எதுவுமே இல்ல”

பேச்சை நிறுத்திவிட்டு மீண்டும் தண்ணீர் குடித்தாள்.
0
நான் எதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன். விஜி வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். நெருங்கிப் புன்னகைத்தாள்.
“நான் உன்ன பாப்பேன்னு நினைக்கல. நீ என்ன காதலிச்ச இல்ல?” எனச் சொல்லிவிட்டு சிரித்தாள்.
மெல்லமாய் “இப்பவும்தான்” என்றேன்
ப்ச் என சலித்தபடி சொன்னாள். “எத்தன வருசம் ஆனாலும் ஆம்பள புத்தி இவ்ளோதான்”
“நிச்சயமா சொல்றேன் விஜி, இப்ப இந்த நிமிசம் வந்தா கூட நான் உன்னோட வாழத் தயரா இருக்கேன்”
“நெசமாஆஆவா சொல்ற?” என நெருங்கி வந்து கண்ணைப் பார்த்துச் சிரித்தாள்
நான் எழுந்தேன் “என்னோட வந்துரு விஜி” என்றேன்
விஜி ஆத்திரமாய் பேசினாள் “நான் இவ்ளோ பேசியும் நீ திரும்ப அதே இடத்துக்குதான் வர இல்ல. நீ மட்டுமில்ல எந்த ஆம்பளையும் சாகுற வர இப்படித்தான் இருப்பானுங்க”
“என்ன பேசுர நீ? உன்ன நேசிக்கிறேன்னு சொல்ரது உனக்கு அல்பமா இருக்கா?” என இறைந்தேன்.
“என்ன நேசிக்கிறதா இருந்தா ஏன் கூப்டுற? எல்லாத்தையும் விட்டுட்டு நீ வா. இதே ரூம்லயே வாழ்வோம். உனக்கு எல்லா வசதியும் நான் பண்ணித் தரேன். என்ன வேணும் உனக்கு?
நான் அதிர்ந்தேன். அமைதியானேன்.
“முடியாது இல்ல. இத இதத்தான் இவ்ளோ நேரமா சொல்லிட்டிருந்தேன்” இந்த பேச்ச வுட்ரு, உனக்கு புரியாது. அவ்ளோதான் விஷயம். நீ சாகுற வர இப்படித்தான் இருப்ப”


திடீரெனத் துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. பதறி எழுந்தேன். நேரம் ஒரு மணியைக் கடந்து விட்டிருக்கிறது. அவசரமாய் வெளியில் போக முனைந்தேன். விஜி என்னைத் தடுத்தாள். வீடே வேட்டுச் சப்தத்தில் அதிர்ந்தது. ஆட்கள் கத்தியபடியே இங்கும் அங்குமாய் ஓடினர். அலறல் சப்தங்களும் கூப்பாடுகளுமாய் வீடு அலறியது.
“விஜி நான் போகனும் விடு” என்றேன்.
“வெளில போனா செத்துப் போய்டுவ, யாரா இருக்கும்னு தெரிலயே” என யோசனையாய் என்னைப் பார்த்தாள்
“ஆமா உன் கூட வந்த அவங்க யாரு?” எனப் பதட்டமாய் கேட்டாள்
நான் அவளைத் தள்ளிவிட்டுப் போக யத்தனித்தேன்
விஜி என் கைகளை பிடித்து இழுத்து சோபாவில் தள்ளி என் மீது முரட்டுத்தனமாய் படர்ந்தாள்.
“என்ன நடக்குது இங்க? யார் அவங்க?” என்றாள்
அறைக் கதவு படீரெனத் திறந்தது. விஜியின் புருசன் நாகராஜன், கையில் அரிவாளோடு நின்று கொண்டிருந்தான். இடது தோள்பட்டையில் துப்பாக்கித் தோட்டா துளைத்து இரத்தம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
விஜி பட்டென எழுந்தாள்.
நாகராஜன் என்னைப் பார்த்து ஆத்திரமாய் கத்தினான்
“இவன் இன்னுமாடி உன்னப் பாக்க வரான் தாயோலி செத்தடா இன்னிக்கு” என்றபடி முன்னால் வந்தான்.
நான் எழுந்து நின்றேன்.
விஜி எனக்கு முன்னால் வந்து என்னை மறைத்தாள்
“நாகு இவர விட்ரு. இவருக்கு சம்பந்தம் எதுவும் இருக்காது”
“என்னாடி பேசுர, இவனோட வந்த ரெண்டு பேர் லோகுவ போட்டானுங்கடி.. நம்ம ஆளுங்க பத்து பேருக்கு மேல செத்துக் கெடக்குறானுங்க.. ஓத்தா மரியாதயா நவுந்துடு, அவன் தல இப்ப உருளணும்” என்றபடியே முன்னால் வந்தான்.
விஜி எனக்கு முன்னால் நின்றுகொண்டு என் இரு கைகளையும் இறுக்கமாய் பிடித்துக் கொண்டாள். என் உடலோடு ஒட்டி நின்றாள்.
“நாகு விட்ரு வேணாம்.”
ஒத்துடி ஒத்துடி எனக் கத்தியபடியே அரிவாளை வீசிக்கொண்டே முன்னால் வந்தான்.
நான் விஜியின் கைகளை உதறிவிட முயற்சித்தேன். விஜி இன்னும் பலமாய் என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
“விடு விஜி, விடு விஜி” எனக் கத்தினேன்
இன்னும் என் உடலோடு ஒட்டிக் கொண்டாள்.

நாகராஜன் நெருங்கி வந்து அரிவாளை வீசினான். விஜியின் கழுத்தில் அரிவாள் ஆழமாய் பாய்ந்தது. ஒரே வெட்டில் முக்கால் கழுத்துப் பிளவுண்டு தலை தொங்கியது. விஜியின் இரத்தம் பீறிட்டு என் முகத்தை நனைத்தது. விஜி சரிந்த மரமாய் பொத்தென விழுந்தாள். துப்பாக்கியைப் பிரயோகிக்க அவகாசம் இருக்கவில்லை. நாகராஜின் அடுத்த வீச்சிற்கு குனிந்து அவன் அடிவயிற்றில் தலையால் மோதினேன். ”ஹம்மா” என்றபடியே அரிவாளைத் தவற விட்டான். மாடியிலிருந்து நான்கைந்து உருவங்கள் அறைக்காய் ஓடி வந்தன. சடாரென வெளியேறினேன். இடது பக்கமிருந்த கைப்பிடிக் கம்பியில் கை வைத்து எகிறி, மாடியிலிருந்து குதித்தேன். விரைந்து வெளியேறுகையில் என் காலை ஒரு உடல் இடறியது. குனிந்து பார்க்கையில் கடைசிப் படிக்கட்டில் தாமஸின் தலை தனியாய் கிடந்தது.

“அய்யோ” எனக் கத்தியபடியே வெளியேறி கேட்டை உதைத்துக் கொண்டு ஓடினேன்
பத்தடித் தொலைவில் கார் உறுமிக் கொண்டிருந்தது
பாய்ந்து ஏறினேன். பின் சீட்டில் குணா படுத்துக் கிடந்தான்
முன் சீட்டில் குணாவின் கை மட்டும் தனியாய் கிடந்தது
நான் மீண்டும் அலறினேன்.
சீராளன் முகத்தை அறைந்து கொண்டு அழுது கொண்டிருந்தான்
ஒரு அரிவாள் காற்றில் பறந்து வந்து காரின் பின் கண்ணாடியில் தொம்மென மோதியது.
“வண்டிய எட்றா” எனக் கத்தினேன்
சீராளன் ஆத்திரமும் அழுகையுமாய் ஆக்சிலேட்டரை மிதித்தான்
வண்டி இருளில் பாய்ந்தது.

மேலும்

11 comments:

Sugu said...

Amazing narration... when are you going to publish this together as a book?

jayaramprakash said...

thanks brother udane next post pannathukku.

பிரபல பதிவர் said...

kalakkal....

இரவுப்பறவை said...

புனைவின் நிகழ்வுகளும் கதைமாந்தரின் வாதங்களும் பிரம்மிக்க வைக்கிறது.. நல்லா இருக்குங்க!

இரவுப்பறவை said...

புனைவின் நிகழ்வுகளும் கதைமாந்தரின் வாதங்களும் பிரம்மிக்க வைக்கிறது.. நல்லா இருக்குங்க

Anonymous said...

chance less!!!! amazing!!!

taaru said...

நானும் தான்... இன்னும் அதிர்வு நிக்கல அண்ணா.... அதிர்வான புது கோணம், ஆனால் அப்பட்டமாய்; அவ்வளவும் உண்மை... தூள்.
அன்புடன்,
அய்யனார்.அ.

Nithi said...

Kalakaringa Ayyannar......

Anonymous said...

மாறுபட்ட கதையோட்டம், சுவாரஸ்யமான நடையில் தொடர்ந்து படித்தும், இந்த பதிவின் அதிர்ச்சி மிக அதிகம். மண்டைக்குள்ள ‘கிர்...’ன்னு இருக்கு.
-ஜெகன்

Anonymous said...

அய்யனார், நான் உங்களின் தொடரை விடாமல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதிரடியான, யோசிக்க விடாத கதையமைப்பு. நான் திருவண்ணாமலையை ஒட்டிய கிராமத்துக்காரன். உங்களைப் பற்றிய ஆவலும், பெருமையும் எப்போழுதும் எனக்குள் இருக்கிறது. கடந்த முறை ஊருக்கு வந்த போது, உங்களின் “உரையாடலினி” யை வம்சியில் வாங்க இயலாமல் ஆகிவிட்டது. ஆனாலும் உங்கள் வலைப்பூவை பற்றி திருமதி ஷைலாஜாவின் தங்கையிடம் பேசிக் கொண்டிருந்தேன். அடுத்து வரும்போது(பஹ்ரைனில் இருக்கிறேன்) கண்டிப்பாக உங்களின்
புத்தங்களை வாங்கி விடுவேன். திருவண்ணாமலை பற்றியும், என் வாசிப்பனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நேரமிருப்பின் பேசலாம்.

- சதீஷ் குமார்
+973 - 39481851
satheeshzone@gmail.com

Ayyanar Viswanath said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே

Featured Post

test

 test