Wednesday, May 28, 2008

இடைவெளி - எஸ்.சம்பத்

சன்னாசி பட்டியலிட்டிருந்த புத்தகங்களில் இந்தப் பெயரை முதலில் பார்த்தேன்.தொடர்ச்சியான தேடுதல்களில் இந்தப் புத்தகம் மட்டும் கிடைக்கவே இல்லை.சி.மோகன் எழுதிய ஒரு விமரிசனக் கட்டுரையும, தென்றல் பக்கத்தில் கிடைத்த இடைவெளி சிறுகதையும் மட்டும்தான் இணையத்தில் சம்பத்தை பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.சமீபத்தில் நாகார்சுனனும் இப்புத்தகத்தை மரணத்தின் மீதான தியானமெனக் குறிப்பிட்டிருந்தார்.தமிழின் சிறந்த நாவல்களைப் பட்டியலிட்டால் இந்தப் புத்தகத்தை தவிர்க்கமுடியாது / தவிர்க்ககூடாதென்றுதான் சொல்ல வேண்டும்.கருத்தியலும் புனைவும் கலந்த செவ்வியல் நாவலென்றும்,உலகத் தரத்திற்கிணையான தமிழின் ஒரே நாவலென்றும், சி.மோகன் சிலாகித்திருக்கிறார்.இந்தப் புத்தகத்தினை பெரும் தேடலுக்குப் பின எழுத்தாளர் திலிப்குமாரிடமிருந்து ஹரன் பிரசன்னா நகலெடுத்துத் தந்தார் அவருக்கு என் அன்பும் நன்றிகளும்.

உலகின் சாபக்கேடான மேதமைத் தனத்திற்கு நிகழும் அத்தனை குரூரங்களும் இவருக்கும் நேர்ந்திருக்கிறது(இதைப்பற்றி எழுதவே சலிப்பாயிருக்கிறது).உலகின் மற்ற பாகங்களிலாவது அடையாளமற்று இறந்தவனின் சாஸ்வதங்களை சிலாகிக்க ஆட்கள் இருக்கிறார்கள். நம் சூழலில் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு.இறந்தவன் அதற்கான முனைப்புகள் ஏதும் இல்லாமலிருந்தான், அதற்குப் பின்பும் அவன் எதிர்பார்த்திருக்கமாட்டான்.அவனை ஒருபுறமாய் தள்ளிவைத்துவிட்டு நாவலுக்குள் போவோம்.தெறிகள் எனும் காலாண்டிதழில் இந்த நாவல் வெளிவந்தது 1970 ன் இறுதியாய் இருக்கலாம்.க்ரியா இந்நாவலை 1984ல் அச்சில் கொண்டுவந்தது.

தினகரன் சாவின் மீது பயம் கொள்கிறான்.சாவென்றால் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலுறுகிறான்.சாவைப் பற்றித் தொடர்ச்சியாய் சிந்தித்து, அலைந்து, திரிந்து, சாவென்பது இடைவெளி எனக் கண்டறிந்து மகிழ்வுறுகிறான்.தினகரன் மூலமாக கருத்தியல் ரீதியாக சம்பத் புனைவதெல்லாம் அவரின் நெருக்கமான உலகத்தையே.ஒரு பார்வையாளனின் எழுத்துக்கும் பங்குபெறுபவனின்/பெற்றவனின் எழுத்துக்குமான வித்தியாசங்களை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.தனக்கு நெருக்கமான உலகத்தை மிக நுட்பமான முறையில் வெளிப்படுத்தும் எழுத்துக்கள் மிக அபூர்வமானவை.அந்த வகையில் ஆத்மாநாம், கோபிகிருஷ்ணன், வரிசையில் சம்பத்தும் இடம்பெறுகிறார்.

இடைவிடாது சாவு, தினகரனிடம் பேசியபடியே இருக்கிறது.வெவ்வேறு தருணங்களாய்,வெவ்வேறு ரூபங்களாய், சாவு எதை எதையோ உணர்த்துகிறது.கழிவிரக்கம், குற்றவுணர்வு, மிக அதீதமான தன்வயமென அவனுக்கான உலகம் புற உலகிலிருந்து அந்நியமானது(இஃதொரு பொதுப்படையான குணாதிசயம்தான்).குடும்பம் என்கிற அமைப்பில் தொலைந்து போகாது, தனக்கான உலகங்களில் மூழ்கிப்போகும் தினகரன் எல்லாவிடத்திலும் எல்லா செயல்களிலும் சாவைப் பார்க்கிறான். தொடர்ச்சியாய் அவ்னை அலைக்கழிக்கும் சூதாட்டத்தை வெற்றிக்கொள்ள தன் வசமிழந்து தனக்கு மீறிய தொகையினை செலவழிக்கத் துணிகிறான். நடுத்தர வர்க்கத்தும் கீழான அவனது குடும்பம் அலைக்கழிக்கப் படுவதையெல்லாம் எழுத்தில் சொல்லவில்லை.முழுக்க முழுக்க தனியொருவனின் எண்ணங்களும,சிதறல்களும்,மாத்திரமே முனைந்து சொல்லப்ப்பட்டிருக்கிறது.குதிரை பந்தயத்தினுள் நுழைந்து, ஜெயிக்க முடியாமல் வெளியேறி, மூன்று சீட்டு பக்கம் நகர்கிறான். மூன்று சீட்டையும், ஒரு தரம் ஜெயித்த பின் மறுபடி அதனுள் போக மறுத்துவிடுகிறான. இந்த இடத்தில் பூர்ஷ்வாத் தன்மையை மறுதலித்து உள்ளுணர்வு அல்லது உள்விருப்பம் சார்ந்து வாழும் தன்னையும் முன்னிருத்திக் கொள்கிறார்.

காதல் நிமித்தமான தோல்வியொன்றில் மொட்டைமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள விழைந்த நொடிக்கு முன்னதாக தினகரன் தரையில் தன் சடலத்தைப் பார்க்கிறான்.பயந்து பின் வாங்கி அதைப்பற்றியே யோசிக்கும்போது அந்நொடியில் நிகழ்ந்தவைகளை நிசப்தம் என அர்த்தப்படுத்திக்கொள்கிறான்.பின் ஒன்றிலிருந்து ஒன்றாக சாவு புதுப்புது பரிமாணங்களை அவனுள் நிகழ்த்துகிறது.
1.சாவு என்பது நிசப்தம்,தாங்கொனா நிசப்தம்.
2.சாவு என்பது வாழ்விற்கு கருணா சமுத்திரம்.
3.சாவு என்பவர் கண்காணிப்பாளர்.
4.சாவு மனிதர்களுக்காக காத்துக்கிடக்கிறது. இந்த காத்திருத்தல் என்பதைக் கண்டறிந்ததும் தினகரன் சிறிது சந்தோஷப்படுகிறான்.
காத்திருத்தல் - பிரபஞ்ச ரீதியில் எப்பேர்ப்பட்ட மகத்தான காத்திருத்தல் இது! சாஸ்வதத் தன்மை கொண்ட காத்திருப்பவன் இதுவும்,இந்த எண்ணமும் நெடுநாள் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.பின்பொரு தருணத்தில் சாவென்பது இடைவெளி எனப் புலப்படுகிறது அவனுக்கு.சுருக்கு கயிற்றின் முடிச்சினுக்கு இடையுள்ள இடைவெளி, கழுத்தை நெருக்கி சாவினுக்கு காரணமாய் அமையும்.ஆக சாவென்பது இடைவெளிதான் என தீர்மானமாய் நம்புகிறான். மகிழ்கிறான்.

வாசித்து முடித்த பின்பு ஏற்படும் அயர்ச்சி தவிர்க்க முடியாதது.இடைவெளி என்கிற வார்த்தைகள் தரும் அர்த்தம் மிகப்பிரம்மாண்டமானது. எல்லாவற்றுக்கும் இடைவெளி இருக்கிறது.இடைவெளியின் நுட்பத்தை புரிந்துகொள்பவன் முழுமையான அல்லது அதைப்போன்ற ஒன்றினுக்கான வேட்கையில் ஓரளவு வெற்றிபெறக்கூடும்.இரண்டு உறவுகளுக்கிடையேயுள்ள இடைவெளியைப் புரிந்துகொள்வது வீணான சிக்கலைத் தவிர்ப்பதுபோல் வாழ்விற்கும் சாவிற்குமான இடைவெளியைப் புரிந்துகொள்வதும் சிக்கலானவர்களின் சிக்கல்களை சிறிது தீர்க்கலாம்.வாழ்வென்பது இரண்டு இசைக்குறிப்புகளுக்கு இடைப்பட்ட மெளனம் அதாவது பிறப்புக்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட இடைவெளி என ஓஷோ வரையறுக்கிறார்.சம்பத் சாவென்பதே இடைவெளி என்கிறார்.

இடைவெளிகளை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.இந்த நாவல் என்னிடம் மின்நூல் வடிவத்தில் உள்ளது விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புச் சுட்டிகள்
1.http://tamilhelp.wordpress.com/2005/06/29/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/
2.http://www.tamilonline.com/thendral/SubCatContent.aspx?id=49&cid=2&sid=2&aid=1652
3.http://archives.aaraamthinai.com/ilakkiyam/padaippulagam/june2001/june08_idaiveli.asp

21 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பல வருடங்களுக்கு முன் வாசித்தது. புத்தகமும் இப்போது கையிலில்லை. என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தர இயலுமா ?

கதிர் said...

எனக்கு நன்றி சொல்லவெல்ல...

வால்பையன் said...

மிகுந்த ஆவலாய் இருக்கிறேன் இதை படிக்க,
இடைவெளி குறித்து எனக்குள்ள பாட்டிற்கும்,
அந்த புத்தகத்திலுள்ள பாட்டிற்கும் உள்ள முரண்பாடுகளை
தெரிந்து கொள்ளும் அவா எனக்குள் பெரும் ஏக்கத்தை கொடுக்கிறது.

சாக பிறந்தவன்
வால்பையன்

Ayyanar Viswanath said...

அனுப்பிட்டேன் சுந்தர் மற்றும் வால்பையன்

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் இந்த நாவலை மின்நூலாக்கியது ..வளரும் / வளர்ந்த எலக்கியவாதி தம்பி, தம்பி ,தம்பியேதான் :)

கே.என்.சிவராமன் said...

அய்யனார்,

என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தர இயலுமா ?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Anonymous said...

அய்யா....
பிளாக் எழுதி..பிலாப்பி போடும் தலைவா...நீவிர் வாழ்க..வளர்க..
புத்தகத்தின் லின்கை அனுப்பி வைத்தால் தமிழ்கூறும்..
இங்கிலீஷ்கூறும்...நல் உலகம் பயனடையும்...

- மயில்வண்ணன்
myilvannan@gmail.com

அபிமன்யு said...

இதை எனக்கு அனுப்ப இயலுமா அய்யனார்?
alaguraja.s@gmail.com

வலர் இளக்கியவாதி(வினைத்தொகை எனக்கொள்க.) தம்பிக்கு எனது நன்றிகள்:)

chandru / RVC said...

எனக்கு ஒரு காப்பி ப்ளீஸ்...
தம்பிக்கு நன்றிகள்.
rvchandrasekar@gmail.com

Unknown said...

1986ல் என்று நினைக்கிறேன். தில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செ.ரவீந்திரன் யதார்த்தா நாடகக் குழு ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றில் சம்பத் குறித்துப் பேசினார். மிக நீண்ட உரை ஒன்றை எழுதி வந்து படித்தார். அந்தக் கட்டுரை அவருடைய நூல் (பின் நோக்கிய மறுபார்வையில்... என்று நினைக்கிறேன்). அவரே பதிப்பித்தது. திலீப்பிடம் கிடைக்கலாம். சுமார் இருபது பக்கங்கள் இருக்கும் அந்தக் கட்டுரை. எனக்குத் தெரிந்து சம்பத் பற்றிய மிக அருமையான பதிவு அது. இடைவெளி புதினம் பற்றி நிறைய பேசினார் ரவீந்திரன்.

இந்தப் பதிவைப் படித்து அந்த நினைவு வந்தது. வீட்டில் உள்ள இடைவெளி நூலையும் ரவீந்திரன் கட்டுரைûயுயம் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ராகவன் தம்பி (யதார்த்தா கி.பென்னேஸ்வரன்), புது தில்லி

Mohandoss said...

அய்யனார்,

உங்க கிட்ட முன்னமே கேட்ட மாதிரி தான், எனக்கு இன்னமுமே கூட 'சாவு என்பது இடைவெளி' என்று சம்பத் சொல்லவருவதாக நீங்கள் சொல்லும் விஷயம் விளங்கலை.

உங்கள் மூலமா புத்தகம் கைவசம் கிடைத்தாலும் இன்னும் படிக்கவில்லை.

அந்த வரியை இன்னும் கொஞ்சம் விரிக்க முடியுமா? புத்தகம் படித்ததும் அதைப்பற்றி பேசலாம் என்று தான் முதலில் நினைத்தேன், பின்னர் கேட்டுவைப்போம் என்று வைக்கிறேன்.

Ayyanar Viswanath said...

பைத்தியக்காரன்,மயில்(பிலாப்பின்னா இன்னா தலைவா?),அபிமன்ய, RVC அனுப்பிவிட்டேன்.நன்றி

ராகவன்

பகிர்வுகளுக்கு நன்றி ரவீந்திரன் கட்டுரை கிடைத்தால் நகலெடுத்து பதிவியுங்களேன.மிகவும் உதவியாய் இருக்கும்.சம்பத்தின் படைப்புகள் எதுவும் பெற முடியாத இச்சூழலில் உங்களின் உதவிகரமாண செயலை எதிர்பார்க்கிறோம்.

Ayyanar Viswanath said...

மோகன்
தாமதத்திற்கு மாப்பு.சாவென்பது இடைவெளியென சம்பத் வரையறுக்கிறார்.என்ன அந்த இடைவெளி? எப்படி அதை புரிந்துகொள்வது? என்பதுதான் வாசகனின் சவாலாக இருக்கிறது.இந்த நாவல் முழுக்க முழுக்க தனியொருவரின் சிதறலகளாக, குழப்பங்களாக, பிறழ்வுகளாக நம் முன் விரிகிறது.தினகரன் சாவை வெவ்வேறு கோணங்களில் அனுகுகிறான்.நிசப்தமென்றும் கருணையென்றும் காத்திருப்பென்றும் சந்தர்ப்பங்களுக்கேற்ற வரையறையை அவனாய் தீர்மானிக்கிறான்.பின்பந்த வரையறையில் இருக்கும் அபத்தம் புரிந்து வெளிவ்ருகிறான்.கடைசியாய் சாவை இடைவெளியென்கிறான்.அந்த இடைவெளிக்கான வரையறை சிறிது சிக்கலானதாய் இருக்கிறது.உயிருள்ளவை உயிரற்றவை என எதுவும் கிடையாது எல்லாவற்றின் முடிவும் இடைவெளிதான் என அவனாய் தெளிவு கொள்கிறான்.பாறைப்பிளவு ஒரு பாறையை சிதைக்கிறது.சுருக்கு கயிற்றின் இடைவெளி ஒரு உயிரை முடித்து வைக்கிறது.அரூப இடைவெளிகளே வாழ்வை தீர்மானிக்கிரது என்பதாய் நகர்கிரது அவரின் புரிதல்.ஒரு வேளை இந்தப் புத்தகத்தினை நீங்கள் படித்த முடித்த பின்பு நமக்கும் ஒரு தெளிவு வரலாம்.அப்போது பேசினால் இன்னொரு பரிமாணத்திலும் இடைவெளியை அணுகலாம்.மெதுவாய் சாவை அணுகலாம்தானே :)

Thangamani said...

இந்தப்பதிவுக்கு நன்றி! இந்தப்புத்தகத்தை நான் வாசித்ததில்லை. எனக்கும் இதை அனுப்பிவைக்க முடியுமா?

உங்களுக்கும், மென்நூலாக்கிய தம்பிக்கும் நன்றிகள்.

ntmani@yahoo.com

Anonymous said...

please send one copy to
enbee.indian at gmail dot com

nandri.

-enbee

Anonymous said...

நாவலை அறிமுகபடுத்தியதிற்கு நன்றி.என்னுடைய அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்களேன்.

ss_kumarappan@yahoo.co.in

RAMDAS said...

enathu pirathi oruvarukku iraval koduthathu, vazhakkam polave thirumbi varavillai. ennudaiya minnanjal mugavarikkum anuppa iyaluma ?

RAMDAS said...

my email id is
parithimal63@gmail.com

Ravi said...

I would very much appreciate receiving an electronic copy of this work of S. Sampath.

Warm regards,
Ravi

My e-mail address is:

ravi93@gmail.com

Unknown said...

என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தர இயலுமா

Jegadeesh Kumar said...

அன்பு அய்யனார். நாவல் பற்றிய பார்வை அற்புதம். அதற்கு நன்றி.

நான் இன்னும் வாசிக்கவில்லை.

எனக்கு மின் புத்தகம் அனுப்பித்தர இயலுமா?

jekay2ab@live.com

thanks

sugi said...

உங்க பதிவுகள் ஒன்னொன்னா படிச்சிட்டு இருக்கேன்.. மூவிஸ் டௌன்லோட் போடறேன்.. நன்றி :-)

Featured Post

test

 test