Friday, July 17, 2009

வலைப்பூக்கள் சில பரிந்துரைகள்

”பிரபல பதிவர்” ”மூத்த பதிவர்” ”ஓட்டு போடுங்க” ”பின்னூட்டம் போடுங்க“ ”வாசகர் கடிதம்” ”சுய சொறி” ”முதுகு சொறி” ”விளம்பர வெறி” ”பிரபல வெறி” ”நாங்கலாம் ஒரு கேங்” என வலையுலகம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் சூழலிலும் எந்த ஒரு எழவெடுப்புகளிலும் கலந்துகொள்ளாது வலைப்பூக்களில் சாத்தியப்படுத்த இயலும் சுதந்திரத் தன்மையை படைப்புகளாய் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பதிவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாலும் பின்னூட்டமிட இயலவில்லை.சென்ஷி அழைத்திருக்கும் இத்தருணத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி.

1.யாத்ராவின் கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை.பெரும்பாலும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட கவிதைகள்தாம்.(ஒரு வேளை புதியதாய் எழுத எதுவுமே இல்லையோ?)ஆனாலும் இவரது கவிதைகள் இயங்கும் தளம் நான் கடந்து வந்த பாதை மற்றும் நான் சிக்கிக் கிடந்த மனநிலை என்பதால் இவரது கவிதைகளில் என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.

தனிமையிலேயே விட்டுவிடுங்கள்
என் பேரன்பும்
மரக்கிளையினின்று
சுழன்றபடி உதிரும்
பழுப்பு இலை போன்ற
என் பிரிவும்
கொன்றுவிடக்கூடும்
உங்களை.

சென்ற வார போதை இரவில் இவர் பக்கத்தை முழுமையாய் படிக்க முடிந்தது.இதே மனநிலையோடு தொடர்ந்து இருக்க முடியாது.இருக்கும்போதே நிறைய எழுதிவிடுவது நல்லது.

2.நந்தா விளக்கு
இவரது தளமும் கவிதைகள்தாம் என்றாலும் மொழிச் சிக்கலற்ற ஆனால் உணர்வுச் சிக்கல் கொண்ட கவிதைகள்.ஆங்கில வார்த்தைகளை கவிதையில் பயன்படுத்துவதையெல்லாம் இவர் பொருட்படுத்துவதில்லை.மேலும் அசாதரண மன நிலைகள் இவரது கவிதைகளில் சிதறிக் கிடப்பதைப் பார்க்கலாம்.

முன்னோரு காலத்தில் மரங்களும்
நடந்து கொண்டிருந்தன என்ற
சுவாரஸ்யமான கற்பனையை
நம் தர்கங்களால் சிதறடிக்காமல்
அடுத்த தலைமுறைக்கும்
காப்பாற்றித் தருவோம்
என் வீட்டுத் தோட்டத்தில்
சரிந்து கிடக்கும்
பூக்களின் பிணங்களின் மீது
நீ நடந்து வந்தாய்
பூமியை மதித்து மிதிக்கும்
ஒரு குழந்தையின் கால்களோடு



3.முத்துவேல்

முத்துவேலைப் போலவே அவரது கவிதைகளும் எளிமையானவை.எந்தச் சிக்கலுமற்ற பார்வையாளனின் விழியில் தெண்படும் காட்சிகளே இவரது கவிதைகள்.இலேசான மனநிலை வாய்ப்பதென்பது அபூர்வமானதுதானே அந்த வகையில் இவரது கவிதைகளும் எனக்குப் பிடித்தமானவை.
நெரிசலான பேருந்தில்
யாரோ ஒருவன்
யாரோ ஒரு அம்மாவின்
பின்புறத்தில் தன்
ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான்
பிறகு
அவ்வம்மாவின் மகளிடம்
அரைகுறையாக
அம்மாவைப் புணர்ந்தது
மகளுக்குத் தெரியாது
மகளைப் புணர்ந்தது
அம்மாவுக்குத் தெரியாது
என்று
அம்மூவரும் நம்பியிருக்கக் கூடும்
அல்லது
நடித்திருக்கக் கூடும்.



4.மதன் - பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்

மதனின் கவிதைகள் கொண்டாட்டமும் காமமும் நிரம்பியவை.இவரது வார்த்தைகளில் சிக்குறும் நிலைகள் உச்சமானவை.வாசிப்பின்பத்திற்கு இவரது பக்கத்தை உதாரணமாக சொல்லலாம்.
உள்சென்ற துவார வாயில்களின்
வழியாகவே பிதுங்கி வழிவது
வாழ்வின் சங்கீதம்
அதன் லயத்தோடு ஒட்டாமல்
ஆடுகிறேன்
கூத்தாடுகிறேன்
கூத்தாடிக் கூத்தாடிப்
போட்டுடைக்கிறேன்
போட்டுடைத்துப் போட்டுடைத்துக்
கூத்தாடுகிறேன்.


5.லக்‌ஷ்மி சாஹம்பரி
என் கைகளை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்... உணர்வுகளும் வார்த்தைகளும் நிரம்பிய என் உலகிற்கு உங்களை கூட்டிச்செல்கிறேன் ...என கிசுகிசுப்பான குரலில் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் கவிதைகள் இவருடையது.கவித்துவம் தாங்கும் மென் சொற்கள் காதலும் இணக்கமும் கொண்ட இவரின் வார்த்தைகள் வெறுமைகளை விரட்டியடிக்கச் செய்பவை.

இதுவே போதுமானது
உயிரைப்பிழியும் என் தனிமையை
வரைதலில் எடுத்துரைக்க

ஜன்னல் கண்ணாடியில்
மங்கிய வெளிச்சத்தில்
எனதென ஊகிக்ககூடியதாய்
ஒரு பிம்பம்
அனுமதிப்பதில்லை
தனிமைக்கான என் சித்திரத்தை


6.நேயமுகில் - கார்த்திகா
கார்த்திகாவின் கவிதைகளும் சம தளத்தினுக்கானவையே.ஆனாலும் இவர் வார்த்தைகளில் கொண்டு வரும் சித்திரங்கள் கவித்துவமானவை.தாமிரபரணித் தண்ணீரின் மகிமையோ என்னவோ இவரின் கவிதைச் சித்திரங்களிலும் அதே தெருவும் மனிதர்களும் விரவிக் கிடக்கிறார்கள்.
அணில்கள் விளையாடும்
ஆகாவழி மரம் ஒன்றும்
வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிடும்
அரளிச் செடி ஒன்றும்
அருகருகே வளர்ந்தன
புதிதாய் வந்த தெருவில்.
ஆச்சரியப்படும் வேகத்தில்
அரளிச் செடி வளர்ந்து
அந்த மரத்தின் கையை
எட்டிப்பிடித்த நாளில்தான்
எரியத் துவங்கியது தெருவிளக்கு.
கல்யாணத் தெரு போல்
களைகட்டி விட்டது இப்போது
மஞ்சள் வெளிச்சத்தில்
நனையும் தெரு.


அறுவரை மட்டுமே குறிப்பிட வேண்டுமென்பது செந்தழல் ரவியின் விதியாதலால் இவர்களோடு நிறுத்திக் கொள்கிறேன்.மேலும் எனக்குப் பிடித்தமான பக்கங்கள் இவர்களுடையதாய் இருக்கிறது.
அகநாழிகை,பிரவின்ஸ்கா,நேசமித்ரன் மண்குதிரை சேரல்

குறிப்பிடாதவர்கள் எனக்குப் பிடிக்காதவர்கள் என அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டாம் இது ஒரு சிறு பகிர்வு மட்டுமே.மேலும் புதிய பதிவர்களை பகிரும் நோக்கத்திலே இது எழுதப்பட்டது விடுபட்டுப்போன பிடித்தமானவர்கள் குறித்து பின்பொரு முறை.

35 comments:

சென்ஷி said...

நன்றி அய்ஸ்.. அறிமுகக்குறிப்புகளும் அவர்கள் எழுதிய கவிதைகளும் அசத்தல் ..

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

CA Venkatesh Krishnan said...

எல்லாம் வெட்டி வெட்டி எழுதியிருக்கு?

ஓ இதுதான் கவிதையா???

அவ்வ்வ்வ்வ்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

//ஜன்னல் கண்ணாடியில்
மங்கிய வெளிச்சத்தில்
எனதென ஊகிக்ககூடியதாய்
ஒரு பிம்பம்
அனுமதிப்பதில்லை
தனிமைக்கான என் சித்திரத்தை //

அசத்தல்!

anujanya said...

அய்ஸ்,

நல்ல, மனதுக்கு நெருக்கமான கவிஞர்கள். 'நேயமுகில் - கார்த்திகா' இதுவரை படிக்கத் தவறிவிட்டேன். அறிமுகத்திற்கு நன்றி. அந்தக் கவிதை அவ்வளவு அழகு.

உங்க 'பிடித்த லிஸ்டில் இல்லாவிட்டாலும், உங்கள் முதல் பத்தியில் குறிப்பிடப் பட்டவர்களில் நான் இல்லை என்றால் நிம்மதியாக இருக்கும்.

அனுஜன்யா

Karthikeyan G said...

அறிமுகங்கள் அசத்தல்..

அறிமுகத்திற்கு நன்றிகள்!!

Ayyanar Viswanath said...

நன்றி சென்ஷி

இதுலாம் கவிதயேதான் இளைய பல்லவன்

அனுஜன்யா நீங்க உங்கள யூத்துன்னு சொல்லிக்கிறா மாதிரி இருக்கு உங்க பின்னூட்டம்.செல்லாது செல்லாது நீங்களாம் சகபயணிகள்தான் :)

கோபிநாத் said...

அய்ஸ்சு...

உங்களுக்கும்....உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)

KARTHIK said...

பகிர்வுக்கு நன்றி அய்ஸ்

Ilangovan said...

”பிரபல பதிவர்” ”மூத்த பதிவர்” ”ஓட்டு போடுங்க” ”பின்னூட்டம் போடுங்க“ ”வாசகர் கடிதம்” ”சுய சொறி” ”முதுகு சொறி” ”விளம்பர வெறி” ”பிரபல வெறி” ”நாங்கலாம் ஒரு கேங்” என வலையுலகம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் சூழலிலும் எந்த ஒரு எழவெடுப்புகளிலும் கலந்துகொள்ளாது வலைப்பூக்களில் சாத்தியப்படுத்த இயலும் சுதந்திரத் தன்மையை படைப்புகளாய் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பதிவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்."


Nice,

இது தமிழர்களின் தலை எழுத்து; குழு மனப்பான்மை, போட்டி, பொறாமை ...bullshit

அகநாழிகை said...

அய்யனார்,
நீங்கள் மதன் மட்டும் எனக்குப் புதியவர், அவரை வாசித்து விடுகிறேன். நண்பர்கள் யாத்ரா, நந்தா, முத்துவேல் குறித்த பகிர்வுகளுக்கு மகிழ்ச்சி. சற்றே சோர்வாய், முன்பு போல பிடித்த புத்தகங்களை வாசித்துக் கொண்டு, அச்சு ஊடகங்களில் மட்டுமே எப்போதாவது எழுதலாமா என யோசித்துக் கொண்டிருந்த வேளையில் உங்கள் பதிவு நெகிழ்வூட்டுகிறது, எழுத்தின் மீதான தீராக்காதலை அதிகமாக்குகிறது.

என் அன்பும் நன்றிகளும்,

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

குப்பன்.யாஹூ said...

தங்களின் ஊக்கமூட்டும் பாராட்டுகளுக்கு நன்றிகள் பல, உங்கள் எழுத்து மேலும் இவர்களை உற்சாக படுத்தி இன்னும் சிறந்த படைப்புக்களை பெற்று தரும்.


உங்களோடு சேர்ந்து இவர்களை நானும் வாழ்த்துகிறேன்.

குப்பன்_யாஹூ

குசும்பன் said...

//நான் கடந்து வந்த பாதை மற்றும் நான் சிக்கிக் கிடந்த மனநிலை என்பதால் இவரது கவிதைகளில் என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.//

ஆக நீங்க சீனியர் பதிவர் ஆயிட்டிங்கன்னு சொல்ல வருகிறீர்கள் சரிதானே அய்ஸ்!!!

ரவி said...

ஆஹா. அருமையான பகிர்வு...மணித்துளிகளை அல்ல, ரெண்டு மூனு நாட்களையே தின்னும் பதிவுகளாக கொடுத்துட்டீங்க...

மதன் said...

நன்றி அய்யனார்!

’நானெல்லாம் ஏன் எழுதுகிறேன்.. யாராவது நம்மையெல்லாம் படிக்கிறார்களா என்ன?..’ என்ற எண்ணமிருந்தது.

நீங்கள் என்னை வாசிக்கிறீர்கள் என்பது எனக்கு மகிழ்வையும், உங்களுக்கு நன்றியையும் உரித்தாக்குகிறது. மிகுந்த ஊக்கமளிக்கிறது.

அன்புக்கு மீண்டும் நன்றிகள்!

நந்தாகுமாரன் said...

என் கவிதை பற்றிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி ... மகிழ்சியாக இருக்கிறது ... நானும் உங்களைத் தொடர்ந்து வாசிக்கிறேன் ... குறிப்பாக உங்கள் உடலைப் புசித்தல் கவிதை எனக்குப் பிடித்த ஒன்று

DJ said...

அய்ய‌னார்,
மேலே நீங்க‌ள் முத‌ற்ப‌ந்தியில் குறிப்பிட்ட‌ கார‌ண‌ங்க‌ளால் -என‌க்கும்- வ‌லைப்ப‌திவுச் சூழ‌ல் சோர்வைத் த‌ருவ‌தாக‌வே இருக்கின்ற‌து.
...
நீங்க‌ள் குறிப்பிட்ட‌ அநேக‌மான‌வ‌ர்க‌ளின் க‌விதைக‌ளை அவ்வ‌ப்போது வாசிப்ப‌துண்டு; வ‌சீக‌ரிக்கும்ப‌டியாக‌ எழுதும் இவ‌ர்க‌ள், த‌ங்க‌ளைக் க‌வனியுங்க‌ள் என்று கூவிவிற்காது த‌ங்க‌ள்பாட்டில் எழுதுகின்றார்க‌ள் என்ப‌துதான் என‌க்கு முக்கிய‌மான‌தாய்த் தெரிகிறது.
....

ம‌ற்ற‌து இந்த‌ template பிடித்திருக்கிற‌து. முக்கிய‌மாய் முன்புபோல‌ உங்க‌ள் ப‌திவிற்கு வ‌ரும் பின்னூட்ட‌ங்க‌ளை 'ம‌ல்லுக்க‌ட்டாது' எளிதாக‌ வாசிக்க‌ முடிகிற‌து :-).

Ayyanar Viswanath said...

நன்றி கார்த்திகேயன்

கோபி மற்றும் கார்த்திக் நன்றி


உண்மைதான் இளங்கோவன்

அகநாழிகை
அச்சு,இணையம் எனப் பிரிக்கத் தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன்.எழுதுவதை விட ஆசுவாசம் வேறெதுவுமில்லை என்ற நிலை வந்துவிட்டால் சோர்வு அண்டாது :)

நன்றி குப்பன் யாகூ

குசும்பர்ர்ர்ர்ர்ர்ர்

நன்றி ரவி

Ayyanar Viswanath said...

மதன்
இந்தச் சிறு பகிர்வு உங்களை உற்சாகப் படுத்தியிருக்குமெனில் அதற்காக மகிழ்கிறேன்.

நன்றி நந்தா

டிசே இந்த வடிவமைப்பு நண்பர் சரவணக்குமார் தந்தது நன்றிகள் அவருக்கு உரித்தாகுக :)

யாத்ரா said...

மிகவும் மகிழ்ச்சியாய் உணர்கிறேன். என்ன சொல்வதெனத் தெரியவில்லை, மிக்க நன்றி. உணர்வு மயமானதொரு நிலையிலிருக்கிறது மனம். வலையில் எழுத வந்த இந்த ஐந்து மாதங்கள் என் வாழ்வில் மிகச் சிறந்த காலம். தொடர்ந்து நண்பர்களின் அன்பும் அக்கறையும் என்னை கரைத்து நெகிழ வைத்திருக்கிறது வைக்கிறது. வலையில் எழுத வருவதற்கு முன் நான் நேசித்து ரசித்துப் படித்து வியந்த உங்களைப் போன்றவர்களிடமிருந்தெல்லாம் கிடைக்கிற அங்கீகாரங்களின் போதான என் மனநிலையை அவ்வளவு எளிதாக என்னால் விவரித்து விட முடியவில்லை.
என்றும் என் நன்றிகள்.

Unknown said...

சில உதாரண படைப்புகளுடன் சிலரது தளங்களைப் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நல்ல வாசிப்பனுபவம் தரும் என்று கட்டியம் கூறுகின்றன. ஒவ்வொன்றாய் படிக்க வேண்டும். தேடிப்பிடித்து படிக்காமல் சில பல மொக்கைகளுடன் நேரம் முடிந்து விடுகிறது. பகிர்வுக்கும் பரிந்துரைத்தமைக்கும் நன்றி அய்யனார்.

தமிழன்-கறுப்பி... said...

நல்ல அறிமுகங்கள் அய்யனார்

நானும் படிச்சிருக்கேன்.

ம்ம்ம்...
சில நாட்களுக்கு ஒரு முறை போய் மொத்தமாக வாசிப்பதுதான் எனக்கும் பிடிக்கும்...

நாமக்கல் சிபி said...

நீங்க புதுப் பதிவரா! இந்தா பிடிங்க ஒரு பின்னூட்டம் + ஒரு பசிடிவ் குத்து!

நாமக்கல் சிபி said...

அருமையான பதிவு! அனைத்து வினாக்களுக்கும் நல்ல பதில்கள்!

நாமக்கல் சிபி said...

//அய்யனார் said...//
ஐயய்யோ! அண்ணாச்சி உங்க பிளாகா இது!

இப்ப எல்லா பிளாக்லயும் இந்த கமெண்ட் போட்டுகிட்டிருந்தனா! அதையே இங்கனயும் போட்டுடேன்!

மாதவராஜ் said...

அருமையான காரியம் செய்திருக்கிறீர்கள். தோளைத்தட்டி நீங்கள் அளித்திருக்கும் உற்சாகம், இந்தப் பதிவர்களை மேலும் சிறந்த படைப்புக்களை தமிழுக்கு கொண்டு வந்து சேர்க்கும். நன்றி.

இளங்கோ கிருஷ்ணன் said...

நல்ல பகிர்வு. எனக்கு பயனுள்ளதாய் இருந்தது நன்றி.

இளங்கோ கிருஷ்ணன்

MSK / Saravana said...

தல, நானும் இவங்க எல்லாரையும் படிக்கிறேன். ரொம்ப நல்லா எழுதறாங்க.

ச.முத்துவேல் said...

உங்கள் வலைப்பூவை வாசிப்பவர்களின் வட்டம் பெரியதும், தேர்ந்ததும், தரமான முக்கிய படைப்பாளீகளைக் கொண்டதுமாகும்.அவர்களிடத்தி
லெல்லாம் கொண்டுபோய் என்னை(எங்களை) அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.நன்றி அய்யனார்.

எல்லாவற்றுக்கும் மேலாக என் கவிதைகள் உங்களுக்குப் பிடிப்பதே ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியோடும் பார்க்கிறேன்.சற்று பயமும் சேர்ந்துகொண்டுவிடுகிறது. அனாவசியமான பதிவுகளைத் தவிர்த்து, நிறையபேர் கவனிக்கிறார்கள் என்று பொறுப்பாக எழுதவேண்டும்.

/அனுஜன்யா நீங்க உங்கள யூத்துன்னு சொல்லிக்கிறா மாதிரி இருக்கு உங்க பின்னூட்டம்.செல்லாது செல்லாது நீங்களாம் சகபயணிகள்தான் :)/

/குறிப்பிடாதவர்கள் எனக்குப் பிடிக்காதவர்கள் என அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டாம் இது ஒரு சிறு பகிர்வு மட்டுமே.மேலும் புதிய பதிவர்களை பகிரும் நோக்கத்திலே இது எழுதப்பட்டது விடுபட்டுப்போன பிடித்தமானவர்கள் குறித்து பின்பொரு முறை. /

எனக்கு ஆறுதல்தரும் வரிகள் இவை.

பா.ராஜாராம் said...

அய்யனார்,
இரண்டு நாள் முன்பாக,சுந்தராவுடன் தொலை
பேசிக்கொண்டிருந்த போது,நல்லா எழுதுகிறார்கள்
என சிலரை குறுப்பிட்டான்.நீங்களும் இருந்தீர்கள் அதில்.
இங்கு வரும்போது,நீங்கள் சிலரை சொன்னீர்கள்.
யாத்ரா,நந்தா,முத்துவேல்,முன்பே அறிமுக படுத்தி கொண்டேன்.
மதன்,லக்ஷ்மி,நேயமுகில்,இனி தேடுவேன்.அறிமுகத்திற்கு அன்பு நிறைய!

நேசமித்ரன் said...

உங்களின்
வாசிக்கும் பட்டியலில் என் பெயர் இருப்பதைத் தவிர வேறென்ன விருது இருக்க முடியும் எனக்கு .எரித்த டைரிகளை எடுத்து வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது .நிறைய சந்தோசம் கொஞ்சம் பயமும் கூடி வருகிறது
மிக்க நன்றி அய்யனார் .மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் கொடுத்திருக்கின்றன உங்கள் சொற்கள் .மதன் தவிர மாற்ற யாவரும் அறிமுகங்கள் ...மனதுக்கு அணுக்கமானவர்கள் வாசித்த பிறகு மதனும் ....!
மிக்க நன்றி.!

வால்பையன் said...

எல்லோரும் உங்களை மாதிரி தான் போல!

மெதுவா நிதானமா படிக்கனும்!
புரியிர வரைக்கும்
(என்னைய சொன்னேன்)

Ayyanar Viswanath said...

நன்றி யாத்ரா

ந்ன்றி சுல்தான்

நன்றி தமிழன்

மாநக்கல் சிபின்னு சும்மாவா சொல்ராங்க :)

நன்றி மாதவராஜ்

இளங்கோ கிருஷ்ணன்,சரவணக்குமார்
மிக்க நன்றி

Ayyanar Viswanath said...

முத்துவேல்
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சிக்கலை புரிந்து கொள்ள முடிகிறது.ஆனாலும் இது ஒரு சிறு பகிர்வு மட்டுமே என்பதை புரிந்து கொண்டதிற்கு நன்றி..

பகிர்வினுக்கு நன்றி ராஜாராம்

நேசமித்ரன் மிக்க நன்றி

ஆமாம் வால் :)

கார்த்திகா said...

என் தளம் குறித்த பகிர்தலுக்கு நன்றி. :)

selventhiran said...

எழவெடுப்பு எனும் பதம் பிடித்திருந்தது. அய்யனார் சாய்ஸ் அனைத்தும் அருமை.

Featured Post

test

 test