Friday, February 29, 2008

கூடு தப்பிப்போய் பைத்தியமாதல்


மழைக்காலங்களின் மேல் எப்போதுமொரு காதலிருக்கிறது.மேகங்கள் சூழத் துவங்கும் பகல்பொழுதொன்றில் உள்ளிருந்து ஏதோ ஒன்று விழித்துக்கொள்ளும்.செய்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் புறந்தள்ளி கற்பனைகளில் மூழ்கத் துவங்குவேன்.மிகச்சரியாய் என் பால்யங்களின் தடம் கண்முன்விரியும்.பதிமூன்று வயது வரை நானொரு மலைக்கிராமத்தில் வசித்து வந்தேன் மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மூங்கில் தோப்புகள் அடர்வாய் செழித்து வளர்ந்திருந்த பகுதியை ஒட்டி எங்களின் குடிசை இருந்தது.விடியல்களில் பனி மூங்கிலின் இலை மீது படிந்திருக்கும். என் பெயர் செதுக்கியிருக்கும் மரமொன்றின் அடியில்தான் நான் சிறுநீர் கழிப்பேன். உடல் சிலிர்த்துக் குலுங்கி வெளிப்படும் சூடான சிறுநீர் எத்தனைக் கிளர்ச்சி!மெல்ல மரத்தை உலுக்கும்போது சிதறுண்ட பனித்துளிகள் என் தலைக்கேசம் தொடும்.மீண்டுமொருமுறை உடல் சிலிர்த்துப் போகும்.மலையின் மீது கவிழ்ந்து தூங்கும் மேகக் கூட்டங்களை கல்லெறிந்து எழுப்புவேன்.அப்போதிருந்த மனநிலையில் மேகங்களுக்கு வலிக்குமா? என்பது பற்றிய பிரக்ஞை எனக்கு இல்லாதிருந்தது.எத்தனை முறை கல்லெறிந்தாலும் மேகங்கள் ஒருபோதும் கோபித்துக் கொண்டதில்லை.மெல்ல தலை எழுப்பிப் பார்த்து மரங்களின் வழி இறங்கத் துவங்கும்.பின்பு அக்கூட்டங்களோடு சேர்ந்து விளையாடப் போவேன்.அருவிகளில் குதித்து விளையாடுவதுதான் எனக்குப் பிடித்தமான விளையாட்டாக இருந்தது.

அருவி மிகப் பெரிய வடிவினள்.மலையின் எந்தச் சரிவிலிருந்து வருகிறாள் என்பது எவருக்கும் புலப்படாததாய் இருந்து வந்தது. அவளது விரிந்த உடலின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் வழிந்து கொண்டிருந்து நீர். அருவி மிக மோசமானவள். சிறுவர்களைக் கண்டால் அவளுக்குப் பிடிக்காது.நான் மட்டும் எப்படியோ அவளின் அன்பைப் பெற்றிருந்தேன். என்னை மட்டும் அவளது அந்தரங்கப் பிரதேசங்களுக்கு கூட்டிப் போவாள்.மேகக்கூட்டங்கள் தொலைவிலிருந்தபடியே அவளின் பிரம்மாண்டத்தில் மனம் பிறழ்ந்து தன்னை அவளுக்குள் மூழ்கடித்துக் கொள்ளும்.அருவி ஒரு தாய், அருவி ஒரு காதலி,அருவி ஒரு காமுகி,அருவி ஒரு சகோதரி,அருவி ஒரு பெண்,அருவி ஒரு வேசி,அருவி எல்லாப் பெண்ணின் வடிவமுமாய் என்னை அரவணைப்பாள் நான் திக்குமுக்காடிப்போவேன். எங்கிருக்கிறேன் என்பது மறந்துபோவேன். மேகக்கூட்டங்கள் மலையின் சிரசில் கவிழ்ந்திருப்பது போல் நான் அருவியின் தனங்களில் முகம் புதைத்துத் தூங்கிப் போவேன்.முலைகளில் முகம் புதைப்பதென்பது உன்னதமானது.

பிறகெப்போதுமந்த அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைக்கவே இல்லை நகரத்தில் எவரையும் எனக்குப் பிடிக்கவில்லை.என்னையும் எவருக்காவது பிடித்துவிடுமோ என நடுங்கியபடி நகரின் இருளான பிரதேசங்ககளில் என்னைப் புதைத்துக்கொள்கிறேன்.புதைந்து, பயந்து ,நடுங்கி, பதபதைத்து.....எனக்காக வைக்கப்பட்டிருந்த விஷம் தோய்ந்த பாலை வேறாதாயினும் பூனை அருந்தி இறந்துபோனாலும் நான் கலவரப்படத் துவங்குகிறேன் குற்ற உணர்வுகளை நிரப்பிக் கொள்வதில் எனக்கு நிகர் எவருமில்லை நானொரு குற்ற உணர்வின் பிறப்பிடம்.

ரெட்லேபிளோடு ஸ்மைரைன் ஆஃப் அடித்திருக்கிறார்களா? அது ஒரு நல்ல காம்பினேசன்.பியர் குடித்து முடித்தவுடன் டகீலா அடித்துப் பாருங்கள் அதும் கருப்பு தேசத்துப் பெண் தன் பிரத்யேக வாசனைகளோடும் பருத்த ஆகிருதியோடும் உங்கள் உள்ளங்கையினை குவிக்கச் செய்து அதில் உப்பைத் தூவுவாள் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே கல்ஃபில் அடித்து விட்டு உப்பை நாக்கில் தடவிக் கொள்வதே. அந்த நேரத்தில் பக்கத்திலிருப்பவன் அவளை சகிலா என்றாலும் நல்லெண்ணெய் சித்ரா என்றாலும் நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். மறுத்தால் அஃதொரு நீளமான விவாதத்திற்கு உங்களை இட்டுச் செல்லும்.குடிக்கும்போது விவாதங்களைத் தவிருங்கள். மாறாய் கண்ணில் படுபவர்களை நேசிக்கத் துவங்குங்கள்.உடன் வந்த நண்பனை முத்தமிடுங்கள்.அல்லது பழைய காதலியை முத்தமிட்டட தருணத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்

மூளையழிவதும் நமது கூட்டுக்குள் திரும்புவதென்பதும் வெவ்வேறானதில்லை.

அதீத வன்முறையை நான் நேரில் பார்த்ததில்லை. எனக்குத் தெரிந்து என் கண்ணெதிரில் சில விபத்துக்களைப் பார்த்து சில இரவுகள் தூங்காமலிருந்திருக்கிறேன்.மற்றபடி உச்சகட்ட வன்முறை என்பது சில படங்களாக மட்டும் இருந்தது. A Clockwork Orange படம் பார்த்தேன் உச்சகட்ட வன்முறை இதுவாய்த்தான் இருக்கமுடியும்.sinsity யை என்னால் comical லாகத்தான் அணுக முடிந்தது.ஆனால் இது அப்படி இல்லை.கையில் ஒரு இரும்புத் தடிகொண்டு சாலையோரக் கிழவனை அடித்துக் கொள்கிறார்கள் தனியாய் ஒருவீட்டினுள் நுழைந்து..இல்லை..என்னால் எழுத முடியவில்லை..நீங்கள் தயவு செய்து இந்தப் படத்தைப் பார்க்காமல் இருப்பது உசிதம்..மீறிப்பார்த்தால் தயாராய் ஒரு பியர் புட்டியாவது கைவசம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.Maria Full of Grace யாராவது பார்த்தீர்களா?..என்னா அழகு அந்தப் பொண்ணு!..போதை மருந்துக் குப்பிகளை டாய்லட் பிள்ஷ் ல இருந்து எடுத்து பேஸ்ட் தடவி மீண்டும் முழுங்குவாளே... என்னக் கொடுமையான காட்சி அது.
தேவை/நிர்பந்தம்/சுயம்/fantasy/அலைவுறும் மூளை/ இன்னும் என்னென்ன எழவுக்களோ வாழ்வ குரூரமாக்கிடுதில்ல..எந்த சனியனுக்கும் தெரியாம எங்கவூட்டு வேப்பமரத்துக் கெளயில ஒளிஞ்சிருக்குதுய்யா உண்மையான வாழ்வு!...உங்க வூட்ல கீதான்னு நீதான் பார்த்துக்கனும்..எத சொன்னாலும் கேப்பியா..அடச்சீ ஏஞ்சிப் போ மூதேவி!..

Tuesday, February 26, 2008

காற்று நம்மை ஏந்திச் செல்லும் - "The wind will carry us"


Bād mā rā khāhad bord aka The Wind Will Carry Us (1999)
..........
You,
O green like the soul of the leaves,
Leave your lips to the stroke of mine,
And savor them like swell flavor of an old wine.

If we forget
The wind will carry us away,
The wind will carry us away.
- Forough Farokhza

சூழ்ந்த மலைவெளிகளுக்கு நடுவில் விரிந்த வயல்வெளி.. மிகப் பரந்த வயல்வெளி ... அங்கங்கே மிகப் பிரம்மாண்டமான ஒற்றை மரங்கள்.. சிலது தனித்து.. சிலது அருகருகே.. முன்பெப்போதும் கற்பனை செய்துபார்த்திராத ஒரு வினோதப் பிரதேசம். ஒரு வெள்ளைநிறக் கிராமம் அல்லது வெளுத்த மண்ணின் நிறம் கொண்ட வீடுகள் சூழ்ந்த ஒரு இடம். உயரமான இடத்தில் கட்டப்பட்ட மண்வீடுகள்.வளைந்து, குறுகி, நீண்டு, மிக வினோதமான வடிவு கொண்ட வீடுகள்.நாகரீகத்தின் வலிவான கைகள் நசுக்கியிராத மிக இயல்பான மனிதர்கள் வாழும் ஒரு இடம்.ஒரு அற்புத, வினோத, தொடர்பிலில்லாத, தூரப்பிரதேசம் ஒன்று கண்முன் விரிகிறது. கதாபாத்திரங்கள் மனிதர்களையெல்லாம் விடுவித்து இந்தப் பிரதேசத்தின் அமைதியை, இந்தக் காற்றின் சுகந்தத்தை, இந்த இயற்கையின் எழிலை மொத்தமாய் இந்தச் சிறிய ஒளிப்படக்கருவியினுள் பிடித்துவிட பேராவல் கொண்ட ஒரு அற்புத ஒளிப்பதிவாளனின் தாகத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

சலிப்பான, நீளமான, விறுவிறுப்பில்லாத, திருப்பங்களில்லாத, காதலோ, கதாநாயகியோ, அழுகையோ, சோகமோ, மென்மையோ, உட்கார்ந்து பார்க்க எதுவுமே இல்லாத, பார்வையாளனை குழம்பவோ, குழப்பவோ, நெகிழவோ, எரிச்சலடையவோ வைக்கத் துணியாத ஒரு திரைப்படம்.நூறு வயதிற்கு மேல வாழ்ந்துவரும் மூதாட்டி ஒருத்தியின் மரணத்தைப் பதிவிக்க மூவர் கொண்ட பத்திரிக்கையாளர் / மீடியா பொறியாளர் குழு ஒன்று நகரத்திலிருந்து (tehran) 450 மைல் தள்ளி இருக்கும் மேற்சொன்ன கிராமத்திற்கு வந்தடைகிறார்கள்.இந்த மூவரில் ஒருவர் மட்டுமே திரையில் வருகிறார் மற்ற இருவரும் குரல்களாகவும் தொலைவில் அசையும் / நகரும் உருவங்களாகவும் மட்டுமே படம் முழுக்க வருகிறார்கள் (திரைப்படம் இயங்கும் தளத்திற்கு பெரிதாய் தேவைப்படாத எந்த ஒரு காட்சியும் தேவையில்லாத ஒன்று என்பதின் நிமித்தமாய் இந்த முகங்கள் காண்பிக்கப்படவில்லையோ?)


குர்திஷ் இன மக்கள் வசிக்கும் கிராமத்தின் அத்தனை முகங்களையும் படம் பிடித்திருக்கிறார்கள். சிறுவர் மற்றும் வயதானோர் தவிர்த்து அனைவரும் கடுமையாய் உழைக்கிறார்கள்.நாள் முழுக்க ஏதாவது வேலை செய்தபடியிருக்கிறார்கள்.ஆண்,பெண் வேற்றுமைகள், மதம், கட்டுப்பாடுகள், அறியாமை, எல்லாரிடத்தும் பொதுவாய் இருக்கும் அன்பு என எல்லாவற்றையும் காட்சிகளோடு சேர்த்தபடி மெல்ல நகர்கிறது படம்.படத்தின் பிரதான Engineer கதாபாத்திரம் யாருடனாவது எப்போதும் உரையாடியபடி இருக்கிறான். நகரத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு விழுந்தடித்துக் கொண்டு உயரமான இடத்திற்கு செல்கிறான். இந்த வேலைக்கு அனுப்பியவருடன் உரையாடுகிறான்.இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இறந்துபோகாத மூதாட்டியினால் உடன் வந்தவரும் இவ்வேலையை பணித்தவரும் வெறுப்படைகிறார்கள்.

இவன் ஒரு சிறுவனிடம் தொடர்ச்சியாய் உரையாடியபடி இருக்கிறான்.இவன் தொலைபேசும் மலைக்குன்றில் கிணறு தோண்டுபவர், அவரின் மனைவி, எதிர் வீட்டுப்பெண் ,தேநீர் கடை பெண், எதுவுமே பேசாத ஒரு முதியவர், ஒருமுறை கூட திரையில் வராத படத்தின் மையக்கருவான மூதாட்டி,அய்ந்து நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் சுவாரஸ்யமான மருத்துவர், அத்தோடு கிணறு தோண்டுபவரின் மகள் என இன்னும் ஏகப்பட்ட மனிதர்கள் உருவமாய் குரலாய் திரையில் வருகிறார்கள்.சலாமலேக்கும்! மற்றும் குதாஃபஸ்சும் எப்போதும் பரிமாரிய வண்ணம் நகரும் மிக மெதுவான திரைக்கதை.ஒருநாள் அந்த மூதாட்டி இறந்துபோகிறாள் கும்பலாக பெண்கள் கடந்து போவதை தன்னுடைய புகைப்படக்கருவியினால் மிக விரைவாக படமெடுப்பதோடு திரைப்படம் முடிகிறது.

இந்தத் திரைப்படத்தை இயக்கி இருக்கும் Abbas Kiarostami ஈரானின் மிக முக்கியமான இயக்குனர். முப்பத்தி இரண்டு வயதில் சாலை விபத்தொன்றில் இறந்துபோன ஈரானிய பெண் கவிஞரான Forough Farrokhzad ன் கவிதைகளும் உமர்கய்யாமின் கவிதைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன இவை படத்தின் கவித்துவத் தன்மைக்கு பெரிதும் உதவுகின்றன.உலகமயமாக்கலின் குறியீடாக Engineer கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்ளலாம் எப்போதுமே இரண்டு உலகங்களும் சேரமுடியாது என்பதை வன்மையாய் சொல்லியிருக்கும் படமாகவும் இப்படத்தை அணுகலாம்.ஆரம்பத்தில் இக்குழுவினரை அன்போடு வரவேற்று வழிகாட்டியாய் செயல்படும் சிறுவனை உண்மை பேசினான் என்பதற்காக Engineer கடிந்துகொள்கிறான்.அதற்குப் பிறகு எத்தனை வருந்திக் கூப்பிட்டும் அந்தச் சிறுவன் அவனிடம் போக மறுத்துவிடுகிறான்.

வழக்கம்போல இந்தத் திரைப்படமும் ஏகப்பட்ட விருதுகளை குவித்திருக்கிறது.

Monday, February 25, 2008

தொலைந்துபோன குழந்தைகளின் / பதின்மர்களின் உலகம்



Pedar aka The Father (1996)

சிறுவர்களை மய்யமாக கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் தேர்ந்தவரான மஜித் மஜித்தின் இன்னொரு படம் தான் இது.ஈரான் போன்ற நாடுகளிலிருந்து தேர்ந்த திரைப்படங்கள் சாத்தியமாகும்போது எல்லா பாதுகாப்பான வழிகளையும் கொண்டிருக்கும் நம் சூழலின் மீதும், global வரவேற்பு இல்லாததால் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என சப்பை கட்டிக் கொண்டிருக்கும் நம்மவரின் கலைத்தாகத்தின் மீதும் படியும் கசப்புகளும் வெறுப்பும் இந்தப் பின்னிரவிலும் காறித் துப்ப வைக்கிறது.அய்ரோப்பியத் திரைப்படங்களைப் பார்க்கும்போது ஒப்பீட்டு புத்தி உள்நுழைவதில்லையென்றாலும் ஈரானிய நாடுகளிலிருந்து தொடர்ச்சியாய் வந்துகொண்டிருக்கும் வீச்சு மிகுந்த கலைப்படைப்புகள் என் மொழியின் / கலையின் மீதான என் நம்பகத் தன்மைகளைப் புறந்தள்ளி குற்ற உணர்வுகளை அழுத்தமாய் பதிவித்துப் போகிறது.

தொலைந்துபோன குழந்தைகளின் உலகம்தான் மஜித் மஜித் வசிக்குமிடமாக இருக்கிறதோ என்னமோ!.சிறார்கள் தொலைத்துவிட்ட உலகத்தை இழந்துபோன, அவர்களுக்கு மட்டுமே உரித்தான இயல்புகளை இன்னொரு சிறுவனின் மனோபாவங்களோடு உள்வாங்கிப் பதிவிக்கிறார். இழந்தவைகளின் மீது எப்போதும் படிந்திருக்கும் குருதியின் வாடை தாங்கமுடியாததாய் இருக்கிறது.Children of heaven னின் கடைசிக் காட்சி ஏற்படுத்திய தாக்கத்தினோடு ஒப்பிடுகையில் Father ன் கடைசிக் காட்சியின் தாக்கம் சற்றுக் குறைவுதான் என்றாலும் இரண்டுமே நிச்சயம் வலிகளைக் கடத்துபவைதான். நீரினடியில் துழாவும் விரல்கள எத்தனை அழகான படிமம்/பார்வை இது!..நீ ..ரி..ன..டி....யி..ல் துழாவும் இரத்தம் தோய்ந்த கால்விரலகள்.....நெடிய பாலை அலைக்கழித்த சோர்வில் அபூர்வமாய் கிடைத்த நீரில் புதைந்திருக்கையில் விரல்களில் சிக்கும் தன் குடும்ப புகைப்படம்......மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கும் நீர்..நெடிய பாலையில் பளிங்கினைப் போல நீர்..நீர்..நீர்...எல்லாம் நீர்..


தந்தை பின்னாலமர்ந்தபடி தன் மகனுக்கு(Mehrollah) பைக் ஓட்டக் கற்றுத் தருவதாய் ஒரு காட்சி..அடுத்த காட்சியில் தந்தையின் உடலை மூடியிருக்கும் துணியில் இரத்தம் தோய்ந்திருக்கிறது.பைக் முறுக்கிக் கிடக்கிறது. இடித்த லாரி நின்றுகொண்டிருக்கிறது.லாரியை ஓட்டி வந்தவன் பிணத்தின் முன் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி உரத்த குரலில் அழுகிறான். சிராய்ப்புகளோடு அச்சிறுவன் ஓரமாய் அமர்ந்தபடி தேம்பிக் கொண்டிருக்கிறான்.இவ்வளவுதான் அந்த சிறுவனின் Flash back. இப்போது அவன் ஒரு நகரத்தில் அடிமை வேலைக்கு நிகரான ஒரு வேலையைச் செய்கிறான்.சொற்பமான தன் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறான்.திரும்பும் வழியில் வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் தன் நண்பன் மூலமாய் அவனின் அம்மா உள்ளூர் போலிஸ்காரனொருவனை திருமணம் செய்துகொண்டதாய் கேள்விப்பட்டு ஆத்திரமடைகிறான்.அவளைப் பார்ப்பதைத் தவிர்க்கிறான்.தன் பழைய வீட்டைத் திருத்தி தனியாய் வசிக்கத் துவங்குகிறான்..அந்தப் போலிஸ்காரனை பழிவாங்கத் துடிக்கிறான்.இரவில் அந்த வீட்டின் செடிகளை துவம்சம் செய்கிறான் சன்னலில் கல்லெறிகிறான். ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவனை வீட்டிற்குத் தூக்கி வந்து கவனித்துக் கொள்கிறாள் அவனின் தாய்.உடல் சரியான இரவொன்றில் தாயைத் தங்கைகளை தன்னிடமிருந்து பிரித்த அக்காவலதிகாரியை அவரின் துப்பாக்கி கொண்டே கொல்ல நினைக்கிறான்.பின் முடியாததால் அவரின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, நண்பனைக் கூட்டிக்கொண்டுத் தான் வேலை செய்யும் நகரத்திற்கு அந்த இரவில் ஓடிப்போகிறான்.

எனக்கு குழந்தைகளென்றால் மிகவும் உயிர்..ஆனால் எனக்கு அப்பாக்கியம் இல்லை.. என் மனைவி என்னை விட்டுப் போய்விட்டாள்.. எவருமே இல்லாத என் வாழ்க்கையில் நான்கு குழந்தைகளோடு நீ கிடைத்தது கடவுளின் கருணை.. என மகிழ்ந்து அச்சிறுவனின் தாயை மணந்துகொள்கிறார் ஒரு காவலதிகாரி.தன் தாயை ஏமாற்றி / பயமுறுத்தி திருமணம் செய்து கொண்டதாய் நினைக்கும் அச்சிறுவனுக்கும் அன்பான அக்காவலதிகாரிக்கும் சபிக்கப்பட்ட இயற்கையின் சூழலில் இடையே நிகழும் போராட்டம்தான் இத்திரைப்படம்.Mehrollah வின் நண்பனாக வரும் Latif மிக அழகான கதாபாத்திரம்.

வாழ்வை அதன் இயல்புகளோடு பதிவிப்பதுதான் சிறந்த திரைப்படமாக இருக்க முடியும்.பாலையின் தகிப்புகளை,இயலாமைகளை, அன்பை, நேசிப்பை, வன்முறையை எவ்வித பிரச்சாரத் தன்மைகளுமில்லாது மிக இயல்பாய் பதிவிப்பதும், நீளமான வசனங்களை விடுத்து காட்சிகளின் மூலமாகவே நம்மைக் கட்டிப்போட வைப்பதுமே மஜித் மஜித்தின் அடையாளமாக இருக்கிறது மேலதிகமாய் இவரின் திரைப்படங்கள் ஓரிரண்டு நாளைக்கு நம்மை அதிலிருந்து மீளவிடாமலும் செய்துவிடுகின்றன.

Saturday, February 16, 2008

குற்றவுணர்விலிருந்து விடுபட(ல்)



ஒரு பெண்ணை முத்தமிடுமுன்
சற்று யோசியுங்கள்
பின்னெப்போதாவது அவை
மீளவே முடியாத
பின்னிரவுக் குற்றவுணர்வுகளின்
ஊற்றுக்கண்ணாகி விடலாம்...

அழுத்தம் கொண்டு மூடப்பட்டிருக்கும்
புட்டியினைத் திறக்கும் முன்பும் யோசியுங்கள்
அவை கருப்புநிற தேவதைகளை
வெளியேற்றும் சக்தி கொண்டவை..

ஒரு விழியுயர்த்தல்
ஒரு புன்னகை
அன்பின் நெகிழ்ந்த கைப்பற்றல்
இவைகளைக் கூடுமானவரைத் தவிர்க்கப்பாருங்கள்
உங்களின் அடையாளங்களை இல்லாமலாக்கிவிடும்
அபாயத் தன்மை கொண்டவை

நீங்கள் எதையாவது எழுதிக்கொண்டிருந்தால்
எதிலாவது தீவிரமாய் ஈடுபட்டுக்கொண்டிருந்தால்
உடனடியாக அவைகளை ஏறகட்டுங்கள்
பாதுகாப்பான உலகம் முகமூடிகளுக்குப் பின்னாலும்
மெளனங்களுக்குப் பின்னாலும் உயிர்த்திருக்கிறது

பயமற்ற
கழிவிரக்கமற்ற
வலிகளற்ற
வேதனைகளற்ற
குழப்பங்களற்ற
குற்றவுணர்வுகளற்ற இருப்பு
மெதுவாய் நகரும் மேகங்களுக்குள்ளும்
வேப்பமரக் கிளைகளிடையேயும்
எவருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டுள்ளது..

பிறழ்ந்த குறிப்புகள் அல்லது சொய பொலம்பல்



திடீர்னு எழுத ஒண்ணுமே தோணல...செம ப்ளாங்க..எல்லாத்து மேலவும் வெறுப்பு... என்ன எழுதி என்ன ஆக?..இத்தன நாள் இங்க கிறுக்கிட்டிருந்ததலாம் எத்தன அபத்தம்?..
செம கடுப்பா போச்சு..
---------------
இவரு ஒரு படம் பாப்பாராம் ..அத பெரிசா எழுதி கிழிப்பாராம்..நெறய பேருக்க தெரியாத படத்த எழுதினா இவரு பெரிய அறிவு சீவின்னு ஒலகம் நம்புமாம்..என்ன கொடும சார்?..முற்றுப் புள்ளியே வைக்காம எப்படிடா உன்னால எழுத முடியுது..??படிக்கிறவன காண்டாக்கனும்னு எழுதறியா?.. இல்ல நெசமாலுமே இப்படி எழுதினாத்தான் நீ பெரிய புடுங்கியா??..என்ன கவித அதுலாம்..? ஒரு மண்ணும் புரியல... எழுதற நீயாச்சும் புரிஞ்சிதான் எழுதிறுயா?...புனைவு கினைவு ன்னு என்னடா எழவு? என்ன பிரச்சின ஒனக்கு???..எலக்கியம்னா இப்படித்தானா?..இன்னாதான்யா சொல்ல வர்ரர நீ??
-------------
மக்களே இப்பலாம் செம கோவம் வருது..இன்னா பன்றதுன்னே தெரியல..மெய்னா இந்த ரொம்ப நல்லவன் மாதிரியே நடிக்கிறானுங்க பார் அந்த தாய்வலிங்களலாம் செருப்பால அடிக்கனும்னு தோணுது..இந்த கவித எழுதியே கொல்றானுங்கப்பா !!.. நீஈஈஈஈஈஈஈஈஈஈஈளமா கவித எழுதி பொண்ணு கண்ணு நெலா விழி மழ மசிரு ன்னு அய்யோ தாங்கல ..என் மக்களே எல்லா எழவுக்கும் பின்னால காமம்தான்யா இருக்கு..ஒடம்பு தான் மேட்டர் ..புரியுதா..புரிதா..புரியுதா..அதுல தப்பு எதுவுமே இல்ல மக்கா..நேரடியா எல்லாத்தையும் அணுக கத்துகங்கயா..நெஜத்த நெஜமா அணுகுங்கயா..எதுக்கு பொய் எதுக்கு பூச்சு..நீ ஒருபொண்ணு..நான் ஒரு பையன் உன்ன எனக்கு பிடிச்சிருக்கா?என்ன ஒனக்கு புடிச்சிருக்கா..முடிஞ்சிபோச்சி..எதுக்குடா கவித?? அய்யோஓஓஓஒ தாங்கல.....இதுலாங்கூட ஒரு பெரிய மேட்டரே இல்ல மக்கா..எங்க பாத்தாலும் அதிகாரத்தோட குவியல்..மனுசன மனுசனே அடக்கி ஆளனும்னு நெனக்கிறான்..தன் ஜாதி..தன் மதம்..தன் நம்பிக்க..தாந்தான் ஒசந்தவன் தான் தான் சொல்றதுதான் எல்லாம் கேட்கனும்..தாந்தான் புத்திசாலி.......போங்கடான்கோஓஓஓஓ
--------
கடேசியா எழுதுன பட விமர்சனத்துக்கு பெறகு முப்பது படத்துக்குமேல பார்க்க சந்தர்ப்பம் கெடச்சது..எல்லாமே செம படம்...ஒண்ணொண்ணும் ஒவ்வொரு அனுபவத்த தருது..ஆனா எத பத்தியுமே எழுத முடியல..கவித போட்டு ரொம்ப நாளாச்சி.. கத எதும் எழூத முடியல.. புனைவு கினைவுன்னு எதயாச்சிம் எழுதி மெரட்டலாம்னு பாத்தா அதுவும் முடியல... எதையாச்சிம் எழுதியே ஆகனும்ங்கிற நிர்பந்தம் மனசுக்குள்ள எப்படியோ பூந்துடுச்சி..எவ்ளோ அபத்தம் மக்கா இது..எழுத்துங்கிறது என்னா?..தன்னிலிருந்து மிகுந்து வரனும்..தன்னிலிருந்து.. தன் புரிதல்ல்ல இருந்து நெசத்தோட வரணும் அதான் எழுத்து..எதையாச்சிம் எழுதியே தீரனுங்கிறதவிட கேவலமானது எதுவுமே இல்ல...

சரி படத்துக்கு வருவோம் i could read the sky ன்னு ஒரு படம் பார்த்தேன்..என்னா படம்..யப்பா ஒண்ணுமே முடியல.. ஒரே ஒரு கேரக்டர் கேமிரா முன்னாடி உட்கார்ந்து படம் முழுக்க பேசுது.. அதனோட நினைவுகள நினைவுகளாவே படம் புடிச்சிருக்காங்க..அப்படியே மேகம் மாதிரி நினைவு..அதனோட ட்ராவல்..அதனோட அதனோட அழகு.. யப்பா!! செம படம்...கண்ணுக்குள்ளயிருந்து காட்சி... நெனவுக்குள்ள இருந்து நெனவு..சினிமோட்டாகிராபிங்கிறது ஒரு செயலா இல்லாம இயல்பா இருந்தா எப்படி இருக்கும் ..இப்ப நீங்க பாக்குறீங்க.. உங்க பார்வைல இருந்து எத்தன காட்சி கண்ணுக்குள்ள விழுது.. அத்தனையும் ஒரே ஸ்ட்ரிம்லைனா இல்லாம அதன் போக்கிலே ஒரு படம் பண்றதுலாம் எவ்ளோ பெரிய விசயம்..இத திரைல சாத்தியமாக்கியிருக்காங்க..முடிஞ்சா பாருங்க..tom tykwer னு ஒரு ஜெர்மன் டைரக்டர் கேள்விபட்டிருக்கிங்களா?..செம ஆள்..இவரோட ரெண்டு படம் பார்த்தேன் perfume அப்புறம் run lola run ரெண்டுமே மெரள வச்சது..இந்த perfume படம் பத்தி சன்னாசி ரொம்ப நாளைக்கு முன்னால எழுதியிருப்ப்பார்..இன்னொரு விசயம் மக்கா நான் இங்க எழுதுற எல்லா எழவையும் சன்னாசியோ, மதியோ, பொடிச்சியோ, இளங்கோவோ இன்னும் யார்யாரோ அவங்கவங்க மொழில எழுதிட்டாங்க..சும்மா எழுதினதயே எழுதுறோமேன்னு ஒரு வெறுப்பு வந்தாலும் எனக்கு தெரிஞ்சததான நான் எழுத முடியும்... போர்னோகிராபி அப்படிங்கிரதலாம் என்னபொருத்தவரை குண்டான பொம்பளங்க ப்ரா ஊக்க அவிழ்க்கிறதோட முடிஞ்சிபோச்சி அதுக்கும்மேல த ரியல் போர்னோ ..த ஒரிஜினல் போர்னோ அப்படிங்கிறதயெல்லாம் நுட்பமா சொன்னவர் pier paolo pasolini தான் இவரோட decemaron , edipo re , mammo roma படங்களில இவர் சொல்ல வர்ரதுலாம் கட்டுப்பாடற்ற காமம்தான்..அது தர்ர இன்பம், கிளர்வு, எல்லை மீறல், எல்லாத்தயும் தூரப்போடுறதூலாம் இன்னொரு சன்னல் திறப்பு..ஸ்டேன்லி குப்ரிக்க எத்தன பேருக்கு பிடிக்கும்னு தெரில அவரோட EYES WIDE SHUT ல வர்ர சில காட்சிகள் மெரள வச்சது..the shining ம் எனக்கு பிடிச்ச படம்..ஆனா full metal jacket படத்த செம்ம மொக்க படமாக்கியிருப்ப்பார்...எல்லாத்தையும் விட எனக்கு பிடிச்சது spartacus படம்தான் அந்த படத்தோட டைலாக்க நானும் என் அண்ணனும் நிறுத்தி நிறுத்தி கேட்டதுலாம் நெனவுக்கு வருது...felini யும் எனக்கு பிடிச்ச ஆள்தான் இவர் edgar allan poe வோட கதையொண்ண படமாக்கியிருப்பார்..tobby dammit னு செம படம்..இந்தாள நியோரியலிஸ்ட்னு சொல்றாங்களா என்ன? என்ன பொறுத்த வர இவர் ஒரு சர்ரியலிஸ்ட்..என்னோட அல்டீமேட் டைரக்டர்னா அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கி தான் ரஷ்யன் ஆள் ..இவரோட படம்ம்லாம் எனக்கு பயத்தையும் கிறுக்கையும் ஒண்ணா தந்தது..குறிப்பா nostalghia அய்யோ நொந்துட்டேன்..இவரோட படம்.. அந்த காட்சிகள் எல்லாமே ஓவியம் போல இருக்கும்..ஒர்ரே காட்சி 10 நிமிசமா அலையாம இருக்கும்..உங்களில யார்லாம் பொறுமசாலியோ அவங்க இவர் படத்த பார்க்கிறது நல்லது..solaris மாதிரிலாம் ஒரு படம் எவனாலயாவது எடுக்க முடியுமான்னு தெரில...
-----------
அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்
--------
நாகார்சுனன் வலையெழுத வந்திருப்பது மகிழ்ச்சிய தருது..இன்னமும் அங்கங்க இருக்க செறிவான ஆளுங்கலாம் வலையெழுதினா நல்லாருக்கும்..வலைங்கிறது என்ன பொருத்தவர ஒரு அட்டகாசமான ஊடகம்..பன்முகத் தன்மைக்கான கிளைத்தல்கள் அதிகமா இருக்கும் ஒரே ஊடகம் இதான்..என்ன பொருத்தவர வலை பின்நவீனத்தோட குறியீட்டு வடிவம்..இந்த பின்நவீனம் மக்கள பிடிச்சி எப்படிலாம் ஆட்டுது பாருங்க..நெனச்சாவே சிரிப்பு சிரிப்பா வருது..எந்த மசிராண்டியும் முழுசா புரிஞ்சிக்கிறதில்ல..ஒருத்தனுக்கு இஃதொரு ஆபாச அருவெருப்பான வடிவம்.. இன்னொருத்தனுக்கு தன் சொந்த நமைச்சல்களை அடுத்தவன திட்டி தீர்த்துக்குற வடிவம்..இன்னொருத்தனுக்கு பைத்தியம் பிடிக்கிறதுக்கான சாக்கு..இன்னொருத்தனுக்கு விதண்டாவாதம்..அப்ப எதுதாங்க ஒரிஜினல்..அட ஒரிஜினல் னு எதுவுமே கெடையாதுப்பா..அப்ப இது எது?..ஏன் எல்லாத்தையும் ஒண்ணுக்குள்ள அடக்கி வைக்கப் பார்க்குற?..கட்டுக்குள் அடங்காததுன்னு வேணும்னா வச்சிக்கோ!!...
சரி அதெல்லாம் வுடு உனுக்கு எந்தமாதிரி?....எனக்கிது நல்லமாதிரி ..அவ்ளோதான்...
-------
புதுப்பேட்டை செம படம் இல்ல..தமிழ்ல வந்த சொற்பமான நல்ல படங்களில ஒண்ணு..மொத முற பார்க்கும்போது எனக்கிந்த படம் பிடிக்கல.. ரெண்டாவது முற ரொம்ப பிடிச்சது... மூணாவது, நாலாவது, அஞ்சாவதுன்னு நேத்தி வரைக்குமா பத்து முறைக்கு மேல பாத்தும் சலிக்காத படம் இது..ஜமாலன் ஹேராம் க்கு எழுதினா மாதிரி இந்த படத்துக்கு மெதுவா எழுதனும்..அப்படியே city of god பத்தியும்..இந்த படத்தையும் நான் நெறய முற பாத்தேன்..உண்மை,வன்முறை, காமம், அரசியல், வெற்றி,போதை, போராட்டம் இதான் ஒலகத்திலேயே சந்தோசமான விசயங்கள்..
-------

Monday, February 11, 2008

காதல் நிமித்தமான கதைகளும் உரையாடல்களும்



0
அழகான கடற்கரை நகரமொன்றின் மிக அழகான சாயந்திரமொன்றில்தான் அது நிகழ்ந்தது. கிளைகள் விரித்து நெடிதுயர்ந்து வளர்ந்த விருட்சமொன்றின் பக்க வாட்டிலிருந்த வெளிச்சம் மெதுவாய் குறைந்துகொண்டு வந்தபடியிருந்தது. இருளென்பது மிகவும் குறைந்த ஒளி என்கிற பாரதியின் வசனக் கவிதையை சொல்லிக்கொண்டிருந்தேன்.அவளின் முகத்திலிருந்து மறைந்த வெளிச்சம் கண்களினுள் புகுந்தது.எப்போதும் பயத்தை மட்டுமே வெளிக்காட்டிய அக்கண்களிலிருந்து எல்லையில்லாததொன்று நீரின் வடிவம் பெறத் துவங்கியது.வெடித்துச் சிதறிய விம்மல்களோடு அவள் என் மார்பின் வசம் புகுந்தபடி திக்கித் திணறி தன் நெடுங்காலக் காதலைச் சொன்னபோது பாறைகளுக்குள் மெதுவாய் அலையடித்துக் கொண்டிருந்த கடல் நீர் தன் எல்லைகளை விரிவுபடுத்தியது.நாங்கள் மிதக்கத் துவங்கினோம்.எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு சிட்டுக்குருவியும் இன்னொரு தேன்சிட்டும் தம் இறக்கைகளை எங்களுக்குத் தந்துவிட்டுப் போனது மிதந்து சலித்த பொழுதொன்றில் சிறகுகளை அணிந்துகொண்டு பறக்கத் துவங்கினோம்.

அவளை முத்தமிடும்போது மயிர்க்கால்களில் பூக்கள் முளைக்கத் துவங்கின.விரல்களைத் தீண்டும்போது இதயம் தன் வீணையின் நரம்புகளை சுண்டி விட்டது.அவள் தன் தோள்களிலும் உள்ளங்கையிலும் என் அம்மாவின் சாயல்களைத் திருடி வைத்திருந்தாள்.மிக நீண்ட காத்திருப்புகளுக்குப் பிறகுதான் அவளின் உதடுகள் எனக்குக் கிடைத்தது,இல்லை எடுத்துக் கொண்டேன் என்பதுதான் பொருத்தமாயிருக்கும்.உதடுகள் என் வசமான பின் அவள் தனது நம்பிக்கைகளை,அடையாளங்களை முற்றிலுமாய் இழந்துபோனாள். என் 'தான்' திருப்தி பெற்றது என் 'தான்' நிறைவடைந்தது. என் 'தான்' கடைசியில் காணாமல் போனது. நாங்கள் இன்னும் உயரப் பறக்கத் துவங்கினோம்.

ஒரு மலைப் பிரதேசத்திற்கு பனிக்கால விடியலில் சென்றடைந்தோம்.புகையெனப் பனி அவளின் கேசம் படிந்தது.குளித்து முடித்த சின்னஞ் சிறு பூனைக்குட்டியினைப் போல அவளின் உடல் நடுங்கிப் போனது. ஒரு தாய் பூனையின் அரவணைப்புகளோடு அவளை என்னில் பொதிந்து கொண்டேன்.என் மார்பில் நீள வாக்கில் கூர்மையான கத்தியினைக் கொண்டு கிழித்து உள்ளே தஞ்சமடைந்தாள். தான் எப்போதுமே பெற்றிராத கதகதப்பினை நான் தருவதாய் உள்ளிருந்து முனகியபடியிருந்தாள். பின்பொரு நந்தவனத்திற்குச் சென்றோம் பிரபஞ்சத்தின் புதிர்களை, முடிச்சுகளை அவள் தன் உள்ளாடை கொண்டு மறைத்து வைத்திருந்தாள்.ஆடைகளையும்,ரகசியங்களையும் ஒருமித்துத் தளர்த்தினோம். இயற்கையின் அதி அற்புத ரகசியங்களை நாங்கள் தட்டுத் தடுமாறியபடி கண்டறியத் துவங்கினோம். அஃதொரு கள்வெறியேறிய பைத்தியக்காரனின் சலம்பல்களையும் தேனுன்ட வண்ணத்துப் பூச்சியின் கிறக்கத்தினையும் ஒத்திருந்தது.புதிர்கள் விடுபட்ட பொழுதுகள் மிகுந்த மயக்கத்தையும் விடுவித்த பொழுதுகள் சலிப்பையும் தந்தன.

இறக்கைகளை கழற்றி எறிந்து விட்டு நடக்கத் துவங்கினோம்.பிறகு அவள் இன்னொருத்தனையும் நான் இன்னொருத்தியையுமாய் கல்யாணம் செய்துகொண்டோம்.

00
காத்திருத்தலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?..இந்த உலகத்தின் உன்னதமான செயல் அதைத் தவிர வேறெதுவுமில்லை என்பது என் திண்ணம்..என்னவளைப் பார்ப்பதற்கு எப்போதும் இரண்டு மணி நேரங்கள் முன்னால் வருவது எப்போதுமெ எனக்குப் பிடித்திருக்கிறது.அவள் என்னைப் பார்ப்பதற்காக மட்டுமே வருகிறாள். ஆம்! என்னைப் பார்ப்பதற்காக மட்டுமே...அவளிடம் மொத்தம் பதினெட்டு நிற சுடிதார்கள் இருக்கின்றன.. மூன்று நிறப் புடவைகள்.. ஓரே ஒரு முறை மட்டும் தாவணியில் பார்த்திருக்கிறேன்.. அதன் பிறகு அதை அவள் அணிவதில்லை...எனக்கும் அவளுக்கும் திருமணமான இரவில் அந்த ஆடையைத்தான் அணியச் சொல்லப் போகிறேன்...கொலுசுகளில் மூன்று விதம் அவளிடம் இருக்கிறது.. வெண்ணிறப் பாதங்களில் வெள்ளி நிறக் கொலுசுகள் எத்தனைக் கவிதை!! இல்லை...ஆம்! எத்தனை பேர் எத்தனையோ முறை சொல்லி சலித்துப் போனாலும் அவளின் பாதங்களுக்கு கொலுசுகள் அழகுதான்... இன்னமும் மல்லிகைப் பூக்கள், கண் மை, இரட்டைப் பின்னல் எனச் சொல்லிக் கொண்டு போக அவளிடம் ஏராளம் உண்டு.. ஆனால் அவற்றை எல்லாம் என்னால் அதிக நேரம் பார்க்க முடியாது. அவள் கண்களை எத்தனை நொடிகள் பார்த்திருப்பேன் என எனக்குத் தெரியாது.. இமைக்கும் நேரத்திற்கு கூடுதலாய் சில நொடிகள் இருக்கலாம் அவ்வளவுதான்.. ஒரு முறை என் அத்தனை வீரத்தையும் வரவைத்துக் கொண்டு நேரம் கேட்டேன் அவளிடம் ஒன்பது பதினைந்து என்றாள் என் கைக் கடிகாரம் எப்போதும் அந்த நேரத்தைத்தை தான் காட்டுகிறது ..

எனக்கு முன்னால் சில இலட்சம் ஆணகள் எப்படி காதலித்தார்களோ அதே சாயலில்தான் அவளைக் காதலித்தேன்.. எனக்கு எதெல்லாம் காதல் என சொல்லிக்கொடுக்கப்பட்டதோ அதே முறையில்தான் நானும் அதை அணுகினேன்...நான் அந்தப் பெண்ணின் மீது பைத்தியமானேன்...அவள் உயிர் வாழ்வதே எனக்காகத்தான் என நம்பத் துவங்கினேன்... உணர்வுகளைக் கடத்த அன்பினைப் பரிமாற வார்த்தைகள் அத்தனை முக்கியமில்லை என்பது என் துணிபு.நான் கண்களால் பேசத் துவங்கினேன்.. அவள் எனக்கு பதிலும் சொன்னாள்.. மிக நிறைவாய் இருக்கிறேன் நான்.இதுவரை அவளுக்காய் எழுதப்பட்ட கடிதங்கள் மொத்தம் இருநூற்றை தாண்டிவிட்டது கவிதைகள் கூட சிலதை எழுதியிருக்கிறேன்.ஒரு நாள் சொல்ல வேண்டும்.. என் காதலை, தவிப்பை, காத்திருத்தலை சொல்லிவிடுவேன்.. ஆனால் அதற்கு முன்னால் மொத்தமாய் காதலித்து விடுவதென தீர்மானித்திருக்கிறேன்.. ஒருவேளை அவள் என்னை மறுத்தாள் கொல்வதற்கு ஒரு கத்தியினையும் கால் சட்டைப் பையினுள் தயாராய் வைத்திருக்கிறேன்..அந்த அழகான வயிற்றில் சதக் சதக் எனக் கத்தியால் குத்துவது குரூரமானதுதான்.. என்றாலும் எனக்கு வேறுவழியில்லை..

ஏனெனில் நான் அவளைக் காதலிக்கிறேன்.

000
அவன் உரையாடல் வழி என்னிடம் வந்தடைந்த போது மிகவும் சோர்ந்திருந்தான்... களைத்திருந்தான்.. தொடர்ச்சியான ஏமாற்றங்களின் குருதி அவன் மொழியில் கலந்திருந்தது... இறக்கைகள் வெட்டப்பட்ட ஒரு பறவையினை நினைத்துக் கொண்டேன்...அவனுடைய பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. நல்ல குரல்.. கிறக்கமும் தவிப்புமாய் ..படக் என காதலை சொல்வது எரிச்சலானது (இதற்கு முன்பு ஒருத்தனை நடுரோட்டில் செருப்பால் அடித்தேன்)அவன் சொல்லவில்லை.. நானே சொன்னேன்.. அவன் உடனே ஒத்துக்கொள்ளாதது தவிப்பாய் இருந்தது.. வெட்கம் விட்ட பெண்மை வேறு இம்சித்தது.. இருப்பினும் அவனுக்கு அன்பென்றால் என்னவென்று புரிவித்து விடவேண்டும்.. நான் மிக அன்பானவள்.. மிக மிக அன்பானவள்.. என்னை மொத்தம் இருபத்தேழு பேர் காதலித்தார்கள்... என்னால் எல்லாருக்கும் தோழியாய் மட்டுமே இருக்க முடிந்தது.. ஏனெனத் தெரியவில்லை.. இவனைப் போன்ற ஒருத்தனுக்காய்த்தான் காத்திருந்தோனோ? என்னமோ..அவன் விலக விலக எனக்கு வெறியேறியது.. பைத்தியம் பிடித்தது..என்னை ஏன் அவனுக்கு பிடிக்காமல் போனது..என்ன குறை என்னிடம்?அவன் என்னை சுத்தமாய் புறக்கணித்தான்.. என்னைத் திரும்பிக் கூட பார்க்காமல் போன ஒரு சாயந்திரத்தில் மொத்தம் முப்பது மாத்திரைகளை முழுங்கி நடு வீட்டில் வாந்தியெடுத்தேன்...மருத்துவமனை பக்கம் கூட அவன் வரவில்லை.. குறைந்தபட்சம் ஒரு தொலைபேசி அழைப்பு கூட இல்லை..எனக்கு வெறுத்துப் போனது.. அவன் ஒரு கர்வி!.. திமிர் பிடிச்ச கம்மனாட்டி..ஒரு நாள் அவன் வீட்டிற்கு போய் அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினேன்.. என்னடா பிரச்சின என்கிட்டே?ன்னு அழுதேன்...

உன் முலை சின்னதா இருக்குன்னு சொல்லி இறுக்க கட்டிகிட்டான் ..அப்புறம் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டோம்..

காதலிப்போர்/படுவோர் களுக்கு காதலர் தின நல்வாழ்த்துக்கள்..எதுவுமில்லாதோருக்கு அன்பும் அனுதாபங்களும்

Tuesday, February 5, 2008

நீர்த்துளி சுமந்தலையும் மேகம் / சாத்தான்கள் வசிக்குமிடத்திற்கான முகவரியினைக் கொண்டவன்



0
இறுக்கமான என்னிலிருந்து கடைசிப் புன்னகையை எப்போதுதிர்த்தேன்?கடந்தும், நடந்தும், விரட்டியும், கூச்சலிட்டும் போகும் சிறார்களை எப்போதிலிருந்து சலனங்களில்லாது பார்க்கத் துவங்கினேன்?நீளமான வெள்ளை நிற இறக்கைகளைக் கொண்ட தூரதேசப் பறவைகளை ஏனிப்போதெல்லாம் நின்று கவனித்துப் பார்ப்பதில்லை? இந்தப் பனிக்குப் பிறகு தொடர்ச்சியாய் அவைகளை உன்னால் பார்க்கவும் இயலாது என்பது உனக்கு தெரியும்தானே?அட! இந்த காதல் கவிதைகளை ஏன் படித்துத் தொலைப்பதில்லை?நீ என்ன காதலைக் கடந்தவனா?காதலில்லாது,பெண்ணில்லாது இருந்துவிடமுடியுமா உன்னால்?

என்னக் கருமாந்திர பிரச்சினடா உனக்கு..???

0
அணைத்துக்கொள்ள எவளுமில்லாது போவதை விட நினைத்துக் கொள்ள எவளுமில்லாது போவதுதான் குரூரமானது.அவளவள்களை வலிந்து யோசிக்கையில் பின்னாலே வந்து வந்து படிகிறது அவளவள்களின் அன்பும், பயமும், பாதுகாப்பும், துரோகமும், இழைவும், குழைவும், சிரிப்பும், நாற்றமும், வாசமும், காதலும், கண்ணீரும் விலகி உதறித் திரும்பிப் படுக்கையில் பக்கத்திலிருந்தவன் அத்தனைத் தூக்கத்திலும் அசிங்கமாய் திட்டினான்.
0
பனிப்புகை மூடிய இருளகலாத விடியலில் மிக அபூர்வமாய் பூக்களை சூடிப்போகும் பெண்ணொருத்தி உன்னைக் கடந்திருக்கிறாள்... இதை விட அற்புதமான நிகழ்வு உன் வாழ்வில் வேறெதாவது ஏற்பட்டு விடப் போகிறாதா என்ன?
0
நீ அடிப்படையில ரொம்ப நல்லவன்டா!எது நல்லது எது கெட்டதுன்னுலாம் கேட்டு ரொம்ப கொடையாதே... நீ நல்லவன் அவ்ளோதான்..வலிந்து திணிக்காதடா! எதையும்.. எப்பவும்..பிடிச்ச மாதிரி இரு..என்னா தப்பு?....ங்கோத்தா நீ பெரிய பாடு! ன்னு எல்லாருக்கும் புரியனுமா?...கண்ண இறுக்க மூடிக்க மச்சான்..இதான் ஒலகம் ..இதான் வாழ்க்கை..யோசிக்காதடா..யோசிச்சா எல்லாமே தப்பு..இதோ பார்! இந்த ஒலகம் ..உன்ன சுத்தியிருக்க உலகம்..நீ நம்புற/அது நம்புற ஒலகம் யோசிக்குதா?..இந்த பறவய பார்..நதிய பார்..கடல பார்..மரத்த பார்..செடிய பார்...இன்னும் உன்ன சுத்தி இருக்க எல்லா எழவையும் பார்..எந்த மசிராவது சிந்தனைன்னு ஒண்ண வச்சிருக்கா?..ஒரு பெரிய உண்மைய சொல்றேன் கேட்டுக்கோ சிந்திக்காதவனாலதான் மட்டுந்தான் சந்தோசமா இருக்க முடியும்..அல்லது இந்த சந்தோசமான ஒலகம் மூளைய கழட்டி தூர போட்டவனுக்குதான்..

சரி இப்ப இன்னா பண்ணனும்?..

போய் பேரரசு படம் பார்!!
வைரமுத்து புக் படி!..
எவளுக்காவது பிட்டு போடு !!
சான்ஸ் கெடச்சா கப் புனு மேட்டர முடி..
உன்ன மாதிரி வயசு பசங்கலாம் தினவெடுத்த செட்டிலான பசங்கலாம் இதான் பன்றானுங்க..இல்லனா சீரியல் நடிகை..சான்ஸ் போன நடிகை....இல்ல பிலிப்பைன்காரிங்க,சீனாக்காரிங்க,,கொழுத்த கருப்பிங்க,,மல்லுங்க ,,காஸ்ட்லியான தமிழுங்க..சிரிலங்காங்க..மச்சான் யு ஆர் லிவிங்க் இன் ஹெவண்டா!!ஏன் புரியல உனக்கு..???
0
அந்த சிங்கள தேசத்து பெண்ணை புணர்ந்து முடித்த மறுநாள் காலை வாழ்க்கையே வெறுத்துப் போனது..எல்லாம் நன்றாகத்தான் இருந்தது..அவளது பெயரை தமிழில் மொழி பெயர்த்தால் சொர்க்கம் எனும் பொருள் வரும்..உண்மையிலேயே அவள் சொர்க்கம்தான்..பாப்லோ நெருடா எங்கேயோ சொல்லியிருப்பான் சிங்கள தேசத்து பெண்ணொருத்தியை புணர்ந்தது ஒரு சிலையைப் புணர்ந்த உணர்வைத் தந்தததென..அவன் ஒரு பாடு! ..அவன கன்னா பின்னான்னு திட்டத் தோணினாலும் ..ங்கோத்தா! வாழ்க்கைய அனுபவிச்சிருக்காண்டா! ன்னுதான் சொல்லத் தோணுது..அவனோட கவிதைகள் சிலதும் படிச்சி சிலாகித்தேன் என்றாலும் பாப்லோ நெருடா ஒரு நூற்றாண்டு துரோகம் எனும் பொடிச்சியின் கட்டுரை கண்முன் நிழலாடுவதை தவிர்க்க முடியவில்லை..சரி அந்த சிங்களப் பெண்ணுக்கு வருவோம்..அவளிடம் சிங்களத்து சின்ன குயிலே பாட்டு பாடி காண்பித்தேன்..ரொம்ப சிலாகிச்சா.. என்னோட குரல் நல்லாருக்குன்னா தொடர்ச்சியா ரெண்டு மூணு பாட்டு பாடினேன்..நடுநடுவில குடிச்சதால எத்தன பாட்டுன்னு தெரில...ஆறு இல்ல ஏழு பாட்டு இருக்கும்..உருகினா ..அவ மேட்டர்ல பெரிய ஆளுங்கிறதால ஏதாச்சிம் கத்துக் கொடுன்னேன்..முத்தத்த பத்திதான் பேசினா..எங்கெங்கோ முத்தம் கொடுத்தா..ஒடம்பு சிலிர்த்து ..கூசிப் போச்சு..அப்புறம் ரொம்ப நெகிழ்ந்து போய் மேட்டர் இல்லாம மேட்டர் பண்ணுன்னா நானும் பண்ணேன்..மறு நா காலைல செம பயம்..

இப்ப மறுபடியும் மொத வரிய படிங்க...

எனக்கு செத்து போயிடுவோமோன்னு பயம் வந்திடுச்சி...
0

Featured Post

test

 test