Wednesday, September 16, 2009

குவாண்டின் டராண்டினோ - வசீகர வன்முறையாளன்



குவாண்டின் டராண்டினோ எனக்குப் பிடித்தமான இயக்குனர்களில் ஒருவர். மிகக் குரூரமான வன்முறையை வார்த்தையாகவும் காட்சியாகவும் மிக நேர்த்தியான விளையாட்டாய் நிகழ்த்திக் காட்டுவதில் தேர்ந்தவர். வெகுசனம், கலை என்கிற இருவேறு எதிரெதிர் துருவங்களை தங்களது திரைப்படங்களின் மூலம் ஒரே புள்ளியில் குவிக்கச் செய்த இயக்குனர்களாக அகிரா குரசோவா வையும் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கையும் சொல்லலாம். நான் டராண்டினை ஹிட்ச்காக்கின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். கொல்வது கலை என்கிற அணுகுமுறைதான் ஹிட்ச்காக்கினுடையது இவருக்கு கொலை அல்லது வன்முறை என்பது வசீகரமானதொரு விளையாட்டாய் இருக்கிறது.சன்னாசி சொல்வது போல “நான் சொல்லநினைப்பது இப்படி” என்கிற கோணம்தான் டராண்டினோ.

இவரின் சமீபத்திய திரைப்படமான இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் இன்னும் இங்கு வரவில்லை. தலைப்பின் வில்லங்கத்தை நினைவில் கொண்டு இந்நாட்டில் வெளிவராதென நானாகவே நினைத்துக் கொண்டே தரவிரக்கம் செய்தேன். சென்ற வாரத்தில் கமினே திரைப்படம் பார்க்கச் சென்றபோது இன்குளோரியஸ் விரைவில் வருகிற பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது. திரையில் இரத்தத் தெறிப்புகளை காண்பது அலாதி உற்சாகமாக இருக்குமென்பதால் திரையில் வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் எனத் தரவிறக்கம் செய்ததைக் கிடப்பில் போட்டாயிற்று.

டராண்டின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமாக Pulp Fiction (1994)பல்ப் பிக்சனையும் ரிசர்வாயர் டாக்ஸையும் சொல்லலாம். சில வலைப்பதிவுகளில் பல்ப் பிக்சனைப் புரிவிக்க நண்பர்கள் கட்டம் கட்டி விளக்கியிருந்ததை பார்த்து சிரித்துக் கொண்டேன். ஒரு திரைப்படத்தை பகிரவே இவ்வளவு மெனக்கெடல்கள் தேவைப்படும்போது அதை இயக்கியவன் எந்த அளவு மெனக்கெட்டிருப்பான் என நினைத்துக் கொண்டேன். ஆனால் பல்ப் பிக்சன் எனக்கு சிரமமான படமாகத் தோன்றவில்லை. அமரோஸ் பெர்ரோஸ், ரன் லோலா ரன், ப்ளைண்ட் சான்ஸ், இர்ரிவர்சிபிள், சங்கிங் எக்ஸ்பிரஸ் போன்ற வித்தியாசமான கதை சொல்லலைக் களமாகக் கொண்ட படங்களை ஒப்பிடும்போது பல்ப் பிக்சன் யுக்தி எளிமையானதே.

நான் லீனியர் கதை சொல்லல் என்பது திரையை விட புத்தகத்தில் எளிதாக இருக்கலாம். பல்ப் பிக்சன் திரைக்கதையை இப்படிப் புரிந்து கொள்ளலாம். ஒரு புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தின் சில பத்திகளை, எடுத்தவுடன் படித்து விட்டு மீண்டும் முதல் அத்தியாயத்திலிருந்து படிக்கத் துவங்கி, நடுவில் நான்காவது அத்தியாயத்தை மூன்றாவதாகவும், மூன்றாவதை நான்காவதாகவும் படித்து விட்டு, மீண்டும் கடைசி அத்தியாயத்தை முழுமையாகப் படித்து முடித்தால் அதுதான் பல்ப் பிக்சன் படம். இதில் கவனிக்க வேண்டிய ஒரே விதயம் என்னவெனில் இந்த புத்தகத்தை எங்கிருந்து படித்தாலும் அது வாசிப்பின்பத்தை தர வேண்டும் மற்றபடி ஒரு அத்தியாயத்திற்கும் இன்னொரு அத்தியாயத்திற்கும் தொடர்பு இருக்கலாம் அல்லது இருக்கத் தேவையில்லை. முதல்,இரண்டு,மூன்று,கடைசி அத்தியாயங்கள் எனச் சொல்வது கூட ஒரு புரிதலுக்காகத்தானே தவிர முதல் கடைசி என்கிற அடிப்படைகள் எதுவும் இல்லா வடிவமாகத்தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.(க்ளைமாக்சில் உயிரோடு இருக்கும் ஜான் ட்ரவோல்டாவை ப்ரூஸ் வில்லிஸ் இரண்டாவது அத்தியாயத்திலேயே கொன்று விடுவார்) இந்த நான் லீனியர் வடிவம் பின் நவீனக் கூறுகளில் ஒன்றாக அணுகப்படுகிறது. பன்முகத் தன்மை, வாசிப்பின்பம் போன்றவைகளையும் இத் திரைப்படம் உள்ளடக்கியிருப்பதால் பல்ப் பிக்சனை சிறந்த பின்நவீனத்துவ படங்களில் ஒன்றாக தைரியமாய் சேர்த்துவிடலாம்.

கசாமுசா திரைக்கதையை மெருகூட்ட ப்ரூஸ் வில்லிஸ்,சாமுவேல் ஜாக்சன், ஜான் ட்ரவால்டோ போன்ற தேர்ந்த நடிகர்கள், பாலியல் வார்த்தைகளை மட்டுமே கொண்டு நிரப்பிய சுவாரஸ்ய உரையாடல்கள், அவ்வப்போது வெடிக்கும் திடீர் துப்பாக்கிகள் , உடலிலிருந்து பீறிட்டடிக்கும் குருதித் தெறிப்புகளென காட்சியின்பத்தின் உச்சமாக ஒவ்வொரு காட்சியுமிருக்கும். இந்தப் படத்தினை உரையாடல்களுக்காகவே திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த சில உரையாடல் தொகுப்புகள் கீழே..
Jules: What does Marcellus Wallace look like?
Brett: What?
Jules: What country you from?
Brett: What?
Jules: What ain't no country I ever heard of! They speak English in What?
Brett: What?
Jules: ENGLISH, MOTHERFUCKER! DO-YOU-SPEAK-IT?
Brett: Yes!
Jules: Then you know what I'm saying!
Brett: Yes!
Jules: Describe what Marcellus Wallace looks like!
Brett: What, I-?
Jules: [pointing his gun] Say what again. SAY WHAT AGAIN. I dare you, I double dare you, motherfucker. Say what one more goddamn time.
Brett: He's b-b-black...
Jules: Go on.
Brett: He's bald...
Jules: Does he look like a bitch?
Brett: What?
[Jules shoots Brett in shoulder]
Jules: DOES HE LOOK LIKE A BITCH?
Brett: No!
Jules: Then why you try to fuck him like a bitch, Brett?
Brett: I didn't.
Jules: Yes you did. Yes you did, Brett. You tried to fuck him. And Marcellus Wallace don't like to be fucked by anybody, except Mrs. Wallace.

இன்னொரு அட்டகாசமான காட்சி
Fabienne: Whose motorcycle is this?
Butch: It's a chopper, baby.
Fabienne: Whose chopper is this?
Butch: It's Zed's.
Fabienne: Who's Zed?
Butch: Zed's dead, baby. Zed's dead.

மொத்த உரையாடல்களையும் படிக்க இங்கே

போதை மருந்து கடத்தல், ஆட்களைக் கடத்துதல், கொலை, கொள்ளை, கொண்டாட்டம் , பழிவாங்கல் போன்றவைகள்தாம் டராண்டினோ இயங்கும் தளமாக இருக்கிறது. நல்ல/ஹீரோயிச மாதிரிகளை எல்லாம் இவர் திரையில் கொண்டுவர மெனக்கெடுவதில்லை. கெடுதலை கெடுதலாகவே நம் முன் கொண்டுவருவதுதான் இவரது தனிச்சிறப்பாக இருக்கிறது.



ரிசர்வாயர் டாக்ஸ்
Reservoir Dogs (1992)சாதாரண கதையொன்றை மிகப் புத்திசாலித்தனமான திரைக்கதையாக எப்படி மாற்றுவது என்பதற்கான சரியான உதாரணம். வழமையான ஒரு கொள்ளைக் கூட்ட பாஸ், கை தேர்ந்த ஆறு திருடர்கள், ஒரு கொள்ளைத் திட்டம், பின்பு அத்திட்டத்தின் சொதப்பல். இவ்வளவுதான் இத்திரைப்படம். ஆனால் பார்வையாளன் காட்சியமைப்பில் திகைத்துப் போகிறான். திரைப்படங்களில் ஊறிய பார்வையாளனும் மேலோட்டமான பார்வையாளனும் தத்தம் பார்வைகளில் திருப்தியடைகிறார்கள். இந்த யுக்தி டராண்டினோவிற்கு எளிதாக வருகிறது. மிஸ்டர் வொயிட்/ப்ளூ/ப்ரவுன்/பிங்க்/ஆரன்ஞ்/ப்ளாண்ட் எனப் பெயரிட்டுக் கொண்ட ஆறு திருடர்கள் வைரத்தைக் கொள்ளையடித்துவிட்டு திட்டமிட்ட இடத்தில் சந்திக்கும் திட்டம் போலிஸின் இடையூறால் சொதப்பலாகிறது. ஒருவர் சுடப்பட்டு இறந்து போகிறார்.இன்னொருவர் மோசமாக காயமடைகிறார். இதில் ஒருவர் போலிஸ் இன்பார்மர் அவர் யார் என்கிற சந்தேகத்தினுக்கு அனைவரும் பலியாகின்றனர்.

போலிஸ் திருடனையும், திருடன் போலிஸையும் ஒருவரையொருவர் மிகக் குரூரமாகத் தாக்கிக் கொள்ள பிரதானமாய் புறக் காரணங்கள் எதுவுமே தேவையில்லை.அவன் திருடனாக/போலிஸாக இருப்பதே போதுமானது. இத்திரைப்படத்தில் சிக்கிக் கொண்ட போலிஸ் ஒருவனைத் துன்புறுத்தும் காட்சிகள் உளவியல் ரீதியிலாக சமூக அடையாளத்தின் சிக்கலைப் பேசுகிறது. சக மனிதன் என்ற பொதுவையெல்லாம் அடையாளங்களுக்காக தூக்கி எறிந்து விட்ட வன்முறையை குரூரமாய் நம் முன் வைக்கிறார் டராண்டினோ.தான் இயக்கும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கும் டராண்டினோ இதில் மிஸ்டர் ப்ரவுன் ஆக வந்து சுடப்பட்டு இறந்து போவார்.மிஸ்டர் பிங்க் ஆக நடித்திருக்கும் Steve Buscemi மிக அட்டகாசமான நடிகர்.fargo வில் இவரது முக பாவணைகளை பார்த்து பெரிதும் சிலாகித்துக் கொண்டிருந்தேன்.

இவரது மற்றத் திரைப்படங்களான கில் பில் 1 & 2 சின்சிட்டி போன்றவைகளின் அடிநாதமும் வன்முறையும் பழிவாங்கலும்தான். தனது மாஸ்டர் பீஸ் இன்குளோரியஸ்தான் எனச் சொல்லிக் கொள்ளும் டராண்டினோ அந்தப் படத்தின் மீதான என் ஆர்வத்தினை இன்னும் அதிகரித்திருக்கிறார். பல்ப் பிக்சன் தந்த கிளர்ச்சியை இன்குளோரியஸ் தருகிறதா? என்பதைப் பார்த்துவிட்டுப் பகிர்கிறேன்.

26 comments:

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

கதிர் said...

அய்ஸ்
இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் டொரண்ட் ல வந்துடுச்சி ஆனா பிரிண்ட் ஓகே ரகம்தான். பாத்துட்டு எழுது. இவரோட ஜாக்கி ப்ரௌன் எனக்கு பிடித்தமான படம்.

anujanya said...

நீங்கள் எல்லாம் 'ஊறிய பார்வையாளர்'. என்னைப் போன்ற 'மேலோட்ட' ஆசாமிகளுக்கு, அதுவும் முதல் முறை படம் பார்த்த பின் (சென்ற வார இறுதியில்தான் பார்த்தேன்) ஆச்சரியத்தில் மூழ்கியிருந்த எனக்கு, ஹாலிவுட் பாலாவின் 'கட்டம் கட்டி' விளக்கிய பதிவுகள் மிக பயனாக இருந்தன.

உங்க விளக்கமும் எளிமையாக, இப்போது நல்லா புரியறமாதிரி இருக்கு. Jules, Wolf and Miya வசனங்கள் மிகக் கவர்ந்தன. இன்னும் சிலமுறையாவது பார்க்கணும்னு எண்ண வைக்கும் படம். Reservoir Dogs பார்க்க வேண்டும்.

ஆமாம், உங்களுக்கு ஏனிந்த குருதி வெறி?:))))

அந்தப் பதிவில் சென்று எழுத சோம்பல் காரணமாக இருப்பதால் :

மசக்கலி சமீப காலத்தில் வந்த பிரமாதமான உற்சாகப் பாடல். 'தில் கீரா' மனதை என்னவெல்லாமோ செய்யும் பாடல். அதில் பெண் பாடும் இடங்கள், மயிலிறகால் ஒத்தடம் கொடுக்கும். அந்தப் பாடலை ரசிப்பதற்கும் பிரத்யேக மனநிலை வேண்டும். பாடலின் ஊடே வரும் string instrument ம், ஆணின் குரலும் ....இசையை எப்படி வர்ணிப்பது. கவிதையாலேயே முடியாத போது, உரைநடையில்...

அனுஜன்யா

Unknown said...

எங்கே தரவிரக்குகிறீர்கள்? எந்த தளம்?

ராகவன் said...

அன்பு அய்யனார் அவர்களுக்கு,
ஒரு சின்ன விஷயம் கவனித்தீர்களா? உங்களுடைய உலக சினிமாவின் பார்வையை முன் வைத்த இந்த பதியத்தில், எந்த கமெண்ட்களும் இன்னும் முளைக்கவில்லை. உலக சினிமாவை தொடர்பவர்கள் குறைவாக இருப்பதன் காரணமா, அல்லது உங்களின் பதியம் செம்மையாய் நடப்படவில்லையா என்று தெரியவில்லை.
நீங்கள் மதிப்பிட்டிருந்த அல்லது சிலாகித்திருந்த குவாண்டின் ட்ராண்டினோ பற்றி எனக்கு நிஜமாகவே தெரியாது..எனக்கு பல்ப் ஃபிக்‌ஷன் பேசப்பட்ட ஒரு படம் என்பது தெரியும், ஆனால் பார்க்க வாய்ப்பு கிட்டவில்லை. ரன் லோலா ரன் பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த இரண்டு படங்களும் பார்க்க வேண்டிய என் பட்டியலில் உண்டு. குவாண்டின் பற்றிய அறிமுகம் என் போன்ற வலையர்களுக்கு போதுமானதாக இல்லை என்று நினைக்கிறேன். உங்களுடைய பதிவு ஒரு மேலோட்டமான வியப்பு நிலையாகத்தான் தெரிந்தது எனக்கு.

அன்புடன்
ராகவன்

ramalingam said...

inglorious basterdsன் கடைசியில் masterpieceக்கு சரியான விளக்கம் கொடுத்திருக்கிறார் பாருங்கள்.

Unknown said...

http://nuvocineparadiso.blogspot.com/

இதை கவனிக்கல போல நீங்க.. :::)

Unknown said...

ராகவனின் குறையை தீர்க்க...

http://nuvocineparadiso.blogspot.com/

QT's முழுமையான அலசல்.. Inglorious basterds தவிர்த்து

குசும்பன் said...

அய்யனார்: எனக்கு மிகவும் பிடித்த சில உரையாடல் தொகுப்புகள் கீழே

kusumbu: what?

Venkatesh Kumaravel said...

கில் பில் பற்றி சொல்லாமல் விடதை வன்மையாகக் கணடிக்கறேன். மற்றபடி ஓகே. இந்தப்பவைப்பறறி ரொம்ப எக்ஸ்பெக்டஷன்...

பிச்சைப்பாத்திரம் said...

பதிவின் தலைப்பு சுவாரசியம். reservoir dogs பார்த்த பரவசத்தில் குவாண்டினின் அத்தனை படங்களையும் பார்க்கும் ஆர்வம் உடனே பிறந்தது.
உங்களுக்கு four rooms என்கிற திரைப்படத்தினை பரிந்துரை செய்ய விரும்புகிறேன். இதில் ஒரு பகுதியை மாத்திரம் ட்ராண்டினோ இயக்கியிருந்தாலும் முழுப்படமும் செம ரகளையாக இருக்கும்.

குப்பன்.யாஹூ said...

ராகவன் நீங்க சொல்றது சரி,

நானும் உலகமயம்மாக்கல் , அமெரிக்க பிரித்தானிய கலாசாரம் மீது காதல் கொண்டு இருந்தாலும் , ஆங்கில சினிமா மீது காதல் வருவதே இல்லை.

சினிமா என்றால் உடனே என் கண் முன் வருவது சிவாஜி, கமல், மம்மூட்டி , ரஜனி, பாலு மகேந்திரா, விஷ்வநாத் தான்.

நாங்க இந்த கிணத்துகுல்லையே தவளையாக இருக்க விரும்பறோம், பக்கத்துல இருக்கிற குளத்தின் பெரிய அளவு பாத்து மலைச்சு, எங்க கிணறே சொர்க்கம் என்கிற மனப்பான்மை கூட காரணம்.

yamuna rajendran said...

it is a joke.lining up 'kieslowski's 'blind chance' and tarantino's films together. tarantino de-politicise everything except celebrating violence and jews. kieslowski's 'blind chance' must see in its specifically 'polish political' backround and following with its philosophical wanderings, ie, the place of propability in life in general and in polish politics in specific terms. kieslowski's films are not made up of and just technically brillainat.it is about humanity.tarantino understand films as a plaything.kiesloski is not.there is nothing in common between them. yamuna rajendran

Ayyanar Viswanath said...

சிங்கப்பூர் தம்பி
நானும் டவுன்லோட் பண்ணேன் பிரிண்ட் ரொம்ப மோசம்.எழுதிடலாம்.

அனுஜன்யா
பகிர்வுகளுக்கு நன்றி.திரையில குருதி ரசிக்கிறவங்க நேர்ல அப்பாவிங்களா இருப்பாங்களாம் :)

உமையணன்
நான் பயன்படுத்துவது http://extratorrent.com/ ஆனால் வைரஸ் வர வாய்ப்புகள் உண்டு.கவனம்.

ராகவன்
இது குவாண்டின் பற்றிய விரிவான இடுகை அல்ல என்பது உண்மைதான்.நண்பர் இசை தந்திருக்கும் சுட்டிகளைப் பாருங்கள் மிக விலாவரியான இடுகைகள் முழுமயாய் அணுக உதவலாம்.

Ayyanar Viswanath said...

தகவலுக்கு நன்றி ராமலிங்கம்

இசை
ஆமாம் கவனிக்கத் தவறிவிட்டேன்.QT தொடராகவே எழுதியுள்ளீர்கள்.விரைவில் படித்து விட்டுப் பகிர்கிறேன்.உங்களின் சுட்டிகளுக்கு நன்றிகள்.

குசும்பர் ??

வெங்கி உங்களிடம் சொன்னதுபோல இன்குளோரியஸ் பார்த்துவிட்டு இரண்டையும் பகிர நினைத்திருந்தேன்.இது முழுமையாக வரவில்லை.இன்னும் நிதானமாய் மெதுவாய் எழுதியிருக்கலாம்.நன்றி.

Ayyanar Viswanath said...

பரிந்துரைக்கு நன்றி சுரேஷ் கண்ணன்.பார்த்துவிடுகிறேன்.

ராம்ஜி எல்லாரும் ஒரு வகையில் தவளைகள்தாம் என்ன தளங்கள் தாம் வேறு :)

யமுனா ராஜேந்திரன்
உங்களின் பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.ஆனால் நான் கீஸ்லோவெஸ்கியையும் டராண்டினோவையும் ஒப்பிட அல்லது சேர்த்துப்பார்க்கும் அபத்தத்தைச் செய்யவில்லை. பல்ப் பிக்சன் திரைப்பட விமசரினங்கள் குறித்தான என் பார்வையைக் குறிப்பிட்டிருந்தேன்.

சில வலைப்பக்கங்களின் பல்ப் பிக்சன் விமரிசனம் வெகு சிரத்தையோடு எழுதப்பட்டிருந்தது.கட்டம் கட்டி மிக விலாவரியாக புரிவித்திருந்தனர்.எனக்கு இத்திரைப்படத்தைப் புரிந்து கொள்வதில் அம்மாதிரியான சிக்கல்கள் எதுவும் எழவில்லை. ஏனெனில் முற்றிலும் புதிய கோணத்தில் படமாக்கப்பட்ட படங்களோடு ஒப்பிடும் போது பல்ப் பிக்சன் புரிந்து கொள்ள எளிமையானதாகத்தான் எனக்குப் பட்டது.

ப்ளைண்ட் சான்ஸை இங்கு குறிப்பிட்டது அதன் திரைக்கதை யுக்திக்காகத்தானே தவிர அடிநாதத்திற்காக இல்லை.
பகிர்விற்கு நன்றி.

Anonymous said...

எளிமையாகவும், மிக அழகாகவும் சொல்லியிருக்கிறீர்கள் அய்யனார், டிராண்டினோ மீதான காதலை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள், நன்றி.
-மொண்டி சப்பாணி.

வேல் கண்ணன் said...

உங்களின் சந்திப்பை என்னால் மறக்கவே முடியாது.
உங்களின் பதிவுகளை ஏறக்குறைய 30- தை தாண்டி விட்டேன்
அருமையான பதிவு அய்யனார் உங்களை போலவே..
தொடர்வேன் ...
தொடர் பயணத்தில் சந்திப்போம்...
வேல் கண்ணன்

நந்தாகுமாரன் said...

I have always loved Quentin Tarantino's movie ... His GrindHouse - DeathProof is also a nice piece of outtake on mindless fury - very interesting ...

நந்தாகுமாரன் said...

I have always loved Quentin Tarantino's movies for his violent outake on life with a marvellous story telling technique ... his Grindhouse - Death Proof was also good ... one important thing about his movies is the dialogues which add to the intensity of his visuals

உண்மைத்தமிழன் said...

இந்தத் திரைப்படங்களைவிட இங்கு எழுதியிருக்கும் விமர்சனத்தை புரிந்து படித்துத் தெளிந்து கொள்வதற்கு தனி அறிவு வேண்டும் போலிருக்கிறது..!

முருகா..! முருகா..!! முருகா..!!!

Anonymous said...

நான் அறிவுஜீவி, அறிவுஜீவி என்று நான்கு சாலைகள் கூடும் இடத்தில் நின்று கூவுவதற்கு ஒப்பான காரியம் இதுபோல வலை எழுதுவதும், அதற்கு பின்னூட்டம் போடுவதும்.

கதிர் என்பவரின் பின்னூட்டம் அப்பட்டமான சுயதம்பட்டம். பதிவெழுதுவதை விடவும் இலகுவான சுயதம்பட்ட பாணி வேறெதுவுமில்லை என்பதை விளங்கிகொள்ள இயலுகிறது.

குணாளன்

dunga maari said...

வேலைப்பளு அதிகமோ? பல நாட்கள் ஆகிவிட்டது நீங்கள் பதிவு போட்டு.

GOPI G

குப்பன்.யாஹூ said...

waiting for your comment, feedback, post on UNNAI POL ORUVAN.

தமிழன்-கறுப்பி... said...

next post...?

Jackiesekar said...

ரொம்ப ரசிச்சி எழுதி இருக்கிங்க நண்பரே... பதிவை படிக்கும் போதே என்னால் உணர முடிகின்றது...

வாழ்துக்கள்
அன்புடன்
ஜாக்கி

Featured Post

test

 test