Tuesday, August 4, 2009

பிறந்தநாள்


வெள்ளையும் நீலமும்
கலந்த சுடிதார்
சிவப்பு நிற பனியன்
அகலச் சிவப்புக் கறைவைத்த
கருநிறப் புடவை
ஒற்றைச் சிவப்பு ரோஜா
கோவில் சினிமா கடற்கரை
வன்மென் முத்தங்கள்
குவிமுலைப்புதைவுகள்
ஆடையான நீள்முடி
தூக்கம் மிதக்கும் விழிகள்
ஒரே ஒரு மெழுகுவர்த்தி
ஒளிரும் கண்களில்
நிழலாடிய என்
பசித்த உதடுகள்
கழுத்து வியர்வையில்
மினுங்கும் பூவிதழ்கள்
மடிச்சுருளும் பூனையுடல்
மென் நாவு தீண்டும் காதுமடல்
………..
………

சிலவற்றை
எளிதில் கடக்க முடிவதில்லை
நினைவுகளை அழிக்க
பின்னிரவு வரை
நினைவுகளோடே
குடிக்க வேண்டியிருக்கிறது

உன்னுருவம் மங்கி
நினைவுகள் அதிரும்
இவ்வெம்மையிருள் தெருக்களில்
உனக்கான பாடலொன்றை
எப்போதும் சுமந்தலைகிறேன்
………
ஒருபோதும் சந்தித்துவிடாதிருப்போம்.

24 comments:

பாலா said...

சாமி எனக்கு இப்படிதும் நடக்கல
இருந்தாலும் ஒரே பீளிங்க்சா இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்

பாலா said...

மென் நாவு தீண்டும் காதுமடல்
………..
………


எல்லா வரிகளும் அற்புதம்
அந்த கோடிட்ட இடத்தையும் அப்படியே நிரப்பிடுங்களேன் (ஹிஹிஹிஹி)
கோடிட்டதுதான் அழகு சாமி

கே.என்.சிவராமன் said...

மாம்ஸ்,

கவிதையில் அதிகமாக வரும் சிவப்பு நிறம், வேறொரு தளத்துக்கு நகர்த்துகிறது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மண்குதிரை said...

rompa nalla irukku

anujanya said...

//மென் நாவு தீண்டும் காதுமடல்//

என்றெல்லாம் எழுதிவிட்டு,

//………..
………//

இப்படி இடைவெளி விட்டு வாசிப்பவர்களுக்கு இடம் கொடுப்பது அட்டகாசம்.

நல்லா இருக்கு அய்ஸ்.

அனுஜன்யா

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்குங்க அய்யனார்.துவைக்கிறது கடைசி வரி..

ரௌத்ரன் said...

எஸ்.பி.பி-ஐ தோக்கடிச்சுடுவீங்க போல பாட ஆரம்பிச்சா...

சொல் குழைவு அழகு...

நேசமித்ரன் said...

கவிதையில் கோடிட்ட பகுதிகள், கடைசி வரிக்குப் பிறகு மனசில் உருவாகும் மீத வரி .
நிறங்களும் ஈரமும் வரிகளெங்கும் விரவி இருக்கும் ஒரு வெம்மையும்
...
//நினைவுகளோடே
குடிக்க வேண்டியிருக்கிறது//

யாத்ரா said...

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது,

//ஒருபோதும் சந்தித்துவிடாதிருப்போம்.//

:)

கோபிநாத் said...

நல்லாயிருக்கு அய்ஸ் ;)

Jazeela said...

குடிக்கிறதுக்கு காரணமும் வேண்டுமோ?

geethappriyan said...

நண்பர் அய்யனார்
அற்புதம்க கவிதை வரிகள்
காதலிப்பது மட்டும் தான் சுகமா?
அழகிய பெண்ணை நினைப்பதும் கவிதை எழுதுவதும்
ஏன் ?
அழகிய பெண் பற்றிய கவிதையை படிப்பதும் சுகமே
அந்த எழுதாத கோடிட்ட இடங்களில் எங்கள் எண்ணம் போல நிரப்பிக்கொண்டோம்.
ஒரு வகையில் பெண்ணை பற்றிய கவிதையும் போதை தான்.

ஒருபோதும் சந்தித்துவிடாதிருப்போம்.//
சான்சே இல்லை
ரத்தினம்

Enbee said...

Azhagu!!!!!!!!!!!!!

MSK / Saravana said...

தல, இந்த கவிதை படிக்கும் போதும் அழுவாச்சியா இருக்கு எனக்கு..

வால்பையன் said...

பிறந்தநாளா!?

பிரிந்த நாளா!?

Ayyanar Viswanath said...

பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே..

தமிழன்-கறுப்பி... said...

அதே உணர்வுகள்...
இப்போதைய என்னுடைய மனோ நிலை.

நன்றி அய்னார்.

ஆனா இதுல குறிப்பிட்டிருக்கிறது யாருன்னு எனக்கு தெரியும்.

:)

pavithrabalu said...

கவிதை அருமை. மனித மனதில் மென் உணர்வுகள் எல்லாமே பெண் சார்ந்தவை.. அழகியல் முழுமையாக கவிதையில் குடியேறி விட்டது. ஒவ்வொரு பிறந்த நாளும் நம்மை பல நினைவுகளில் நீந்த செய்கின்றன.


ஆனாலும் பொதுவாக காதல் கவிதைகளிலே பெண்ணின் உணர்வுகள் மிக சிறிய அளவிலே தான் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இல்லையா?

பவித்ரா

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல் அய்ஸ்

//ஜெஸிலா said...

குடிக்கிறதுக்கு காரணமும் வேண்டுமோ?
//

:))))))))

குப்பன்.யாஹூ said...

கலக்கல் அய்யனார்.

ஆனால் பெரும்பான்மையான உங்கள் கவிதைகள் பிரிவு, பெண் பிரிவு குறித்தே இருக்கின்றனவே, துபாய் வாழ்வு ஒரு காரணமோ.

கண்ணன் said...

//ஒருபோதும் சந்தித்துவிடாதிருப்போம்.//
சேர்த்து வைத்த நினைவுகளை நினைவுகளாகவே இருக்கட்டும்

ஆரூரன் விசுவநாதன் said...

வலியையும் வலிமையாய் சொல்லமுடிகிறது உங்களால். உங்கள் வலி என் விருப்பமல்ல ஆனால் வலியுடன் உள்ள அனைவருக்குமானது உங்கள் வரிகள்
ஆரூர்.

சென்ஷி said...

கலக்கல்!

Ayyanar Viswanath said...

பவித்ரா
ஆண்கள் எழுதும் காதல் கவிதைகளை சொல்கிறீர்களா?
கவிதை உனர்வு தளத்தில் இயங்குவதால் அது மிகுந்த சுயநலமாகவே இருக்கிறது என்பது உண்மைதான்

தமிழன்.ஆதவன்,குப்பன்யாகூ,கண்ணன்.ஆரூரன்,சென்ஷி பின்னூட்டங்களுக்கு நன்றி

Featured Post

test

 test