Tuesday, January 29, 2008

தொடர்பறுந்த பிரதேசங்களில் விபரீதங்களோடு பூக்கத் துவங்கும் மூங்கில் மரங்கள்


1
அருணாசலப் பிரதேசம் இந்திய வரைபடத்திலிருக்கிறது ஆனால் அருணாசலப் பிரதேசத்தின் வரைபடத்தில் எங்களின் பிரதேசம் இல்லை என்பதை என்னைத் தேடி வந்தவன் சொன்னான்.வரைபடங்கள், வேற்று மனிதர்கள், புற பிற உலகங்களைப் பற்றி எதுவும் தெரியாது எங்களுக்கு. உலகம் குறித்தான,மனிதர்களின் வாழ்வு குறித்தான அவனின் சிலமணிநேர விளக்கங்களில் கதைகள் படிப்பது மனிதர்களின் மிகப்பெரிய புனித செயல் அல்லது மனிதர்களின் புத்திக்கூர்மையை தீட்ட வல்ல செயல் அல்லது படிப்பவன் மட்டுமே புத்திசாலி,படித்தல் மட்டுமே புத்திசாலித்தனமான செயல் எனப் புரிந்துகொண்டமையால் அவனுக்கான கதைகளாய் இதை சொல்லத் துவங்குகிறேன்.இதை எழுதிக் கொண்டிருக்கும் அதிமேதாவிக்கு இதை எழுதி முடித்ததும் மிகப்பெரிய செயல் ஒன்றை செய்து முடித்ததாய் உவப்பு ஏற்படலாம்.அந்த உவப்பினை ஆரம்பத்திலேயே எண்ணி கேலியாய் சிரித்துக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

எனக்குப் பழக்கமானது எண்பத்தி எட்டு முகங்கள் மட்டுமே,பிறந்ததிலிருந்து இந்த எண்பத்து எட்டு பேரை மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன் அத்துடன் இந்த எல்லையற்ற வெளி, எங்களைத் தவிர்த்து வேறொருவரைத் தெரிந்திடா விலங்குகள், செடிகள், தாவரங்கள் இன்ன பிற உயிரினங்களென இந்த உலகம் மிகவும் தன்வயமானது.விசித்திரங்களுக்கான புதுமைகளுக்கான வாய்ப்பு எப்போதுமே ஏற்பட்டதில்லை. எங்களின் சிறு குழு வம்சத்தின் கடைசி மனிதன் நான் (எண்பத்தெட்டாவது மனிதன்).இந்த எண்ணுடன் நிறுத்திக் கொள்வதென எங்களின் குழுத் தலைமைப் பெண்ணொருத்தி அறிவித்ததினால் எங்களின் மொத்த சமூகமும் தங்களின் இனப்பெருக்க துவாரங்களை அடைத்துக் கொண்டன.சமூக கட்டுகளுக்காக இனப்பெருக்கத்தைத் தடை செய்திருந்தாலும் நாங்கள் அனைவரும் மனிதர்களென்பதால், உடலுறவு இன்பம் என்பதைத் துய்த்து வந்திருப்பதால் அதன் கிளர்ச்சியிலிருந்து எங்களால் விடுபட முடியவில்லை. திருட்டுத்தனமாக கலவி புரிந்தோம் அது குறித்து விளக்கமாக பேசவேண்டியதில்லை இருப்பினும் தகவலாய் சொல்லவேண்டுமெனில் எங்கள் குழுக்களில் கலகக்காரர்கள் சிலர் விலங்குகளைப் புணர்ந்ததாய் செய்திகள் கேள்விப்பட்டதுண்டு.இந்த அறிமுகங்கள் போதும் இனி எங்கள் தலைமைப் பெண்ணின் மொழியில் நீங்கள் தொடர்ந்து இக்கதையைப் படியுங்கள்.

2

இந்த வருடம் பனி சற்றுக் கடுமைதான்.நண்பகலில் கூட சூரியன் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறான். பனி மூடிய இந்தச் சமவெளியை மூங்கில் தோப்பிற்கு மேலிருக்கும் பாறையின் மீது ஏறிப்பார்ப்பது பரவசத்தை ஏற்படுத்தும்.என் இளம் வயதில், என் துணையுடன் இது போன்ற பனிக்காலங்களில் அந்தப்பாறையடியில்தான் காதல் புரிந்தேன். விடிந்ததும் பாறையின் மீதேறியமர்ந்து இச்சமவெளியை உற்று நோக்கியபடி அமர்ந்திருப்பேன்.அந்தக் காலங்கள் மிகவும் இனிமையானவை இது போன்ற ஒரு குளிரில்தான் என் யோனி விறைத்துப் போனது. கலவிக்கு முயன்று தோற்ற என் துணை வெறுப்பின் உச்சத்தில் பாறையின் மீதிருந்து குதித்து தற்கொலை செய்து கொன்டது. விதிர்த்துப் போன நான் அதன் உடல் தேடியெடுத்து சிதைந்த தலையினை மட்டும் கொண்டுவந்து என் வீட்டின் முன் வைத்தேன் அதுவரை அம்மக்களுக்கு அது தலைவனாக இருந்தது. குல வழக்கப்படி என் மகன்தான் அதைக் கொன்று தலைவனாக வேண்டும்
ஆனால் என் மகன் ஒரு கவிஞனாக இருந்தான். அவன் முற்றிலும் தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவனில்லை என்பதால் நானே இக்குழுவின் தலைவியானேன்.மூடிய யோனியின் உதடுகள் பின்பெப்போதுமே திறக்காததினால் அன்று பிறந்த ஒரு குழந்தையினோடு இனப்பெருக்கத்தைத் தடை செய்தேன்.

நான் தலைவியானதற்கு பிறகு இரண்டு முறை மூங்கில் மரங்கள் பூத்தன.(அதற்கு முன்பு மூன்று முறை)மிகக் குறைவாகப் பூத்ததினால் பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லை. பூத்துக் குலுங்கிய மூன்று நாட்களில் மொத்தம் முன்னூறு மான்களும், பதினெட்டு சிங்கங்களும், பத்தொன்பது ஆலமரங்களும் பதினோரு நந்தவனங்களும் அழிந்து போயின.இரண்டு முறையும் மனித சேதாரம் எதுவுமில்லாததால் மக்களுக்கு என்மீது நம்பிக்கை வந்தது. மேலதிகமாய் ஐந்து முறை மூங்கில் மரங்கள் பூத்ததை பார்த்தே ஒரே பெண்ணும் நானாக இருந்ததினால் (எங்கள் வயதை மூங்கில் பூப்பதை அடிப்படையாக கொண்டு கணக்கிடுவோம்)எனக்காக எதை வேண்டுமானாலும் செய்ய இம்மக்கள் தயாராக இருந்தனர்.கலகக்கார கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாய் தெரிந்து கொள்ள முடிந்தது எனினும் வெளிப்படையான எதிர்ப்புகள் எனக்கு இல்லாமல் இருந்தது. இதற்கு பின்னால் என் ராஜதந்திரங்களின் உபயோகம் இருந்தது எனச்சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்.அரசியல் தந்திரங்கள் மற்றும் காதல் யுக்திகளை வெளியில் சொல்வது எப்போதுமே மிகவும் ஆபத்தானது.

இன்றைய காலையில் அப்பாறைக் குன்றின் மீதேறி இபபனியை பார்க்க விரும்பினேன்.வழித்தடத்தை கால்கள் பழகியிருந்ததால் பனிமூடிய புகை நடுவினில் நடந்துகொண்டிருந்தேன்.மூங்கில் தோப்பினை நெருங்கும் முன் கால்களில் ஏதோ இடறியது குறுக்கும் நெடுக்குமாய் ஏதோ ஓடின சந்தேகத்தோடு கையில் பிடித்துப் பார்க்கையில் பச்சை நிற எலிகள்.. இதயம் படபடவென அடிக்கத்தொடங்கியது. ஆத்திரத்தோடு அச்சிறிய பசிய எலிகளை வீசியெறிந்தேன். ஆம்! அது நிகழ்ந்தே விட்டது.. மூங்கில் மரங்கள் பூக்கத் தொடங்கிவிட்டன... வாசம் மிகக் கடுமையாய் இருந்தது.. சிறிது நேரம் சுவாசித்துக் கொண்டிருந்தால் மயங்கி விழுவது உறுதி.. மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டேன்.. சடாரென பனிப்புகை கலைந்தது.. பாய்ந்த சூரிய வெளிச்சத்தில் சற்றுப் பதறிப்போனேன் பூக்கள்.. பூக்கள்..பூக்கள்...எங்கும் பூக்கள்....கண்களுக்கெட்டிய தூரம் வரை கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்..ஒரே இரவில் எப்படி இத்தனைப் பூக்க முடியும்? அடர்த்தியாய், நீளமாய், வாசனையாய், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பூக்கள்..எனக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது..இந்த முறை நம் ஒட்டு மொத்த சமூகமும் அழிந்தே போய்விடும் என உறுதிபடுத்திக் கொண்டேன்...ஓட்டமும் நடையுமாய் என் வீட்டை அடைந்து மயங்கி விழுந்தேன்...

கண்விழித்துப் பார்த்தபோது ஒட்டுமொத்த மக்களும் என் முன் குழுமியிருந்தனர்.மூங்கில் பூத்திருந்ததை பார்த்ததின் பயரேகைகளை அவர்களின் முகத்தில் படிக்க முடிந்தது.சற்று உரத்தகுரலில் ஒருவன் முன் வந்து சொன்னான் (இவன்தான் புலிகளைப் புணர்பவனாய் இருக்கமுடியும்) "இந்தப் பிரதேசம் முழுக்க போர்த்தியிருக்கும்படி கடினமான,யாராலும் புக முடியாத கூரை ஒன்றினை வேய்ந்துவிடுவோம். அதுவும் இன்றைய பொழுதிற்குள் அப்போதுதான் பாதுகாப்பாய் இருக்கமுடியும்" என்றான்.அவன் யோசனையையும் அவனையையும் எனக்குப் பிடித்திருந்தது. எண்பத்தி ஆறு பேரையும் கூரை வேயும் பணியில் ஆழ்த்திவிட்டு அவனை தனியே அழைத்து வந்தேன்.மூடிய என் யோனி உதடுகளை திறக்கப் பணித்தேன். அவன் முதலில் தன் குறியினால் முயன்று தோற்றான்.கூரிய நகங்கள் மற்றும் பற்கள் கொண்டும் முயற்சித்துப் பார்த்து தோல்வியடைந்து,நிம்மதியற்று அப்படியும் இப்படியும் நடந்தான்..தலையை இடதும் வலுதுமாய் ஆட்டியபடி இடையிலிருந்த குறுவாளினைக் கொண்டு என் கழுத்தினை அறுக்க ஆரம்பித்தான்.

இந்த இடத்திற்கு மேல் இக்கதையினை தொடரவேண்டிய சுமை கலகக்காரனின் தோள்களில் விழுவதால் அவனது மொழியில் தொடர்ந்து படியுங்கள்
3


என்னை எப்படி இவர்கள் கலகக்காரனென அழைக்கிறார்கள் எனப் புரியவில்லை.தினவெடுத்து அலைவது,தடைகளை மீறுவது, யாருக்கும் தெரியாமல் தேங்கியுள்ள நமைச்சல்களை தீர்த்துக் கொள்வது இவற்றைத் தவிர நான் வேறெதுவும் செய்திருக்கவில்லை.சாதாரணர்கள் மிரளும் ஒன்றினை செய்யத் துணிவது மாத்திரமே கலகத்தின் அடையாளமென மாறிப்போனது வரலாற்றின் தவறாய்த்தான் இருக்க முடியும். புலிகளை சுலபமாய் புணர முடிந்த என்னால் அவளை ஏதும் செய்ய முடியவில்லை. வெட்டி வீழ்த்த முடிவெடுத்த கணத்தில்தான் பதவியின் மீதான மோகங்கள் கிளை விட ஆரம்பித்தன அல்லது பதவியின் மீதான சடுதியில் தோன்றிய கிளர்வுகளே அவளைக் கொல்ல காரணமாயிருந்தன..இப்போது நான் இந்தப் பிரதேசத்தின் தலைவன். வீழ்த்திய அவளின் தலையோடு குத்துக்காலிட்டு வெகுநேரம் அமர்ந்திருந்தேன் இருள் கவ்வ சிறிது நேரமிருக்கும் தருவாயில் என் தலைக்குமேல் பெரிய கூரையொன்றினைப் பார்க்க முடிந்தது. வெற்றிகரமாய் கட்டளையை நிறைவேற்றிய குடிமக்கள் எவ்வித எதி ர்ப்புமில்லாது என்னை தலைவனாய் தேர்ந்தெடுத்தனர்.முதல் சட்டமாய் இனப்பெருக்கத் தடையை நீக்கினேன்.கலவி என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. நினைத்த நேரத்தில்,பிடித்த இடத்தில் பிடித்தவர்களோடு கலவியில் ஈடுபடுங்களென சத்தமாய் அறிவித்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.அதே இடத்தில் தத்தம் துணையுடன் இணைய ஆரம்பித்தனர் (இதைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது perfume திரைப்படத்தின் இறுதிக் காட்சியினை நினைத்துக் கொண்டேன். அந்தத் திரைப்படத்தை யாரேனும் பார்த்திருந்தால் நீங்களும் அதுபோன்ற ஒரு காட்சினை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்) வெகு நாட்களாய் தேங்கி கிடந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் தெருக்களில் வெள்ளமென பாய்ந்தோடியது. உற்சாக கூச்சல்களும் இன்ப முனகல்களும் என்னை கிளர்வடையச் செய்தது.எத்தனை நாட்கள் இவ்வாறு கிடந்தோமென ஒருவரும் அறியவில்லை.

சோர்வின் மிகுதியில் நான் மெல்ல வெளிவந்து கூரையின் ஒரு பகுதியினைக் கிழித்துப் பார்த்தேன்..எங்கள் பகுதி தவிர்த்து சுற்றியிருந்த அடர்ந்த காடுகள் தீக்கிரையாகியிருந்தன.மூங்கில்மரங்கள் இருந்த சுவடேயே காணவில்லை.மெல்ல மக்களை எழுப்பி வெளியில் கூட்டிச் சென்றேன்.. காட்டுத் தீயில் கணக்கிலடங்கா கானக விலங்குகள் மடிந்துபோயிருந்தன. பிணக்குவியல்களுக்கு நடுவே சில வினோத உடல்களையும் பார்க்க முடிந்தது.ஒரு விலங்கிற்கு மூக்கிற்கு பதிலாய் யானையின் தும்பிக்கை இருந்தது.இன்னொரு விலங்கிற்கு மூன்று முகங்கள் இருந்தன.இன்னொன்று பெரிய கொண்டையோடும் உடல்முழுக்க சாம்பல்களைத் தீட்டிக்கொண்டுமிருந்தது.பெண்ணுடல்களை ஒத்த சிலவற்றையும் பார்க்கமுடிந்தது...மரத்தாலான கருவியொன்றினையும், தாமரை மலர் ஒன்றினையும், சிங்கமொன்றினையும் கெட்டியாய் பிடித்தபடி சிலப் பெண்ணுடல் விலங்குகள் இறந்து கிடந்தன...

*மாற்று எழுத்துக்களை வலையில் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கும் நேசத்திற்குரிய நண்பர்களுக்கு....

*When bamboo flowers என்கிற documentry ஒன்றினை National Geograpic Channel லில் பார்க்க நேரிட்டதின் தொடர்ச்சியே இப்புனைவு இதனோடு அந்த documentry யினையும் பார்ப்பது ஆழமான புரிதலுக்கு வழிவகுக்கும்..

Friday, January 25, 2008

தமிழச்சி,ஜெயமோகன் இன்ன பிற கடுப்புகள்

0
அலுவலக சக மல்லு ஒருவன் எதையோ தரவிறக்கம் செய்யப்போய் சர்வரைக் கொன்றுவிட்டான். கடுப்பான ஐடி மக்கள் ஜிமெய்லை மட்டும் விட்டுவிட்டு மத்ததைப் பூட்டி விட்டார்கள்(என் சிறு வயது இம்சைகள் தாளாமல் "உன் கண்ண ரெண்டும் விட்டுட்டு ஒடம்பு தோலை உரிக்க சொல்றண்டா உங்கப்பாகிட்ட"என்ற என் அம்மாவின் வாசகம் சம்பந்தமில்லாமல் நினைவில் வந்துபோனது..ஒருபோதும் சொன்னதில்லை என்பது வேறுவிசயம்) சட்டென்று உலகமே ஸ்தம்பித்துப் போனது. இரண்டு நாட்கள் சவுண்ட் கொடுக்காமல் மூன்றாவது நாள் லிமிடட் ஹவர்ஸ் என எதையோ சொல்லி இரண்டு மணி நேரம் வாங்கிவிட்டேன். கண்டதையெல்லாம் படித்து கடுப்பாகத் தேவையில்லை என்ற நன்மை இருப்பினும் கண்ணில் பட்டுத் தொலைவதெல்லாம் கடுப்பாவதற்கே
என்பது போலத்தான் இருக்கிறது..
0
தமிழச்சிக்கான எதிர்வினைகள் எத்தனை அவசியம்?என்றெல்லாம் யோசித்துப் பார்த்து எழுதும் மனநிலையில் இல்லை. இருப்பினும் மேம்போக்கான வறட்டுக்கூச்சலுக்கு, விளம்பர மோகத்திற்கு, மூலத்தை சிதைக்கும் அபத்தங்களுக்கான எதிர்வினைகளை வைத்தேயாகிவிடுவது என்ற நிலைக்குத் தள்ளியது என் உள்வெளி.மேலும் இந்த இடுகைக்குப் பிறகு அவரை முற்றிலுமாய் புறக்கணித்து விடுவது என்கிற முன் தீர்மானங்களோடு இதை எழுதத் தொடங்குகிறேன்.தமிழச்சிக்கான பின்னூட்டங்களைக் கூட மிகுந்த யோசனைகளுக்குப் பிறகே எழுதத் தோன்றும். பெண் என்ற பிரத்யேக காரணங்களுக்கான சலுகையே இத்தனை நாட்கள் என் கடுப்பை தள்ளிப்போட்டதென்றும் சொல்லலாம்.எதுவிருப்பினும் தமிழச்சியின் தீரம் பாராட்டத்தக்கது.பெண்கள் இயங்கத் தயங்கும் ஒரு தளத்தை இவர் தேர்வு செய்ததற்காகவும் தொடர்ச்சியான ஆபாசத் தாக்குதல்களை புறந்தள்ளிக்கொண்டு போவதற்காகவும் தமிழச்சியினைப் பாராட்டியே ஆகவேண்டும்.ஆனால் ஆபாசப் பின்னூட்டங்களை எவ்வித தயக்கங்களும் இல்லாமல் வெளியிடும் இவர் என் எதிர் கருத்து சார்ந்த பின்னூட்டத்தை வெளியிட மறுத்தது ஏன் எனத் தெரியவில்லை.ஒரு வேளை நான் ஆபாசமாக எழுதாமல் விட்டது புரியாமல் போனதோ என்னமோ..

எப்போதாவது எழுதும் இவரது சொற்பமான சொந்த எழுத்துக்கள் இவரை அதிகார வர்க்கத்தின் குறியீடாகத்தான் அடையாளம் காட்டுகிறது. (தட்டுக்கழுவி முதல் தேவடியா வரையிலான சொல்லாடல்கள்) பெரிய டைப்பிஸ்ட் பெரியாரிஸ்ட் இல்லை என்கிற கொழுவியின் வாக்கியம் கச்சிதமாக இவருக்குப் பொருந்துகிறது.இந்த குற்றச் சாட்டிலிருக்கும் உண்மையை இவர் புரிந்துகொண்டாரா? எனத் தெரியவில்லை.அப்படிப் புரிந்துகொண்டிருப்பின் அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகள் எதையும் இவர் எடுத்ததாய் தெரியவில்லை.பகுத்தறிவு வாதி என்கிற சக்தி வாய்ந்த ஒரு அடையாளத்தை மேம்போக்காக புரிந்துகொள்வதின் சரியான அடையாளம்தான் தமிழச்சியின் எழுத்து.பெருமதிப்பிற்குரிய பகுத்தறிவுவாதிகளே! உங்களுக்கான அடையாளங்கள் கீழ்கண்டவைகள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.


1.கருப்பு நிற ஆடை அணிவது..
2.உடையில் பெரியார் அல்லது சேகுவாராவின் உருவத்தை பதிந்துகொள்வது
3.தோழர்,புரட்சி,வெங்காயம் என்கிற சொல்லாடல்களை சம்பந்தமே இல்லாமல் திரும்ப திரும்ப பேச்சு வழக்கில் நுழைப்பது...
4.எங்காவது ஓரமாக நின்று நோட்டிஸ் கொடுத்துவிட்டு பெரிய சீர்திருத்ததை செய்ததாய் புளகாங்கிதம் அடைவது,அதை போட்டோ எடுத்து கண்ணில்பட்டவர்களுக்கெல்லாம் அனுப்பி வைப்பது..
5.பெண்,பெண்ணியம் எனக் காதில் விழுந்த சொற்களை வைத்துக்கொண்டு பொதுவெளியில் இயங்கும் பெண்களுக்கு நூல் விடுவது.

நம்முடைய வாழ்வு,நம்முடைய மிகச்சிறந்த தலைவர்கள்,புனிதர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர் அனைவரும் சித்தாந்தங்களை அதன் சாராம்சத்தோடு புரிந்துகொள்கிறார்களா/கொண்டார்களா என விளங்கவில்லை. அவர்களை அடியொற்றியே நாமும் செம்மறி ஆட்டுக் கூட்டங்களைப் போல் ஜே! போட்டுப் பின் தொடர்கிறோம். தொடர்ச்சியான தலையாட்டல்களில்,வாழ்க! கோஷங்களில் சொந்த மூளை சிந்திக்கும் திறனை எப்போதோ இழந்துவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.மேலும் சமீப காலங்கலாய் இவரது புரட்சித் தலைப்புகள் தாங்கி வரும் பெரியார் மற்றும் ஓஷோவின் உள்ளடக்கங்கள் அதன் மூலங்களை சிதைப்பதாகத்தான் எனக்குப் படுகிறது.ஓஷோவை நேசிக்கும் பெரியாரை நேசிக்கும் ஒருவன் இவ்வித வறட்டுக் கூச்சல்களால் சந்திக்க நேரிடும்
பெரும் அசூசையை மொழியில் எவ்வாறு கடத்துவதெனத் தெரியவில்லை.

தமிழச்சி இப்படித்தான் எழுதவேண்டும் என நான் எதையும் வலியுறுத்தவில்லை இருப்பினும் இவரின் அபத்தங்கள், அரைகுறைப் புரிதல்கள் ஏற்படுத்தும் எரிச்சல்கள் எழுத்தில் சொல்ல முடியாதது.இவை மட்டுமில்லாது தன்னை ஒரு இலக்கியவாதி என்றும் எழுத்தாளர் என்றும் இவரே சொல்லிக்கொள்வது வன்முறையின் உச்சம்.பெண்மொழி,இலக்கியம் என்றெல்லாம் இவர் பேசும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. பெண்ணின் மொழியைப் பற்றியோ இலக்கியத்தைப் பற்றியோ இவர் சொல்லி நான் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற நிலையில் இல்லை என்பது என் பதிவுகளையும் அவர் பதிவுகளையும் தொடர்ச்சியாய் படிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.பெண் என்பவள் பெண்ணால் மட்டும் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதில்லை.சக பெண்ணை தேவடியா! என்றழைக்கும் கண்டவன் போகட்டும்! என விளம்பரப்படுத்தும் இவரின் சிந்தனைகளை விட பெண்ணை நான் ஓரளவு புரிந்துகொண்டுள்ளேன் என்பது ஆசுவாசத்தை அளிக்கிறது. பெண்மொழிகளை /உடல்மொழிகளை மொத்தத்தில் பேதமில்லா மொழிகளைப் புரிந்துகொண்ட சுகுணா போன்ற தமிழச்சியின் தோழர்கள் தமிழச்சியின் புரிதல்களின் எல்லைகளை ஓரளவிற்கேனும் விரிவுபடுத்தினால் என் போன்றவர்கள் சந்திக்க நேரிடும் அசூசை உணர்வு ஓரளவேனும் தவிர்க்கப்படலாம்.

0
ஜெயமோகனின் எழுத்துக்கள் எனக்குப் பிடித்தமானவை. இவரது எல்லா எழுத்துக்களையும் தேடித் தேடி படிக்கும் வசீகரத்தை இவரது மொழி தன்வயப்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரியிலிருந்து நான்காவது கொலை வரை இவரின் எல்லா எழுத்துக்களையும் முழுமையாய் வாசித்திருக்கிறேன். கொற்றவை மட்டும் இன்னும் படித்து முடிக்கவில்லை.ரப்பர், காடு, திசைகளின் நடுவே, குறுநாவல் தொகுப்பு, அறிபுனைவு கதைகள் என எனக்குப் பிடித்தமான இவரின் பட்டியல்கள் நீளமானவை. இவரின் மிகப் பெரிய நாவல்களைக் கூட விலை கொடுத்து வாங்கித்தான் படித்திருக்கிறேன்/படிக்க வேண்டும் என்கிற தீவிர சிந்தனைகளும் இருக்கிறது.கம்யூனிசம் பற்றிய அறிமுகத்தை இவரது பின்தொடரும் நிழலின் குரலிலிருந்துதான் பெற்றுக்கொண்டேன் என்பது தீவிர சிந்தாந்தவாதிகளுக்கு கேலியாய் படலாம் ஆனால் என்னளவில் அதுதான் உண்மை.ஆனால் அதை ஒரு தொடக்கமாகத்தான் நான் புரிந்துகொண்டேனே தவிர தீர்க்கமானதாய் இல்லை.இருப்பினும் பொதுவெளியில் ஜெயமோகனின் பங்களிப்பு குறித்து எனக்கு பல்வேறுவிதமான மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன.வலை ஊடகத்தின் மீதான இவரின் ஏளனப் பார்வை,விருதுகள் பற்றிய மதிப்பீடுகள் மற்றும் சுந்தரராமசாமி கொடி என்பன போன்று பல்வேறு பங்களிப்பில் இவரின் அரசியல் எரிச்சலைத் தருகிறது.எழுத்துக்கும் எழுத்தாளனுக்குமிடையேயான இடைவெளிகளின் தூரத்தை நிரூபிக்கும் இன்னொரு எழுத்தாளனாகவே ஜெயமோகன் எனக்குப் படுகிரார். சா.கந்தசாமியின் எழுத்துக்கும் பேச்சுக்கும் இடையிலான வித்தியாசத்தை கறுப்பியும்,அசோகமித்திரனின் மீதெழுந்த கோபங்களை மதியும், ஜெயமோகனின் இயல் அரசியல்களை பகிரங்கப்படுத்திய டிசேவும், இணைய ஏளன விமர்சனங்களுக்கு வெகுண்டெழுந்த சன்னாசியும்,அனாதை ஆனந்தனையும் எனது முன்னோடிகளாகச் சொல்லலாம்.

ஒரு படைப்பாளியை நாம் ஏன் படைப்பாளியாகவே அணுகுவதில்லை?இவர் சிங்கத்தைப் போன்று நடக்கிறார்,புலியைப் போன்று உறுமுகிறர், டைனோசர் போல எழுதுகிறார், தீர்க்கமாய் பார்க்கிறார் என்பன போன்றெல்லாம் சிலாகிக்க வேண்டிய அவசியம் என்ன?தனிமனித துதிக்களை விட்டு நாம் வெளிவரவே முடியாதா?சுகுமாரனின் தனிமையின் வழி எனக்குப் பிடித்தமான கட்டுரைத் தொகுப்பு அதில் அவர் காட்டியிருந்த சுந்தர ராமாசாமி பக்தி எரிச்சலின் உச்சத்திற்கு என்னைக் கொண்டு சென்றது.கலைஞர்/ஜெயலலிதா அடிபொடிகளுக்கும், ரஜினி/விஜய் ரசிக குஞ்சுகளுக்கும், சுரா/ஜெமோ பக்தியாளர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?எவனையாவது ஒருத்தனை தலைவனாக்கி அவன் காலை வருடிக்கொண்டிருப்பதில் அப்படியென்ன திருப்தி?மணிகண்டன் போன்ற நுட்பமான கவிஞர்களுக்கும் இன்னமமும் ஷங்கரின் சுஜாதாதான் முகவரியா? இந்த சிந்தனைகள் ஏற்படுத்திய கடுப்பை எப்படிச் சொல்ல?

0
அச்சு ஊடகங்களுக்கும் இணைய ஊடகங்களுக்குமிடையேயான வேறுபாடுகள்/ மதிப்பீடுகள் மிகுந்த கசப்பைத் தருகிறது.அச்சு ஊடகங்களின் பங்களிப்பு காலாவதியாகிவிட்டடது என நான் தீர்க்கமாய் சொன்னால் நம் மிகப்பெரிய எழுத்தாளர்கள்/பதிப்பகத்தார் அடையும் அதிர்ச்சிகள் எந்த அளவு வலிமையோ அதற்கு சற்றும் குறைவில்லாதது இணைய எழுத்துக்களின் மேல் தொடர்ச்சியாய் வைக்கப்படும் சுஜாதா மற்றும் ஜெமோக்களின் திட்டவட்ட அறிவிப்புகளும்.இதை இதே சூழலில் இயங்கும் சக வலைப்பதிவர்களும் ஏற்றுக் கொள்வதும் சிலாகிப்பதும் எத்தனை பெரிய அபத்தம்? உதாரணத்திற்கு ஹரன் பிரசன்னாவின் சமீபத்திய பதிவில் ஏதோ சுஜாதாவைத்தான் எல்லாரும் காப்பி அடிக்கிறார்கள் என்பது போலச் சொல்வதெல்லாம் படு அபத்தமாகத்தான் படுகிறது.பல்வேறு விசயங்களைத் தொட்டிருக்கும் அவரது வலை ஆய்வு அச்சு ஊடகத்தை மட்டுமே பிரதானமாய் முன்னிருத்துவது ஏனெனத் தெரியவில்லை.அச்சில் இருக்கும் அதிகாரத்தன்மைகள், ஒற்றைச் சாளர குறைகள் களையப்பட்டுவிட்டன இனி வலைப்பதிவே இலக்கியத்திற்கான முன்னோடியாய் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.இலக்கியப் பிதாமகர்கள் என எவரும் இல்லை.எவரும் எதையும் அங்கீகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. உனக்குத் தெரிந்ததை நீ எழுது! எனக்குத் தெரிந்ததை நன் எழுதுகிறேன். இதுதான் இலக்கியம்.. இதுதான் வாழ்வு.பூனையின் உலகம் எனப் பகடி செய்வீர்களேயானால் நாளொன்றுக்கு அறுபது பேருக்கு குறையாதவர்களால் ஒரு வலைப்பக்கம் படிக்கப்படுகிறது உங்களின் எழுத்துக்கள் எத்தனை பேரால் படிக்கப்பட்டு உள்வாங்கப்படுகிறது ரீதியிலான விளம்பர ஆய்வுகளையும் செய்ய சித்தமாக உள்ளேன்.உங்கள் அச்சு இலக்கியவாதிகளின் காலம் காலாவதியாகிவிட்டது.மேலும் வலையில் சினிமாப் பொண்ணையாக்களாலும், ஜெமோக்களாலும், சுஜாதாக்களாலும் தாக்குப் பிடிக்கமுடியாதென்பது நிரூபணமான உண்மை. முடிவாய் ஆனந்தனின் சில வரிகளை மீள்பதிவிப்பதின் மூலம் இன்றைய கடுப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

இந்த மசிரான்கள் தான் நவீன தமிழிலக்கியத்தை கட்டிக் காப்பவர்கள் மற்றும் ஞானகுருக்கள் என்றால் ஓக்காளி இந்தத் தமிழ் நாசமத்துப் போகனும்

தொடர்புச் சுட்டிகள்
http://anathai.blogspot.com/2008/01/blog-post.html
http://nizhalkal.blogspot.com/2008/01/blog-post_21.html
http://pesalaam.blogspot.com/2008/01/blog-post_24.html
http://mathy.kandasamy.net/musings/archives/2007/08/16
http://karupu.blogspot.com/2007/05/blog-post.html
http://padamkadal.blogspot.com/2008/01/blog-post_11.html
http://thamizachi.blogspot.com/2008/01/blog-post_9536.html

Saturday, January 19, 2008

திரும்புதல் அல்லது புதைவிலிருந்து மீண்டெழுதல்

Volver (2006) aka Coming back
சம கால இயக்குநரான Pedro Almodóvar ன் திரைப்படங்கள் பரவலாய் கவனப்படுத்தப்படுகிறது. பெரிய யுக்திகளோ, தொழில்நுட்ப மிரட்டல்களோ எதுவும் இல்லாது சம தளங்களில் இயங்குகிறது இவரது உலகம். அன்பு,உறவுச் சிக்கல்கள், மறைக்கப்பட்ட குரூரங்கள் என இவர் வெளிக் கொணரும் படைப்புகள் அவர் வாழ்ந்த, வசித்த, சந்திக்க நேர்ந்தவைகளின் வெளிப்பாடாய் உண்மையின் பிரதிபலிப்பாய் இருக்கிறது.முப்பத்தி ஏழு விருதுகளை குவித்திருக்கும் Pedro Almodóvar ன் இந்தத் திரைப்படம் மிகுந்த மன உளைச்சல்களை ஏற்படுத்திப் போனது.

ஸ்பெயின் தேசத்து கிராம வாழ்வு குறிப்பாய் பெண்களின் உலகம் சார்ந்த களத்தில் இத்திரைப்படம் இயங்குகிறது.மேலும் சூரைக்காற்று, தீவிபத்துக்கள், ஆண்களின் வன்முறை,உறவு ரீதியிலான நம்பிக்கைத் துரோகங்கள் இவைகளால் அலைக்கழிக்கப்படும் பெண்களின் வாழ்வைப் பேசுகிறது.பிரதான கதாபாத்திரமான Raimunda(Penélope Cruz) அவளின் தாயார் மற்றும் மகள் என மூன்று காலகட்டத்துப் பெண்களின் வாழ்வியல் ரீதியிலான போராட்டங்கள் / சிதைவுகள் என்கிற முறையில் இத்திரைப்படத்தை அணுகலாம்.மூன்று காலகட்டத்திலும் பெண்களின் வெளிப்புறத் தோற்றங்கள் மற்றும் வாழ்வு முறைகள்தான் வித்தியாசப்படுகின்றதே தவிர உளவியல் ரீதியாக அவர்கள் சந்திக்க நேரிடும் பிரச்சினைகளில் எவ்வித மாற்றமுமில்லை.ஒரு நாவலை வாசிக்கும் சரளமான நடையும்,சின்ன சின்னப் புதிர்களும்,மிக அதிர்ச்சியான புதிர்களின் பின்னாலிருக்கும் உண்மைகளும், படம் முழுதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் பார்வையாளனை கண்களை எடுக்க விடாமல் ஒன்றிப்போகச் செய்துவிடுகிறது.

Irene (Carmen Maura) - தாய்
கிராமங்களில் பேசப்படும் / நம்பப்படும் ஆவிக் கதைகளை பெண் தனது பழிவாங்கலுக்காய் அல்லது மிகப் பிடித்தமான இருப்பிற்கான விழைவுகளுக்காய் பயன்படுத்திக் கொள்ளும் நுட்பங்கள் உலகெங்கிலும் நடைமுறையிலிருக்கும் வாழ்வியல் ரீதியான அவலம்தான். இதை நகைச்சுவையோடு சொல்லியிருப்பது மிகவும் புதிதான கதை சொல்லும் முறை.ஒரு தீ விபத்தில் raimunda வின் தாயும் தந்தையும் இறந்து போனதாயும் அவளின் தாயின் ஆவி தனியே வசிக்கும் அத்தையினைப் பார்த்துக்கொள்வதாயும் கதைகள் சொல்லப்படுகிறது. ஆனால் அவளின் தாய் பக்கத்து வீட்டுக்காரியோடு படுக்கையிலிருந்த தனது கணவனை எரித்துவிட்டு தன் வயதான அத்தையோடு எவருக்கும் தெரியாமல் வசிக்க ஆரம்பிக்கிறாள்.அத்தை இறந்ததும் கணவனை பிரிந்து தனியே வாழும் தன் இரண்டாவது மகளிடம் சென்றுவிடுகிறாள்.எல்லாருக்கும் உண்மை தெரிந்ததும்,சுமுகமானதும் வயதான தனிமையில் நோயின் துணையோடு வாடும் தன் பக்கத்து வீட்டுக்காரியைப் பார்த்துக்கொள்ளச் சென்றுவிடுகிறாள்.ஒருவகையில் அவளது அம்மாவைக் கொன்றதிற்கு பிரதிபலனாயுமிருக்கும் எனச் சொல்லியபடி தன் மகள்களிடமிருந்து பிரிந்து போகிறாள்.


Raimunda(Penélope Cruz) -மகள்
penelope cruz எனக்கு மிகவும் பிடித்த நடிகை.இந்தப் பெயரை கேட்டதும் அடர்சிவப்பு நிற நீளமான மிளகாய் கண்முன் வருவது எதனால் எனத் தெரியவில்லை.நான் பார்த்திருந்த இவரின் பிற திரைப்படங்களில் இவர் அணியும் பெரும்பாலான உடைகளின் வண்ணம் சிவப்பு என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.இந்தக் கதாபாத்திரம் சந்திக்க நேரிடும் அலைவுகள் மிகவும் குருரமானது.ஒரு குரூரமான உண்மை படத்தின் கடைசியில் சொல்லப்படுகிறது.அந்த நொடியில் ஏற்பட்ட அதிர்ச்சி விவரிக்க முடியாதது.அதே போன்றொரு நிலை தனது மகளுக்கும் ஏற்படுவதும் அந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதும் தன் வாழ்வியல் நிலையிலிருந்து மீண்டெழுவதுமான சுலபத்தில் மறக்க இயலாத கதாபாத்திரம்.

மகளாக நடித்திருக்கும் Paula ((Yohana Cobo ) பற்றியும் சொல்லிவிட்டால் பார்க்கும்போது நீங்கள் சந்திக்க நேரிடும் அதிர்ச்சிகள் குறையுமென்பதால் அவைகளைத் தவிர்க்கிறேன்.தங்கையாக நடித்திருக்கும் Sole (Lola Dueñas) கேன்சர் நோய்க்கு உள்ளாகும் பக்கத்து வீட்டுப்பெண் Agustina(Blanca Portillo) என முற்றிலும் பெண்களாலான திரைப்படம்.வாழ்வினை எவ்வித மிகைப்படுத்தலும் இல்லாமல் பதிவிப்பது வழக்கமானதுதான் என்றாலும் குரூரங்களை அதன் தீவிரத் தன்மை குறையாது மிக மெல்லிதாய் சொல்லும் முறை மிகப் புதிது.

படத்தில் வரும் ஒரு உணர்ச்சிகரமான பாடல்..

Tuesday, January 15, 2008

தூங்கும் புத்தகம்



விடைபெறும் தருணத்தில்
அவளிடமிருந்து ஒரு புத்தகம் வாங்கி வந்தேன்
திருப்பித் தர வேண்டிய நிர்பந்தங்களில்
வைத்த இடம் மறந்துபோயிற்று
மாடிப்படி
கழிவறை
கொல்லை மரத்தடி
ஓடு வேய்ந்த கூரைத் திட்டு
பாட்டியின் பழைய பெட்டி
உரல்
அம்மிக்கல்
மரக்கிளை
வாயில்படியென
எந்த இடுக்கிலும் இல்லை
தேடிப்பிடித்த கனமான சுத்தியலொன்றைக் கொண்டு
என் மண்டையைப் பிளக்க ஆரம்பித்தேன்
உள்ளே வழு வழுப்பான அட்டையுடன்
மிக வசீகரமான தாள்களோடு
தூங்கிக் கொண்டிருந்தது
அதே புத்தகம்...

Monday, January 14, 2008

கண்மணி டீச்சரும் ஜார்ஜ் புஷ்ஷும் மஞ்சூராரும்



மொக்கை போட டீச்சரும் புத்தாண்டு சபதமெழுத மஞ்சூராரும் அழைத்த பின் என்ன எழுதுவதென யோசித்து மண்டை குளிர்ந்ததுதான் மிச்சம்.மொக்கைத் தழலாரின் பதிவுகள் ஆசிப்பின் ட்ரேட் மார்க் மொக்ககளை மேய்ந்தும் எந்த தலைப்பிலெழுத எனத் தோன்றவே இல்லை.மொக்கைத் தியரிகள் குறித்து உஷாவின் வரையறைகள் மொக்கைக்கான சாரங்களை மற்றும் அழகியலை மிக அழுத்தமாய் பதிவிக்கிறது.நாமெழுதுவதெல்லாமே மொக்கைகள்தான் என்கிற மங்கையின் உண்மை இத் தொடரின் நுண்ணரசியலை மிக அழுத்தமாய் நம் கண் முன் நிறுத்துகிறது.இத்தகைய சூழலில் கதிர் எழுதிய எறும்புகளின் தியரி மிகச் சிறந்த மாந்திரீக யதார்த்தவியல் மொக்கை குறிப்பு.காப்பிக் கோப்பைகளில் மதுவை சுவைக்கும் அவனுடைய பழக்கத்தையும் உள்நுழைத்திருப்பது செறிவான சம தள புனைவு.கப்பியின் முற்றுப்புள்ளிகள் குறைவான மொக்கை மிகச் சிறந்த அ புனைவு.

புத்தாண்டு சபதங்கள் எப்போதுமே இறுக்கமான ஒன்று புதிய வருடத்தில் எல்லாவற்றையும் அழித்துவிட்டு புதிதாய் துவங்கும் ஆவலில் டிசம்பர் இறுதிகளில் வழக்கத்திற்கதிகமாக விட வேண்டியவைகளை செய்து கொள்வது இதற்கு முந்தைய ஆண்டுகளின் வழக்கமாக இருந்தது.இந்த வருடத்தில அது போன்றெதுவும் இல்லை.குற்ற உணர்வுகள் என்பதிலிருந்து மீண்டெழுவதின துவக்கப் புள்ளியாக இதை நான் என்னிலிருந்து அணுகுகிறேன். சென்ற வருட அனுபவங்களைப் பகிர்வது உங்களுக்குப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நாளொன்றுக்கு 7 முதல் 8 சிகெரெட்டுகளை ஊதி தள்ளுவது வழக்கம்.கொளுத்தும் வெயிலில் ஒரு கையில் டீயும் இன்னொரு கையில் கிங்க்ஸுமாய் சென்னையில் எங்காவது ஒர் பொட் டீக் கடையில்(இந்த மனுசன ரொம்ப நாளாக் காணோம்) என்னைப் பார்த்திருக்கலாம். இங்கு வந்த பிறகு கிங்ஸின் பரம திருப்தியை இழந்து போனேன் மார்ல்ப்ரோ முதல் கொண்டு டன்ஹில், எலெம் வரை எல்லாம் முயற்சித்து எலெமில் நிற்கிறது.இங்கு வந்த பின் சிகரெட் புகைப்பதும் குறைந்து போயிற்று.நாளொன்றுக்கு இரண்டு (வார இறுதிகளில் சற்றுக் கூடலாம் ) மட்டும் என்பதால் இந்த வருட சபதங்கள் தேவை இல்லாத ஒன்றாய் போய்விட்டது.

அ.கதிரும் நானும் புகைப்பது எல் எம்
ஆ.கோபியும் சென்ஷியும் புகைப்பது மார்ல்ப்ரோ
இ.நண்பனும் முத்துக்குமரனும் ரோத்மன்ஸ்
ஈ.அபிஅப்பா புகைப்பது போன்
உ.குசும்பர்,லொடுக்கு,மின்னல் மற்றும் ஆசிப்புக்கான காஜா பிராண்டுகள் கிடைப்பது அபூர்வமாகிவிட்டதால் அவர்கள் புகைப்பதில்லை.

ஜார்ஜ்புஷ் துபாய் வந்திருப்பதால் நகரின் பிரதான சாலைகள் மூடப்பட்டு விட்டன. துபை வாழ் மக்களுக்கு இன்று விடுமுறை. லேசான தூறலும், மேகங்கள் சூழ்ந்த இருளும், வரவேற்பரையில் கவிழ்ந்திருக்கும் அமைதியும் மிகப் பரவசமான இன்னொரு நாளின் மிக அழகான மதியப் பொழுதில் என்னால் எழுதப்படுகிறது இம்மொக்கை.

கடைசிக்குறிப்பாய் ஒரு கிசுகிசு
ஊ.குசும்பர் டாவடிக்கும் பெண்ணின் பெயர் ம வில் தொடங்கி சு வில் முடியும் இடையில் ஒரே எழுத்து மட்டும்தான்.

Friday, January 11, 2008

வாசித்தவற்றைப் பகிர்தல்


1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன்

சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை மிக நெருக்கமாய் உணர்கிறேன்.உண்மையின் மீதிருக்கும் தணியாத தாகம் இவரது எழுத்துக்களைத் தேடிப் பிடித்து படிக்க வைக்கிறது.முலாம், பூச்சு, அழகியல், நடிப்பென எவ்வித அலங்காரங்களுமில்லாத மனித வாழ்வின் நேரடியான நெருக்கடிகளை, மனதின் விநோத நிலைப்பாடுகளை இவரது எழுத்தில் காணலாம்.படைப்போடு பொருத்தி பார்த்து மகிழும்/படைப்பில் சிலாகித்துப்போய் அதைப் பற்ற வழுவும் சாமான்ய மனதோடோ அல்லது நுண்ணரசியலைத் தடம் பிடிக்கத் துணியும் ஆராய்ச்சி மனதோடோ இவரை அணுகினாலும் கிடைப்பது ஒரே சுவையாகத்தான் இருக்கமுடியும் அது உண்மைத்தன்மை அல்லது எழுத்து நேர்மை.இடாகினிப் பேய்கள்... எனும் குறுநாவலின் வடிவம் தமிழில் இதற்கு முன்பு நான் படித்திராதது ரமேஷ் ப்ரேமின் எழுத்துக்களுக்கும் சப்-டெக்ஸ்ட் (sub-text)கொடுக்கப்படுமென்றாலும் அவர்கள் இயங்கும் தளம் வேறு.சம தளத்திலிருந்தபடி புனைவு சார்ந்தோ/சாராமலோ (இவரது பெரும்பாலான கதைகளை ஒட்டியபடியேதான் இவரது வாழ்வும் இருந்ததாய் நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டதன் விளைவுதான் சார்ந்தோ/சாராமலோ)எழுதப்பட்ட ஒரு குறுநாவல்/நாவல் மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது.ஒரு குறு நாவலில் இடையிடையே பயன்படுத்தப்பட்ட வாசகங்களுக்கு ஒவ்வொரு தனிக்கதை இருக்கிறது.குறுநாவல் முடிந்த பின் ஒன்பது இணைப்புச் சிறுகதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.குறுநாவலை வாசிக்கும்போதோ அல்லது வாசித்து முடித்த பின்போ அந்தச் சிறுகதைகளை நாம் படிக்கலாம்.வலைப்பதிவில் நாம் பயன்படுத்தும் லிங்க் போன்ற யுக்தி இது. இந்த பாதிப்பில்தான் புனைவிலிருந்து புனைவு என நான் முயற்சித்துப் பார்த்தேன்.ஒரு சேவை நிறுவனத்தில் பணிபுரியும்போது சந்தித்த மனிதர்களை, சராசரி வாழ்வின் நெருடல்களை, புனிதங்களை, சந்தோஷங்களை, அபத்தங்களைப் பதிவித்திருப்பார். இது அவரது சொந்த அனுபவமாகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். சொந்த அனுபவங்களாகத்தான் இருக்கும் என்கிற நம் சராசரி அல்லது மூன்றாந்தர மனோபாவங்கள் குறுநாவலை வேகமாய் படிக்க உதவியாய் இருக்கிறது என்னுடைய ஜிகினாஸ்ரீயை உண்மையாக நினைத்த தமிழச்சியை நினைத்துக் கொள்கிறேன். நல்லவேளை அவர் உனக்கு புலியின் வால்தானே இருக்கிறதென கேட்காமல் போனார்.


எனக்கு இன்னும் வேண்டும் என்றாள்.அவளது முந்தானையை விலக்கி மார்பகங்களை வருடிய வண்ணம் இருந்தேன்.. குறியில் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது.. "இட் ஈஸ் வெரி ஸீதிஙக்
சார்" என்றாள் எனக்கு உச்சகட்ட சிலிர்ப்பு வந்துவிடுமோ என பயமாக இருந்தது.சமாதானத்திடம் போதையினூடே சொன்னேன்
"நான் வரம்புகள் அற்றவன்.ஆனால்
நீங்களாக என்னை நாடும்போது உங்களை நான் பரத்தையாக உணர வைக்க மாட்டேன்."
மெதுவாக மிக மிக மிருதுவாக நாங்கள் ஒருவரையொருவர் எங்கள் பிணைப்பிலிருந்து விலக்கிக் கொண்டோம்."இது தோழமை சமாதானம் பாலுறவு அல்ல" மேற்கில் he is my casual friend and occasional lover - erica jong ஒரு முக்கியமான படைப்பாளி என்றேன் அவளை வருடியவாறு "சமாதானம் நீங்கள் ஆதவனைப் படிக்க வேண்டும் உங்களுக்குப் பிடிக்கும் என்றேன் என வலது சுட்டுவிரலை அவளது அதரங்களின் நீள வாக்கில் வைத்தேன்.அவள் முத்தமிட்டாள். அன்று இரவு எனக்கு அற்புதமான கனவு ஒன்று வந்தது அது History of the world படத்தில் வந்த ஒன்று.அரசி இரவுக் கேளிக்கைக்காக ஒரு போர்வீரனைத் தேர்ந்தெடுக்க அனைத்து வீரர்களையும் நிர்வாணமாக அணிவகுக்கும்படிச் செய்து நீளமான குறிகொண்ட ஒரு வீரனைத் தேர்ந்தெடுப்பாள்.அரசியின் முகம் சமாதானத்தைப் போலவும் வீரனின் முகம் என்னை ஒத்ததாகவும் இருந்தது.

பதிப்பகம்:தமிழினி பக்கங்கள்:128

2.ஆத்மாநாம் படைப்புகள்

ஆத்மாநாமின் கவிதைகள் அறிமுகமான புதிதில் என்னை உலுக்கிப்போட்டது. இவரைப் படிப்பதற்கு முன்பே கேள்விப்பட்ட இவரது பெயரின் மீதிருந்த வசீகரமும் அத்தோடு இவரது தற்கொலையும் அற்பாயுளும் இவரின் மீது பிரியம் கொள்ள மிகவும் ஏதுவாய் இருந்தது. (தற்கொலை செய்து கொள்ளும் கவிஞர்கள் என்னை வசீகரிக்கிறார்கள் எனச் சொன்னால் எத்தனை குரூரமான மனம் என நினைத்துக்கொள்வீர்களா?).பிரம்மராஜன் தொகுத்து காலச்சுவடின் வெளியீடாக வந்திருக்கும் இத் தொகுப்பு ஆத்மாநாமின் கவிதைகள், மொழிபெயர்ப்புகள்,கட்டுரைகள்,கடிதங்கள் மற்றும் பிரம்மராஜனுடனான உரையாடல்களென முழுமையான தொகுப்பாய் வந்திருக்கிறது.(அநேகம் பேரிடம் இருக்குமென நம்புகிறேன்) .

ஆத்மார்த்தமான ஒன்றுதல்தான் கவிதையாக முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர்.பிரச்சார கவிதைகளுக்கும் வானம்பாடி கவிதைகளுக்குமான எதிர் குரல்களைத் தொடர்ச்சியாய் எழுப்பி வந்தவர்..'ழ' என்கிற கவிதை ஏட்டின் ஆசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, கட்டுரையாரளாக, விமர்சகராகவுமிருந்தவர். வாழ்ந்திருந்த சொற்ப காலகட்டத்தினுள் அசாத்தியங்களை எழுத்தில் நிறைவேற்றிக் காட்டியவர் எனக்கு மிகவும் பிடித்த கவிதைக்காரர் வேறென்ன சொல்ல?...

உதிரும் மலரின் கணிதத்தை
என்றாவது நீங்கள் யோசித்திருந்தால்
மட்டும்இது புரியும்
இல்லை என்னோடு எப்போதும்உறவாடும்
பாறையைக் கேளுங்கள்..

அவரவர் பாட்டுக்கு
எல்லோரும் அவரவர் பாட்டுக்கு
ஒன்றுக்கிருந்துகொண்டிருந்தார்கள்
நான் நுழைந்ததும் அவையிலே அமைதி
நான் கேட்டேன்
ஏன் நிறுத்தி விட்டீர்கள்
அவரவர் போதனைக்கேற்ப
திரும்பிப் பார்த்தேன்
எல்லாம் உன்னால்தான்
உற்றுப் பார்த்தேன்
கேட்டது ஒரு குரல்
ஒன்றும் விளங்கவில்லை
குப்புற விழுந்து பார்த்தேன்
எல்லாம்நின்ற நிலையிலேயே
அரங்கேறிக்கொண்டிருந்தது
தாவிக் குதித்தேன்
பாதாளச் சாக்கடை வறண்டிருந்தது
எங்கும் நில நடுக்கும்
மெல்ல எட்டிப் பார்த்தேன்
இரண்டு கையளவு
ஒற்றைச் சூர்யகாந்திப் பூ....

விடு
இந்த மரங்களுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னை எரித்துவிடு
இந்த மலர்களுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னைப் புதைத்துவிடு
இம்மனிதர்களுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னை வாழ விடு
இச்சிட்டுக் குருவிகளுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னைப் பறக்க விடு..

வாலியின் பொய்க்கால் குதிரை எனும் கவிதைத் தொகுப்பினை வேதம் என்பவர் மிகவும் சிலாகித்து ஹிந்து நாளேட்டினில் எழுதியிருந்ததற்கு எதிர்குரலாய் இக்கடிதத்தை அனுப்பியிருந்திருக்கிரார்.ஹிந்து இக்கடிதத்தை வெளியிடவில்லை வெளியிடாததில் ஆச்சர்யம் ஏதுமில்லை.அவர்கள் வெளியிட்டிருந்தால்தான் ஆச்சர்யப்பட்டிருக்க வேண்டும். உணமைக்கும் ஹிந்துவிற்கும் தான் வெகுதூரமாயிற்றே...

ATMANAM
390 M.T.H ROAD
AmbatturMadras -600 o53

letters to the editorThe HinduMadras - 600 002

Dear Sir,
Under books column vedham has reviewed poikkal kudhiraigal by vaali.None else break through chicken hearted masterpiece type of word abuses sprinkled throughout the comment culminating in eulogizing the film lyricist as the one who is at the top of the ladder among the pudhukkavithai history-of-free verse (verse libre)-in-Tamil.Not a good experience of poetry in Tamil.The coinage puthukkavithai is obsolete now.There is only contemporary Tamil poetry with its roots in traditional tamil poetry.Vaali and his poetry if one is confused so,is not merely an accident in Tamil poetry but a fatal accident.The bundle of words he uses as potry has been inspired by the so called poets vairamuthu,mu.Mehta etc..who are simply side walkers in free Tamil verse.Vaali's lines have no basis in the field of experience.At the most they are clever manipulation of words.The lines quotated by vedham are being written by the nth rate side trackers.When one looks at rich indian poetic heritage and also contemporary world poetry these word manipulators look like tiny,insignificant clowns.I wish The Hindu introduce positive tamil poetry to its discerning readers.There are positive poets in Tamil who have contributed the varied life of Tamils in indian and international milieu and enriched Tamil poetry to world standards.They include Bharathi,Ka.Na.Su. to Ra.Srinivasan.

Yours Sincerely,Atmanam


3.Message in a Bottle -Nicholas Sparks



என்னுடைய ஆங்கில வாசிப்பொன்றும் அத்தனைப் பிரமானமானதில்லை சித்தார்த் அறிமுகமாவதற்கு முன்பு வரை sidney shelton ம் chase ம் jefrey archar ம் ஒரு சில ரஷ்யப் புதினங்களும்தான் பழக்கமாயிருந்தன. Jumbha lahari ம் இந்த புத்தகமும் Umbertho Eco வும் ஆங்கில வடிவ மார்க்வெஸ்ம் அவன் தந்ததே. மென்மையான காதல் கதைகளை சுவாரஸ்யத்தோடு எழுதுவது ரசிக்க அலாதியான ஒன்று. பயணங்களில், மிகுந்த சலிப்பாய் இருக்கும் தருணங்களில் படிக்க உகந்ததும் கூட. ஏற்கனவே மனைவியை இழந்த garrett தன் மனைவிக்கு எழுதும் காதல் கடிதங்களை ஒரு குடுவையினுள் வைத்துப் பூட்டி கடலில் கலக்கிறான் அப்படி மிதந்து வந்த ஒரு கடிதம் பத்திரிக்கையில் பத்தி எழுதும் theresa வை வந்தடைகிறது.விவாகரத்தாகி தன் மகனுடன் வசித்து வரும் theresa அக்கடிதத்தினால் ஈர்க்கப் படுகிறாள். தன்னுடைய பத்தியிலும் அக்கடிதத்தை பிரசுரிக்கிறாள்.அக்கடிதம் பெரும்பாலான வாசகர்களை ஈர்க்கிறது மற்ற இரண்டு கடிதங்களையும் தேடிப்பிடிக்கும் theresa, garrett ன் மீது காதல் வயப்படும் மிகச் சாதாரண கதை.நுட்பமான விவரணைகள் புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்க ஏதுவாய் இருக்கிறது.இந்தக் கடிதங்களை மொழிபெயர்க்கும் ஆசையும் இருந்தது சந்தர்ப்பம் வாய்க்கும்போது நிறைவேற்றப்பட வேண்டியவைகளில் ஒன்று என என் சோம்பல் சமூகத்திடம் இப்போதே சொல்லி வைக்கிறேன்.இந்த நாவல் இதே பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது Kevin costner நடிப்பில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் *நான் தேடிக்கொண்டிருக்கும் பட்டியல்களில் ஒன்று*.இவரது இன்னொரு நாவலான The Note book ம் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.கராமாவில் ஒரு கடையில் Note book ஐப் பார்த்தேன் அடுத்த முறை போகும்போது வாங்கிவிடவேண்டும்.

Life passes by now is the scenery outside a car window.I breathe and eat and sleep as i always did,but there seems to be no great purpose in my life that requires active participation on my part.I simply drift along like the messages i write you.I do not know where i am going or when i will get there.Even work does not take the pain away.I may be diving for my own pleasure or showing others how to do so,but when i return to the shop it seems empty without you,I stock and order as i always did,but even now I sometimes glance over my shoulder without thinking and call for you.....

Without you in my arms i feel an emptiness in my soul I find myself searching the crowds for your face-I know it is an imposibility but i cannot help myself.My search for you is a never ending quest that is doomed to fail.You and i had talked about what would happen if we were forced apart by circumstance,but i cannot keep the promise i made to you that night.i am sorry my darling but there will never be another to replace you The words i wishpered to you were folly and i should have realaised it then.You and you alone have always been the only thing i wanted,and now that you are gone,I have no desire to found another.Till death do us part,we whishpered in the church and i've come to belive that the words will ring true with the day finaly comes when i,too,am taken from these world.


என் வாசக/கி ஒருவர்/ள் என் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க
முயற்சித்தாலென்ன எனக் கேட்டிருந்தார் மறு வாசிப்புக்கே சாத்தியமா? என்கிற சஞ்சலம்தான் என் கவிதைகளின் மீதான மதிப்பீடுகளாக என்னிடம் இருக்கிறது.அதனால்தானோ என்னமோ புத்தகத்திற்கான ஆர்வங்கள் எதுவும் இல்லாமலிருக்கிறது.மேலும் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் பதியப்படும் கவிதைப் புத்தகங்களோடு இன்னுமொன்று என்பதான சலிப்புகளும் எட்டிப்பார்க்கின்றன.எனினும் ஆங்கில மொழிபெயர்ப்பை முயற்சித்துப்
பார்த்து என் பக்கத்தை படிக்கும் மிக சொற்பமானவர்களையும் கொல்லாமல்
விடப்போவதில்லை.
*இன்று மாலை Deira city center - Carrefour ல் இந்த படம் கிடைத்தது உடன் ஐந்து படங்களையும் வாங்கினேன்.துபாய் வாழ் திரைப்பட விரும்பிகள் இங்கு செல்லலாம் மிகச் சிறந்த படங்கள் பலவற்றைப் பார்த்தேன்.

Monday, January 7, 2008

உரையாடல் வடிவக் குறிப்புகள் அல்லது அய்யனார் குறிப்புகள்

கவிதை எழுதுவது என்பது காட்டுமிராண்டித்தனமானது-மார்க்ஸிய சிந்தனையாளர் தியோடர் அடோர்னோ

சமுதாயத்திற்கு கவிஞர்களால் எந்த வித நன்மையும் இல்லை,அவர்கள் சோம்பேறிகள் மட்டுமல்லாது விசும்பேறிகளும் கூட என்னுடைய குடியரசில் அவர்களுக்கு இடமில்லை எல்லோரையும் நாடு கடத்து - பிளாட்டோ


சுய விசாரணைகள் அல்லது தன்னைப் பற்றி யோசித்தல்(பற்றியே அல்ல) குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்யப்பட வேண்டிய ஒன்று.பொருத்திப் பார்த்து புளகாங்கிதம் அடைந்துகொள்வது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் பொருத்திப் பார்த்து வெட்கப்படுவதிலும் இருக்கிறது.இவ்வாறு இருக்கிறேன் என்பதை முழுமையாய் புரிந்துகொள்வது மட்டுமே நிறைவான ஒன்றாய் இருக்க முடியும்.தன் சார்ந்து இயங்குவது மட்டுமே நேர்மையானதாக இருக்க முடியும்.சுயநலம் என்ற வார்த்தையை தேவையில்லாத இன்ன பிற வார்த்தைகளோடு (தியாகம், பொதுநலம், நித்யகாதல், என்றென்றைக்குமான, நிலைத்திருக்க கூடிய ,இன்ன பிற ப்ளா ப்ளாக்கள்...)சேர்த்துவிடலாம். தன் வீர்யத்தை இழந்த சொற்களை சேகரிக்க வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தை இப்போது உணர்கிறேன்.

செய்து முடிக்கப்படாதவைகளின் கணம் சுமக்க முடியத ஒன்றாய் எப்போதும் இருக்கிறது.சார்ந்து வாழ்வதின் சோர்வுகள் தொடர்ந்தபடியே இருக்கிறது.நாளைக்கு, பிறகு, அப்புறம் ,மெதுவா, தேவையில்லை, அய்யோ! யோசிக்கத் தோணல!.. இந்த வார்த்தைகளை அதிகமாய் பிரயோகிக்கிறேன்.இத்தனை நாட்களாய் வாழ்ந்ததில் பெருமைப்பட்டுக் கொள்ள எதுவுமே இல்லை சிறுமைப்பட்டுக்கொள்ள நிறைய இருக்கிறது இருப்பினும் முன் பத்தியில் சொன்னது போல என்னை நான் முழுசாய் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். ஒன்றை எழுதிவிடுவது மிகச் சுலபமான ஒன்று அதை தன்னுடன் பொருத்திப் பார்ப்பது எத்தனை அலுப்பைத் தரும் என்பதினை எழுதி முடித்தவுடனேயே புரிந்து கொள்ள முடிகிறது.

எந்த ஒன்றைத் துவங்கும்போதும் என்னிலிருந்துதான் ஆரம்பிக்கிறேன் எந்த ஒன்றை முடிக்கும்போதும் என்னை அங்கு கொண்டு போய் விடுகிறேன். கவனித்தல் / பார்த்தல் (witnessing / watching) இரண்டிற்குமான வித்தியாசங்களை ஜேகே வோ ஓஷோவோ சொல்லியிருப்பார்கள் இரண்டும் ஒன்றுபோலவே தோன்றினாலும் இரண்டிற்குமான இடைவெளி மிக அதிகம்.வித்தியாசங்களை புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருக்கிறது. நம்புவது பின் நம்பிக்கை பொய்த்துப் போவது இதெல்லாம் அறியாமைகளின் குறைபாடுகள் மட்டுமேயன்றி சாராம்சத்தின் தவறுகள் எதுவுமே இல்லை. இதைப் புரிந்து கொள்வதே நம்முடைய குற்றவுணர்விலிருந்து நம்மை மீட்டெடுக்கும் வழி..(சமூகத்திற்கு திட்டவட்டமாக சிலதுகளை சொல்லிவிட வேண்டும் என இப்போதெல்லாம் கங்கணம் கட்டித் திரிகிறேன்)

அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போ! இந்த வார்த்தையை விட அருவெருப்பானது எதுவுமில்லை.எத்தனை விதயங்களில் சகித்துக் கொள்கிறேன்/ கொண்டிருக்கிறேன் சகித்துத், தவிர்த்து, கண்டுகொள்ளாமல் விட்டு அலுப்பாய் இருக்கிறது.எனக்கான ஒன்றை என்னுடையதை எப்போது தெரிவு செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை.எனக்கு மட்டுமேயான ஒன்று கிட்டும் என்ற நம்பிக்கைகள் கூட இப்போதெல்லாம் மெல்ல தன் வீர்யத்தை இழக்கிறது. நாம் வாழும் சமூகம் நம்மை சகித்து வாழ்வதற்கான தயாரிப்புகளை பிறந்த உடனே செய்துத் தர முன் வருகிறது/வந்துகொண்டிருக்கிறது.எதையும் சகித்துக் கொள்ளாது எனக்குப் பிடித்த வாழ்வினை எப்போதாவது வாழ்ந்திருக்கிறேனா? என யோசிக்கையில் நான் தனியாய் இருந்த காலகட்டங்கள்தான் நினைவில் வருகிறது.மதுரையில் வாழ்ந்த சொற்ப காலகட்டத்தில் அலுவலகம் தவிர்த்து வேறெந்த மனிதர்களையும் எனக்கு தெரியாது தெரிந்து கொள்ள விரும்பவில்லை.மிக விசாலமான அந்த வீட்டினுள் தனியொருவனாய் மிக நிம்மதியாய் கடந்துபோனது அப்போதைய நாட்கள்.அந்நாட்களில் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த பின் ஆடை அணியும் பழக்கமும் இல்லாதிருந்தது.அந்த சுதந்திரமும் நிம்மதியும் ப்ளாங்க் மனநிலையும் மீண்டும் எப்போது வாய்க்குமெனத் தெரியவில்லை.

இந்த எழுத்துச் சனி பிடித்ததிலிருந்து மண்டைக்குள் சதா ஏதாவது ஓடியபடியெ இருக்கிறது.சம்பவங்களை எல்லாம் எழுத்தாக மாற்றிப் பார்க்கிறது.எப்போதுமே சந்தையில் நிற்கின்ற உணர்வு எப்படியோ வந்துவிட்டது.மிக மிக அந்தரங்கமென சொல்லிக்கொள்ள என்னிடம் எதுவுமே இல்லாமல் போய்விட்டது.நகர்ந்துகொண்டே இருப்பது அலுப்பு தட்டக் கூடியதாய் இருக்கிறது.எங்காவது ஒரு இடத்தில் பட்டறையை போடவேண்டும்.எல்லாக் கருமத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்.வேறென்ன செய்ய?

நட்சத்திரங்கள் இறந்துபோனவனின் கண்களைப் போல இருக்கின்றன என்ற கவிஞர் சிவரமணியைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா?ஆனந்தவிகடனில் சில வருடங்களுக்கு முன்பு இவரது கவிதை ஒன்றினைப் படித்தேன்.சிவரமணி என்கிற பெயர் மறந்துபோய் கவிதை மட்டும் மனதில் ஒட்டிக்கொண்டது.யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் எமது குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கிவிடுகிறது.... என்பதாய் தொடங்கும்.அந்தக் கவிதையை அப்போதைய என் வாழ்வோடு தொடர்பு படுத்திக் கொண்டு பார்த்துக்கொண்டதால் அது அப்படியே மனதில் தங்கிவிட்டது.சேரனின் உயிர் கொல்லும் வார்த்தைகளை நேற்றுப் படித்துக்கொண்டிருந்த போது கவிஞர் சிவரமணி தற்கொலை செய்து கொண்டதை தெரிந்து கொள்ள முடிந்தது.அத்தோடு தற்கொலைக்கு முன் தன் கவிதைகளை எரித்து விட்டதாயும் நண்பர்களிடமிருந்த சில கவிதைகள் மட்டும் எஞ்சியிருப்பதாயும் சேரன் எழுதியிருந்தார்.அந்தக் கவிதைகள் எங்காவது கிடைக்குமா?

Sunday, January 6, 2008

புனிதர்களை எரிச்சலூட்டுதல் அல்லது சில சொல்லாடல்களுக்கான விளக்கமும் எஸ்தரைப் பற்றிய அறிமுகமும்

கோடைகால இரவுகள் மிகவும் அழகானது.இக்காலங்களில் விண்மீண்களின் பிரகாசம் மிக அதிகமாய் இருப்பதாகப்படும்.நிர்மல வானில் நட்சத்திரங்கள் (இதுபோன்ற தலைப்புடைய ஒரு புத்தகத்தை எங்கேயோ பார்த்த நினைவு) நிலவினோடு சேர்ந்து ஏற்படுத்தும் அமைதியும் அழகும் மிகச் சாந்தமானது,கிடைக் காவலுக்கு தாத்தாவுடன் போகும் இரவுகளில் இதுபோன்ற பளிச்சிடும் இரவினைப் பார்த்ததுண்டு.பிசாசுக் கதைகளையும்,வயோதிகத்தின் படித்துறையில் படிந்துபோன பதின்மங்களின் சிலாகிப்புகளையும் கேட்டபடி வானம் பார்த்துப் படுத்துக்கிடப்பேன்.ஏதோ ஒரு இடத்தில் பேச்சு உறைந்து சில் வண்டுகளின் பின்னிசை மட்டும் எங்கும் வியாபித்திருக்கும்.(இதை மோனவெளி என பின்னாளில் அர்த்தப்படுத்திக் கொண்டேன்).வாழ்வில் மிகச் சாதாரணமாய் கடந்துபோன தருணங்களை எழுத்துப் பூச்சு கொண்டு பின்னாளில் ஒரு ஓவியமாய் தீட்டுபவனை கவிஞன் என்றோ எழுத்தாளன் என்றோ அர்த்தப்படுத்திக் கொள்வதை நான் எதிர்க்கிறேன்.வாழ்வைச் சந்தைப்படுத்துபவனை அதுவும் மிக அழகாய் சந்தைப்படுத்துபவனை கயவன் என பெயரிட்டு அழைக்கலாம்.அல்லது வியாபாரி எனக் காறி உமிழலாம். எழுதப்படாதவை, சொல்லப்படாதவை, மிகைப்படுத்தாதவை மட்டுமே உயிர்த்தன்மை கொண்டிருக்கிறது.இது ஒருவித பிரச்சார தன்மை கொண்ட வாசகமாய்த் தென்பட்டாலும் இது உண்மையாகத்தான் இருக்கமுடியும்.

கோடைகால இரவுகளைப் பற்றி எதனால் எழுத ஆரம்பித்தேன் என சரியாய்த் தெரியவில்லை சரி.. இப்போது குளிர்கால இரவுகளைப் பற்றி யோசிப்போம்..குளிரும் இரவும் தூங்கிக்கழிக்கத்தான் ஏதுவாய் இருக்கும்... அல்லது நன்றாய் குடிக்கலாம்...கோடைகாலங்களை விட குளிர்காலங்கள் குடிப்பதற்கு உகந்தது...சிலருடன்,உண்மையாய் இருப்பவர்கள் என நம்புகிறவர்களிடம் அல்லது என்னைப் போன்ற இன்னொருத்த/தி யினுடன் குடிப்பது,குடித்தபடி பேசிக்கொண்டிருப்பது மிகவும் உவப்பான ஒன்று.எல்லாம் தீர்ந்த பின்னும் பேச்சும் -வெளியும், பேச்சும் - சொற்களும், வெறும் பேச்சு இவைகளைக் கொண்டு பிரபஞ்சத்தை நிரப்பி விடும் அதீதப் பிரயாசையும் அந்தத் தருணங்களில் ஏற்படும்.இனிப்பேச சொற்களில்லை அல்லது எல்லாம் பேசித்தீர்த்த காலினஸ் (குடிப்பதை பற்றி பேசிக்கொண்டிருப்பதால் மொழி கலந்து புதிய மொழி உருவாகும் என்பதை குறியீடாக காட்டியிருக்கிறேன்.அடூருக்கு குறியீடுகளின் மேல் நம்பிக்கையில்லையாம் ஆனால் காய்ந்த தென்னை ஓலை விழுவது மூத்த மரணத்தை உணர்த்துமாம்.எத்தனை சலித்த எரிச்சலான காட்சி இது.மலையாளிகள் முட்டாப் பசங்க இன்னும் அய்ம்பது வருசம் போனாலும் ராசாத்தி உன்னையும், குண்டான பெண்களையும்,கலைப்படம் என்கிற பெயரில் சில மொக்கைகளையும் விட்டுத் தொலையமாட்டானுங்க..நாவல் தடம் மாறுவதால் மலையாளிகளைப் பற்றி வேரொரு நாவலில்) ஏற்படும் வரை பேசிக்கொண்டிருக்க குளிர் இரவுகள் உகந்தது.காதலியோடு பயணிக்க,பயணித்துக் கடந்த தொலைவுகளின் சோர்வுகளோடு அவளைக் கட்டிக் கொண்டு தூங்கவும் குளிர் இரவுகள் உகந்தது (கலவி குறித்தான பிரக்ஞைப் பூர்வமான அறிவு எனக்கு இல்லாததால் தூங்குவதோடு நிறுத்திக்கொள்கிறேன்)

காதலில் துரோகம் என்பது நடைமுறையாகிவிட்டது.மேலும் துரோகம் என்ற சொல்லும் மிகைப்படுத்திக் கொள்ளப்பட்ட ஒன்றே.தேவைகள் பூர்த்தியான அல்லது உறவுகள் சலித்துப்போன பின் விலகுவது மிக நேர்மையான ஒன்றாய்த்தான் இருக்கமுடியும்.எனவே இந்த துரோகம் என்ற சொல்லாடலை நட்புக்குப் பயன்படுத்துவோம்.நம்ப வைத்துக் கழுத்தறுத்தல் நட்பில் சாத்தியப்படக்கூடிய மிகவும் அருவெருக்கத் தக்க ஒரு குணாதிசயம்.எனக்கு நண்பர்கள் மிக அதிகம் அதில் மிகவும் புளகாங்கிதம் அடைவதும் உண்டு.சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.கவச்சி நடிகை ஜிகினாஸ்ரீ (நடிகைன்னா இந்த மாதிரி பேர்தான் வைக்கனும்.. அப்பதான் ஒரு கிக் இருக்கும்.... இதிலலாம் கட்டுடைக்க முடியாது...)நான் ரோட்ல நடந்துபோனதை கார்ல இருந்து பாத்திருக்காங்க..அன்னிக்கு என்ன எழவாச்சோ நான் ரொம்ப அழகாபட்டிருக்கேன் போல.. (சரக்கு கிரக்கு அடிச்சிருந்தாங்களோ என்னமோ..)நம்ம மேல ஒரு இது வந்திருக்கு.. அந்த இத அவங்க என் நண்பர்கள் கிட்ட சொல்லியிருக்காங்க.. பயபுள்ளைகளுக்கு காதுல பொக...சடக் னு என் நண்பர்கள் குழு இரண்டா பிரிஞ்சது... ஒரு குழு எல்லாம் ஜிகினாக்கு அண்ணன்மார்களாகவும்... இன்னொரு குழு நெருக்கமான,அக்கறையுள்ள, உண்மையான தோழர்களாகவும் மாறிட்டாங்க.. (பெண்களோட உறவு ன்னா ஏண்டா மூதேவிகளா ஒடனே ஒரு லேபிள குத்திகிறீங்க?) எனக்கு அங்க இங்க இருந்த சில பெண் நண்பர்களுக்கும் இது தெரிஞ்சிபோய் பாத்துட்டிருந்த வேலையெல்லாம் உட்டுபுட்டு ஜிகினாவோட அந்தரங்க ஆலோசகர் அப்படிங்கிற தற்காலிக பெறுப்ப தானா முன் வந்து ஏத்துகிட்டாங்க..... இவர்கள் எல்லோரும் என்னைப் பற்றி ஜிகினா விடம் சொன்னவைகளின் சாராம்சத்தைக் கீழே தருகிறேன்..

1.என்னுடைய குறிக்கும் மற்ற ஆண்களின் குறிகளுக்கும் வித்தியாசங்கள் அதிகம் அல்லது வழக்கத்திலிருந்து மாறுபட்டது (இத எப்படா பாத்தீங்க!!)
2.சராசரி நீள அகல தடிமன்களுக்குள் என் குறி பொருந்திவரவில்லை (என்ன கொடும சார்!)
3.ஜிகினாஸ்ரீ யின் யோனியின் நீளத்தை விட என் குறி சிறியது (இத எப்படி தீர்மானிச்சாங்கன்னு இன்னிய வரிக்கும் டவுட்டு சார்!)
4 நான் சிகெரெட் பிடிக்கிறேன்.. வாரம் ஒரு முறை மதுவிடுதிக்கு சென்று குடிக்கிறேன் (தெனம் காலங்காத்தால வெளிக்கி போவேன் அத சொன்னீங்களாடா!!)
5 என் மர்ம உறுப்புகளில் நோய் தாக்கியுள்ளது.. எய்ட்ஸ் ஆக இருக்கலாம் (எவ்வளவு நேர்மை பாருங்க இருக்கலாமாம்..இதை அடித்துச் சொன்ன அண்ணன்மார்களில் ஒருத்தனின் மேல் மூத்திரம் பெய்யத் தோன்றியதை தனிக்கதையாக எழுதுகிறேன்)
6 என் பெண் நண்பர்கள் ஜிகினா வின் முடிவைக் கேட்டு அதிர்ச்சியும் திக்பிரமையும் அடைந்ததாகவும்,ஒரு பெண் முன்பொரு தரம் என்னுடன் கலவி கொள்ள வந்திருந்தபோது எனக்கு குறியிருக்குமிடத்தில் புலி வால் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடிவந்ததாகவும் சொன்னார்களாம்..

இப்போது துரோகம் என்ற சொல்லாடலுக்கான விளக்கத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்.(உங்களுக்கு என் மீதான நம்பிக்கையை எப்படி ஏற்படுத்த ..ம்ம்ம் சில காதல் கவிதைகளை என் பக்கத்தில் எழுதியிருக்கிறேன்..சிலது மென்மையாய் இருக்கும் அதைப் படித்த பின்பாவது என்னை நம்புவீர்களா?)

வேறு எதைப்பற்றி எழுதலாம் அல்லது விளக்கம் கொடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில் சிகரெட் பிடிக்கலாம் என தோன்றியதையும் எழுதிவிடுவது எனத் தோன்றியதையும் எழுதிவிடுகிறேன்.சிகெரெட் பிடித்து திரும்பி தொடர்ந்தால் தொடர்வேன் அல்லது இந்தப் பத்தியையே பிரசுரித்தாலும் பிரசுரித்துவிடுவேன்.
2

இருப்பு குறித்தான தீவிர விசாரிப்புகளில் நான் கண்டடைந்தது இந்தப் பிரபஞ்சத்தில் நாம் ஏனைய விலங்குகளோடு இன்னுமொரு விலங்கு என்பதைத்தான்.(இந்த உண்மையை இந்தப் பக்கத்தில் எத்தனையாவது முறையாக எழுதுகிறேன்?..திரும்ப திரும்ப இத மட்டுமே சொல்வது போரடிச்சா மன்னிச்சிக்க மக்கா...)இந்த உண்மைக்குப் பிறகு என்னிடம் தாழ்வுமனப்பான்மைகளும் தன் சார்ந்த பெரிதுபடுத்தல்களும் குறைந்து போயின எனத்தான் சொல்ல வேண்டும். இந்த விலங்கிற்கு நன்றாய் எழுத வருகிறது.. இந்த விலங்கு நன்றாய் சாப்பிடுகிறது... இந்த விலங்கு நன்றாய் குடிக்கிறது.. எனக்கூட சொல்லக் கூச்சமாக இருக்கிறது.. வேண்டுமானால் இது செயல்படுகிறது அல்லது இயக்கத்திலிருக்கிறது எனச் சொல்லிக்கொள்ளலாம்.
3

நாற்பதாம் இலக்க எண் கொண்ட வீட்டில் வசித்து வரும் எஸ்தருக்கு(வண்ணநிலவனின் எஸ்தர் இல்லை) தன் அழகின் மேல் கர்வம் அதிகம்.எஸ்தர் நிறைய ஆங்கிலப் புத்தகம் படிப்பாள். எஸ்தருக்கு முப்பத்து நான்கு முறை திருமணமாகியது. இருபத்தேழு ஆண்களையும் ஆறு பெண்களையும் ஒரு அரவாணியையும் திருமணம் செய்து கொண்டாள். புளிச் என துப்பும் வெற்றிலைக் காவியின் நிறம் தந்த அழகு.வாசித்திருந்த புத்தகங்கள் தந்த கர்வம் எல்லாமுமாய் சேர்ந்தவளை இறுமாப்பில் ஆழ்த்தியிருந்தது.நெருடாவின் பதிமூன்றாவது வழித்தோன்றலினோடு நிகழ்ந்த தொலைபேசி உரையாடல்கள் மூலம் எஸ்தர் அடைந்த கிளர்வுகள் வேறெப்போதும் அவள் பெற்றிராதது.இதை உணர்ந்த ஒரு நள்ளிரவில் குறைந்தபட்ச உச்சத்தைக் கூட தர இயலாத முப்பத்து நான்கு பேரையும் கார்பேஜ் பையில் போட்டுக் கட்டி எவரும் எழுந்திரித்திராத விடியலில் கடலில் தூக்கிப் போட்டு விட்டு வந்தாள்.போர்ஹே கொள்கைப் பரப்பு செயலாளனான பிரதியை எழுதுபவன் பரிந்துரைத்த மார்க்வெஸின் நூற்றாண்டுகால தனிமை வாசத்தை சூரியன் உதிப்பதற்கு பதிமூன்று விநாடிகளுக்கு முன்பு படித்து முடித்தாள்.பின்பு தன்னிடம் குவிந்திருந்த புத்தகங்கள் மிக அபத்தமானவை என்பதை உணரத் துவங்கினாள்.தான் நம்பியிருந்தவைகளின் வசீகரம் வெளிறத் துவங்கும்போது ஏற்படும் அருவெருப்புகளை பிரதியாளனும் அனுபவித்திருப்பதால் எஸ்தரின் மனக்கிலேசங்களையும் எழுதுவதினோடே உணரமுடிகிறது.புத்தகத்தின் பின்னட்டையிலிருந்த மார்க்வெஸின் புகைப்படத்தை கிழித்து படுக்கையின் மீது கிடத்தி அதன் மேல் படுத்துத் தூங்கிப் போனாள்.சூரியன் மறைந்து பின்பு எழுந்த எஸ்தர் அறை முழுக்க சிதறிக் கிடந்த புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினாள்.ரமணிசந்திரன் முதல் கொண்டு ஆப்பிரிக்க பழங்குடினரின் மொழியான புஷ்மெனில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட விலங்குகளின் விநோத பழக்கங்கள் நூல் வரைக்குமாய் அவளிடம் இருந்தவைகளை எண்ண முடியவில்லை.ஆனால் புத்தகங்களை கட்டப் பயன்பட்ட கார்பேஜ் பைகளை எண்ணிவிடலாம்.அதையும் எண்ணச் சோம்பல் பட்டு கடலில் எறியும்போது குறித்துவைத்துக்கொள்ளலாமென தற்போது குறிக்க மறந்து போனாள்.எல்லாப் பைகளும் தனியாளாய் அவள் கட்டி முடித்தபோது சூரியன் வருவதற்கு பதிமூன்று நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்தது.சோர்ந்து களைத்துப்போய் மார்க்வெஸின புகைப்படத்தை உற்றுப்பார்த்துவிட்டு அதன் மீதே படுத்துத் தூங்கிப்போனாள்.

நன்றாய் இருள் சூழ்ந்த பின்பு எழுந்திரித்த எஸ்தர் அதிர்ச்சியில் சில கணம் உறைந்துபோனாள்.அவள் தன்னுடைய வீட்டை ஒரு எலிப்பொந்தென நினைத்து வருந்தி வந்திருந்தாள்.இப்போது அவ்வீடு மிகப்பரந்ததாய் இருக்கிறது.விஸ்தாரமான கூடமும் மூன்று படுக்கையறைகளும் அவள் முன் பல்லைக்காட்டி இளித்துக்கொண்டிருக்கிறது.இது எப்படி நிகழ்ந்ததென யோசிக்கையில் கட்டப்பட்டிருந்த கார்பேஜ் பைகளுக்குள் இருந்து புத்தகங்கள் சப்தம் போட்டு சிரிப்பதைக் கேட்டாள்.தான் முட்டாளானதை உணர்ந்து இறுக்கமும் வன்மமும் மிகுந்து அம்மூட்டைகளை எட்டி உதைத்தாள்.நள்ளிரவு நெருங்கும் வரை வீட்டிற்குள் அலைந்தபடி இருந்தாள்.புத்தகங்கள் களைந்த வீடு வெளிக்கிப் போய் காலியான வயிற்றைப்போலிருக்கிறது என்ற உவமையோடு பொருத்திப்பார்த்து சத்தம் போட்டு சிரித்தாள்..

ஒரு பெண் சிரிப்பதோடு ஒன்றை முடிப்பது மிகப் பழைய அணுகுமுறைதான்.ஆனால் என்னைப்பொருத்தவரை நான் எந்த ஒன்றையும் ஆரம்பிக்கவும் முடிக்கவும் இன்னும் தயாராகவில்லை. அவ்வப்போது தோன்றுவதை மட்டுமே பதிகிறேன் என்பதால் இந்த எஸ்தரை நீட்டித்தோ குறைத்தோ பின்பொரு முறை சொல்லிவிடுகிறேன்.

Thursday, January 3, 2008

ஜனவரி-04 1996

எப்போதாவது வரும் கனவுகளில்
எப்போதும் வருகிறதுனது பிம்பம்
சாத்தியமாகியிருந்திருப்பவைகளைப் பற்றிய நினைவுகளோடு
சாத்தியமின்மைக்கான நிசங்கள்
கனவுத் தன்மையை
குரூரத்தோடு இடம்பெயர்க்கிறது
செயலற்றுப்போன எஞ்சியிருப்பவைகள்
குற்ற உணர்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு
உன் நிமித்தமெனும் சாக்குகளின் துணைகொண்டு
இருப்பை மதுவினால்/கேளிக்கைகளால் நிறைக்கிறது
அவைத் தனக்கான திருப்திகள் என்பதையுணரும்போது
உன் மரணத்தைப் போலவே
அர்த்தமற்றுப்போனது
உன்னைச் சுற்றியிருந்தவர்களின் இருப்பும்....

தொலைதூர சமவெளியொன்றில்
உனக்குப் பிடித்த புல்லாங்குழலை இசைத்துக்கொண்டிருப்பாய்
ஏழைகளே இல்லாத நகரமொன்றிலும்
ஏழைகளைத் தேடிப்பிடித்து
எதையாவது கொடுத்துக் கொண்டிருப்பாய்...
நீ பரிதாபப்படுவதற்கும்
பார்த்து இரங்குவதற்கும்
எவருமில்லா ஒரு நகரை உருவாக்கித்தர
சொர்கத்தின் கடவுளர்கள்
மிகுந்த சிரமப்பட்டிருக்ககூடும்

எதை நோக்கித் துவங்கியதுனது ஆரம்பம்?
எதை விடுத்துப் பறந்தது உன் கூட்டுப் பறவைகள்?
எல்லாவற்றிர்கும் காரணங்களை ஆராய்பவர்களிடம்
நான் எதைச் சொல்ல?
உன் மரணமும் பன்முகத் தன்மை கொண்டதென்பதை
இப்புனிதர்கள் அறியா வண்ணம்
அடர்வான சொற்களில்
சில ரகசியங்களைக் கொன்று புதைத்துவிடுகிறேன்
தேடியெடுப்பவன் தூக்கமில்லாது போகட்டும்.....

உன்னைப்பிடித்திராத இந்தச் சனி
என்னைப் பிடித்துக்கொண்டிருப்பதால்
எந்தக் குற்றவுணர்வும் இல்லாது
என் கோப்பைகளை நிறைக்கிறேன்
உன்னைப் பற்றிக் கவியெழுதுகிறேன்
எங்கிருந்தாவது கைத்தட்டல் ஓசையோ
இல்லை காறிஉமிழும் ஓசையையோ
நீ கேட்க நேர்ந்தால் அது எனக்கானதில்லை
உனக்கானது....

சிறுமி விளையாட்டு



விடியலில் தூங்கப் பிடிக்கா சிறுமியொருத்தி
இரவைச் சுருட்டி மூலையில் எறிந்துவிட்டு
வெள்ளியின் துணைகொண்டு
குளக்கரை சென்றடைந்தாள்.

புதுமணப்பெண்ணின் கிறக்கத்தையொத்தபடி
மெல்லத் ததும்பியபடித் தூங்கிக்கொண்டிருந்த
சன்னமாய் பாசி படிந்த குளத்தினை
தொட்டு எழுப்பத் தயங்கி
படிக்கட்டுகளில் அமர்ந்தபடி
பார்த்துக்கொண்டிருந்தாள்.

சூரியக் கதிர்கள் அந்தரங்கத்தை அசைக்க
பதறி எழுந்தவள்
பார்த்துக்கொண்டிருந்தவளை அருகிலழைத்தாள்.
படியிறங்கிய சிறுமி
முத்தமிடும் சாயல்களில் குளத்தின் மேற்பரப்புகளில்
உதடு வைத்து உறிஞ்ச ஆரம்பித்தாள்
சடுதியில் மாயமாகிப் போன குளம்
சிறுமிக்கான விளையாட்டு மைதானமானது.

மய்யத்தில் தாயக் கட்டங்களைக் கிழிக்க
குச்சிகளைத் தேடிச் சோர்ந்து
எண்பதாயிரம் மைல் தொலைவிலிருக்கும்
ஐம்பதாயிரம் வயது கொண்ட ஆலமரத்தினை
வேருடன் பிடுங்கி தாயக் கட்டங்களை
வரைய ஆரம்பித்தாள்
நான்கு பக்கங்களாய் விரிவடைந்த அக்கட்டங்கள்
தனக்கான காய்கள் தேடி
வெளியில் நீண்டு
உருண்டையாயிருந்த சில விண்கற்களைத் தெரிவு செய்தது
புள்ளிகள் கொண்ட பகடைகளைத்
தேடி அலைந்த சிறுமி சலித்துப்போய்
கால்களால்
வரைந்த கட்டங்களை அழிக்க ஆரம்பித்தாள்
காலில் இடறிய விண்கற்களை
எட்டி உதைத்ததில் அவை உந்தப்பட்டு
பூமியைநோக்கி விரைகின்றன

எந்நேரத்திலும் உங்களின் பூமி அழியக்கூடும்...


...ஜெஸிக்கு

Featured Post

test

 test