Sunday, August 2, 2009

கப்பல்காரி


மழைமாலைத்
தெருநதியில்
கப்பல்கள்.

செய்பவளின்
கண்ணெதிரில்
மடியாமல்
மெல்ல
மிதந்து போய்
பின்
மூழ்கும்.

விடியலில்
புங்கை மர
தடித்த வேரில்
சிக்கிச்
செத்துக் கிடக்கும்
அதே
கப்பல்கள்.

எவ்விதச்
சலனமுமில்லாது
தாண்டிப் போவாள்
அதே கப்பல்காரி.

23 comments:

செல்வநாயகி said...

///எவ்விதச்
சலனமுமில்லாது
தாண்டிப் போவாள்
அதே கப்பல்காரி.
//////

I like these lines.

நட்புடன் ஜமால் said...

எவ்விதச்
சலனமுமில்லாது]]

அலட்ச்சியமானவர் என்று(ம்) தோன்றுகிறது

அல்லது

எப்பொழுது நடப்பது தானே என்பதால் அவர் தாண்டி சென்று இருக்கலாம்.

இது போன்றே வாழ்க்கையின் பல நிகழ்வுகள் ...

சென்ஷி said...

கவிதை படிச்சதுமே புரிஞ்சுடுச்சு(?!) அய்யனார்!

கலையரசன் said...

இந்த கப்பல்காரனும் அதுபோல் சென்றிருக்கிறான்...
திரும்ப வருமா அதுபோல, காலங்கள்?

மாசற்ற கொடி said...

கப்பல்காரன் உணர்வு ??

அன்புடன்
மாசற்ற கொடி

கண்ணன் said...

இருப்பினும் மென்மையாக சலனத்தை
ஏற்ப்படுத்தும் அருமையான கவிதை

ரௌத்ரன் said...

'தெரு நதி' புதுசு.நல்லாருக்கு அய்யனார் :)

ஆடுமாடு said...

கப்பல் காரன்?

நேசமித்ரன் said...

புங்கை மர
தடித்த வேரில்
சிக்கிச்
செத்துக் கிடக்கும்
அதே
கப்பல்கள்.
///எவ்விதச்
சலனமுமில்லாது
தாண்டிப் போவாள்
அதே கப்பல்காரி.
//////
மிகவும் பிடித்திருக்கிறது
உங்களுக்கு என்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Jazeela said...

படத்தை பார்த்து கவிதை உதித்ததா? கவிதைக்கேற்ப படத்தை தேடுனீர்களா?

வால்பையன் said...

கப்பல்காரி!?

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
கவிதை படிச்சதுமே புரிஞ்சுடுச்சு(?!) அய்யனார்!
\\
:))


//எவ்விதச்
சலனமுமில்லாது
தாண்டிப் போவாள்
அதே கப்பல்காரி//


அப்புறம்....
கப்பல்காரிங்கிற பெயரும், படமும்.

பாலா said...

நல்லா இருக்குங்க அய்யனார் சாமி
நான் கூட கப்பல் காரன்தான் (கப்பல்ல வேலை செய்றேன் )
அழகினும் அழகி உங்கள் கப்பல்காரி
லவ் பண்ணீகட்டா உங்க கப்பல்காரிய

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்கு அய்யனார்

அன்புடன் அருணா said...

//எவ்விதச்
சலனமுமில்லாது
தாண்டிப் போவாள்
அதே கப்பல்காரி.//
சூப்பர்! பிடிங்க பூங்கொத்தை!

குப்பன்.யாஹூ said...

NICE POEM , THANKS

இரவுப்பறவை said...

கண்ணெதிரே மடிந்தால்,
கப்பல்காரி கவலைப்படுவாளோ?

நல்லா இருக்குங்க...

anujanya said...

அதுதான் குழந்தை. நல்லா இருக்கு அய்ஸ்.

அனுஜன்யா

பா.ராஜாராம் said...

நல்லா இருக்குங்க அய்யனார்.

MSK / Saravana said...

தல, இந்த கவிதை படிக்கும் போது எனக்கு கண் கலங்குது!!!
ஏன்னு தெரியல.

MSK / Saravana said...

நான் ஏன் என்னை கப்பலாக நினைத்து கொள்கிறேன்..??

Ayyanar Viswanath said...

நன்றி செல்வநாயகி

ஆம் ஜமால் :)

நல்லது சென்ஷி

வருவது கடினம்தான் கலை :)

கப்பலின் உணர்வு மாசற்ற கொடி

கண்ணன்,ஆடுமாடு,ரெளத்ரன்,நேசமித்ரன்,ஜெஸிலா,வால்பையன்,தமிழன்,பாலா,நான் ஆதவன்,அருணா,குப்பன் யாகூ,அனுஜன்யா,இரவுப்பறவை,ராஜாராம் மற்றும் சரவணக்குமார் பகிர்வுகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி

காயத்ரி said...

நல்ல கவிதை..

Featured Post

test

 test