Saturday, February 16, 2008

பிறழ்ந்த குறிப்புகள் அல்லது சொய பொலம்பல்



திடீர்னு எழுத ஒண்ணுமே தோணல...செம ப்ளாங்க..எல்லாத்து மேலவும் வெறுப்பு... என்ன எழுதி என்ன ஆக?..இத்தன நாள் இங்க கிறுக்கிட்டிருந்ததலாம் எத்தன அபத்தம்?..
செம கடுப்பா போச்சு..
---------------
இவரு ஒரு படம் பாப்பாராம் ..அத பெரிசா எழுதி கிழிப்பாராம்..நெறய பேருக்க தெரியாத படத்த எழுதினா இவரு பெரிய அறிவு சீவின்னு ஒலகம் நம்புமாம்..என்ன கொடும சார்?..முற்றுப் புள்ளியே வைக்காம எப்படிடா உன்னால எழுத முடியுது..??படிக்கிறவன காண்டாக்கனும்னு எழுதறியா?.. இல்ல நெசமாலுமே இப்படி எழுதினாத்தான் நீ பெரிய புடுங்கியா??..என்ன கவித அதுலாம்..? ஒரு மண்ணும் புரியல... எழுதற நீயாச்சும் புரிஞ்சிதான் எழுதிறுயா?...புனைவு கினைவு ன்னு என்னடா எழவு? என்ன பிரச்சின ஒனக்கு???..எலக்கியம்னா இப்படித்தானா?..இன்னாதான்யா சொல்ல வர்ரர நீ??
-------------
மக்களே இப்பலாம் செம கோவம் வருது..இன்னா பன்றதுன்னே தெரியல..மெய்னா இந்த ரொம்ப நல்லவன் மாதிரியே நடிக்கிறானுங்க பார் அந்த தாய்வலிங்களலாம் செருப்பால அடிக்கனும்னு தோணுது..இந்த கவித எழுதியே கொல்றானுங்கப்பா !!.. நீஈஈஈஈஈஈஈஈஈஈஈளமா கவித எழுதி பொண்ணு கண்ணு நெலா விழி மழ மசிரு ன்னு அய்யோ தாங்கல ..என் மக்களே எல்லா எழவுக்கும் பின்னால காமம்தான்யா இருக்கு..ஒடம்பு தான் மேட்டர் ..புரியுதா..புரிதா..புரியுதா..அதுல தப்பு எதுவுமே இல்ல மக்கா..நேரடியா எல்லாத்தையும் அணுக கத்துகங்கயா..நெஜத்த நெஜமா அணுகுங்கயா..எதுக்கு பொய் எதுக்கு பூச்சு..நீ ஒருபொண்ணு..நான் ஒரு பையன் உன்ன எனக்கு பிடிச்சிருக்கா?என்ன ஒனக்கு புடிச்சிருக்கா..முடிஞ்சிபோச்சி..எதுக்குடா கவித?? அய்யோஓஓஓஒ தாங்கல.....இதுலாங்கூட ஒரு பெரிய மேட்டரே இல்ல மக்கா..எங்க பாத்தாலும் அதிகாரத்தோட குவியல்..மனுசன மனுசனே அடக்கி ஆளனும்னு நெனக்கிறான்..தன் ஜாதி..தன் மதம்..தன் நம்பிக்க..தாந்தான் ஒசந்தவன் தான் தான் சொல்றதுதான் எல்லாம் கேட்கனும்..தாந்தான் புத்திசாலி.......போங்கடான்கோஓஓஓஓ
--------
கடேசியா எழுதுன பட விமர்சனத்துக்கு பெறகு முப்பது படத்துக்குமேல பார்க்க சந்தர்ப்பம் கெடச்சது..எல்லாமே செம படம்...ஒண்ணொண்ணும் ஒவ்வொரு அனுபவத்த தருது..ஆனா எத பத்தியுமே எழுத முடியல..கவித போட்டு ரொம்ப நாளாச்சி.. கத எதும் எழூத முடியல.. புனைவு கினைவுன்னு எதயாச்சிம் எழுதி மெரட்டலாம்னு பாத்தா அதுவும் முடியல... எதையாச்சிம் எழுதியே ஆகனும்ங்கிற நிர்பந்தம் மனசுக்குள்ள எப்படியோ பூந்துடுச்சி..எவ்ளோ அபத்தம் மக்கா இது..எழுத்துங்கிறது என்னா?..தன்னிலிருந்து மிகுந்து வரனும்..தன்னிலிருந்து.. தன் புரிதல்ல்ல இருந்து நெசத்தோட வரணும் அதான் எழுத்து..எதையாச்சிம் எழுதியே தீரனுங்கிறதவிட கேவலமானது எதுவுமே இல்ல...

சரி படத்துக்கு வருவோம் i could read the sky ன்னு ஒரு படம் பார்த்தேன்..என்னா படம்..யப்பா ஒண்ணுமே முடியல.. ஒரே ஒரு கேரக்டர் கேமிரா முன்னாடி உட்கார்ந்து படம் முழுக்க பேசுது.. அதனோட நினைவுகள நினைவுகளாவே படம் புடிச்சிருக்காங்க..அப்படியே மேகம் மாதிரி நினைவு..அதனோட ட்ராவல்..அதனோட அதனோட அழகு.. யப்பா!! செம படம்...கண்ணுக்குள்ளயிருந்து காட்சி... நெனவுக்குள்ள இருந்து நெனவு..சினிமோட்டாகிராபிங்கிறது ஒரு செயலா இல்லாம இயல்பா இருந்தா எப்படி இருக்கும் ..இப்ப நீங்க பாக்குறீங்க.. உங்க பார்வைல இருந்து எத்தன காட்சி கண்ணுக்குள்ள விழுது.. அத்தனையும் ஒரே ஸ்ட்ரிம்லைனா இல்லாம அதன் போக்கிலே ஒரு படம் பண்றதுலாம் எவ்ளோ பெரிய விசயம்..இத திரைல சாத்தியமாக்கியிருக்காங்க..முடிஞ்சா பாருங்க..tom tykwer னு ஒரு ஜெர்மன் டைரக்டர் கேள்விபட்டிருக்கிங்களா?..செம ஆள்..இவரோட ரெண்டு படம் பார்த்தேன் perfume அப்புறம் run lola run ரெண்டுமே மெரள வச்சது..இந்த perfume படம் பத்தி சன்னாசி ரொம்ப நாளைக்கு முன்னால எழுதியிருப்ப்பார்..இன்னொரு விசயம் மக்கா நான் இங்க எழுதுற எல்லா எழவையும் சன்னாசியோ, மதியோ, பொடிச்சியோ, இளங்கோவோ இன்னும் யார்யாரோ அவங்கவங்க மொழில எழுதிட்டாங்க..சும்மா எழுதினதயே எழுதுறோமேன்னு ஒரு வெறுப்பு வந்தாலும் எனக்கு தெரிஞ்சததான நான் எழுத முடியும்... போர்னோகிராபி அப்படிங்கிரதலாம் என்னபொருத்தவரை குண்டான பொம்பளங்க ப்ரா ஊக்க அவிழ்க்கிறதோட முடிஞ்சிபோச்சி அதுக்கும்மேல த ரியல் போர்னோ ..த ஒரிஜினல் போர்னோ அப்படிங்கிறதயெல்லாம் நுட்பமா சொன்னவர் pier paolo pasolini தான் இவரோட decemaron , edipo re , mammo roma படங்களில இவர் சொல்ல வர்ரதுலாம் கட்டுப்பாடற்ற காமம்தான்..அது தர்ர இன்பம், கிளர்வு, எல்லை மீறல், எல்லாத்தயும் தூரப்போடுறதூலாம் இன்னொரு சன்னல் திறப்பு..ஸ்டேன்லி குப்ரிக்க எத்தன பேருக்கு பிடிக்கும்னு தெரில அவரோட EYES WIDE SHUT ல வர்ர சில காட்சிகள் மெரள வச்சது..the shining ம் எனக்கு பிடிச்ச படம்..ஆனா full metal jacket படத்த செம்ம மொக்க படமாக்கியிருப்ப்பார்...எல்லாத்தையும் விட எனக்கு பிடிச்சது spartacus படம்தான் அந்த படத்தோட டைலாக்க நானும் என் அண்ணனும் நிறுத்தி நிறுத்தி கேட்டதுலாம் நெனவுக்கு வருது...felini யும் எனக்கு பிடிச்ச ஆள்தான் இவர் edgar allan poe வோட கதையொண்ண படமாக்கியிருப்பார்..tobby dammit னு செம படம்..இந்தாள நியோரியலிஸ்ட்னு சொல்றாங்களா என்ன? என்ன பொறுத்த வர இவர் ஒரு சர்ரியலிஸ்ட்..என்னோட அல்டீமேட் டைரக்டர்னா அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கி தான் ரஷ்யன் ஆள் ..இவரோட படம்ம்லாம் எனக்கு பயத்தையும் கிறுக்கையும் ஒண்ணா தந்தது..குறிப்பா nostalghia அய்யோ நொந்துட்டேன்..இவரோட படம்.. அந்த காட்சிகள் எல்லாமே ஓவியம் போல இருக்கும்..ஒர்ரே காட்சி 10 நிமிசமா அலையாம இருக்கும்..உங்களில யார்லாம் பொறுமசாலியோ அவங்க இவர் படத்த பார்க்கிறது நல்லது..solaris மாதிரிலாம் ஒரு படம் எவனாலயாவது எடுக்க முடியுமான்னு தெரில...
-----------
அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்
--------
நாகார்சுனன் வலையெழுத வந்திருப்பது மகிழ்ச்சிய தருது..இன்னமும் அங்கங்க இருக்க செறிவான ஆளுங்கலாம் வலையெழுதினா நல்லாருக்கும்..வலைங்கிறது என்ன பொருத்தவர ஒரு அட்டகாசமான ஊடகம்..பன்முகத் தன்மைக்கான கிளைத்தல்கள் அதிகமா இருக்கும் ஒரே ஊடகம் இதான்..என்ன பொருத்தவர வலை பின்நவீனத்தோட குறியீட்டு வடிவம்..இந்த பின்நவீனம் மக்கள பிடிச்சி எப்படிலாம் ஆட்டுது பாருங்க..நெனச்சாவே சிரிப்பு சிரிப்பா வருது..எந்த மசிராண்டியும் முழுசா புரிஞ்சிக்கிறதில்ல..ஒருத்தனுக்கு இஃதொரு ஆபாச அருவெருப்பான வடிவம்.. இன்னொருத்தனுக்கு தன் சொந்த நமைச்சல்களை அடுத்தவன திட்டி தீர்த்துக்குற வடிவம்..இன்னொருத்தனுக்கு பைத்தியம் பிடிக்கிறதுக்கான சாக்கு..இன்னொருத்தனுக்கு விதண்டாவாதம்..அப்ப எதுதாங்க ஒரிஜினல்..அட ஒரிஜினல் னு எதுவுமே கெடையாதுப்பா..அப்ப இது எது?..ஏன் எல்லாத்தையும் ஒண்ணுக்குள்ள அடக்கி வைக்கப் பார்க்குற?..கட்டுக்குள் அடங்காததுன்னு வேணும்னா வச்சிக்கோ!!...
சரி அதெல்லாம் வுடு உனுக்கு எந்தமாதிரி?....எனக்கிது நல்லமாதிரி ..அவ்ளோதான்...
-------
புதுப்பேட்டை செம படம் இல்ல..தமிழ்ல வந்த சொற்பமான நல்ல படங்களில ஒண்ணு..மொத முற பார்க்கும்போது எனக்கிந்த படம் பிடிக்கல.. ரெண்டாவது முற ரொம்ப பிடிச்சது... மூணாவது, நாலாவது, அஞ்சாவதுன்னு நேத்தி வரைக்குமா பத்து முறைக்கு மேல பாத்தும் சலிக்காத படம் இது..ஜமாலன் ஹேராம் க்கு எழுதினா மாதிரி இந்த படத்துக்கு மெதுவா எழுதனும்..அப்படியே city of god பத்தியும்..இந்த படத்தையும் நான் நெறய முற பாத்தேன்..உண்மை,வன்முறை, காமம், அரசியல், வெற்றி,போதை, போராட்டம் இதான் ஒலகத்திலேயே சந்தோசமான விசயங்கள்..
-------

14 comments:

குசும்பன் said...

//இதுக்குலாம் லேபிள் வேரயா? //

சூப்பர்:)))

குசும்பன் said...

//தன்னிலிருந்து மிகுந்து வரனும்..தன்னிலிருந்து//

மிஸ்டர் அய்யனார் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருது பாருங்க

அது தண்ணி மிகுந்து வரனும் தண்ணிலிருந்து:)))

KARTHIK said...

//ஒரே ஒரு கேரக்டர் கேமிரா முன்னாடி உட்கார்ந்து படம் முழுக்க பேசுது.. அதனோட நினைவுகள நினைவுகளாவே படம் புடிச்சிருக்காங்க..//
ஒருதடவ திரு.மதன் சொன்னாரு.SLEEP னு ஒரு படம் france எடுத்ததிருக்காங்க 8 மணிநேரம்.ஓடுமாம்.ஒருமனிதன் தூங்குரத அப்படியே படம் ஆக்கப்பட்டதாம்.வேற எந்த பாத்திரங்களும் கிடையாதாம்.

//run lola run //

ஒரு வருடம் இருக்கும் .இந்த படத்த பத்தி ஆவில உலக சினிமால படிச்சன்.1 நொடி தாமதித்தால் என்னவாகும்னு 3 விதமா கதை பண்ணிருப்பாங்க.அந்த படந்தானே ?.
இது பற்றி செழியன் மிக அருமையான விமர்சனம் எழுதிருப்பார்.படம் பார்த்தது மாதிரியே இருக்கும்
ஒருவேளை இதன் மறு பதிப்பு தான் 12B யாக இருக்குமென்று நான் எண்ணியதுண்டு.

//எந்த மசிராண்டியும் முழுசா புரிஞ்சிக்கிறதில்ல..//

POMO சம்பந்தமான எந்த புத்தகமும் புரியும் படி இல்லை
மத்தவங்களுக்கு புரியலை உங்களுக்கு புரிஞ்சிடுச்சு அவ்வளவுதான்.

//இதுக்குலாம் லேபிள் வேரயா? //

இப்பலாம் இதுவே லேபிள் ஆயிடுச்சு.
இது தான் பின் நவீனதுவமா ? ;))
நன்றி.

Unknown said...

Mikka nalla patihvu.... remba nalliku appuram

ILA (a) இளா said...

//புதுப்பேட்டை செம படம் இல்ல/
ஆமாங்க. இந்தப்படத்தை ஒரு முறைதான் பார்த்தேன். பார்த்ததுக்கப்புறம் உங்களுக்கு வந்த மாதிரியே என்னக்கும் எல்லாத்து மேலையும் வெறுப்பு வந்துருச்சு. அதனால அந்தப்படத்தை திரும்ப பார்க்கிறது இல்லீங்க. பொழுதுபோக்குக்காக படம் பார்த்தோம்ன சந்தோசம இருக்கனும் அப்படிங்கிறது என்னோட எண்ணம். என்னைப் பொறுத்த வரையிம் சினிமா பொழுதுபோக்கு மட்டுமே. அப்படிப்பட்டவனுக்கு வீடும் பிடிச்சது..சதிலீலாவதியும் பிடிச்சது..

கோபிநாத் said...

\\?..தன்னிலிருந்து மிகுந்து வரனும்..தன்னிலிருந்து.. தன் புரிதல்ல்ல இருந்து நெசத்தோட வரணும் அதான் எழுத்து..எதையாச்சிம் எழுதியே தீரனுங்கிறதவிட கேவலமானது எதுவுமே இல்ல... \\

ம்ம்ம்ம்ம்...ரொம்ப நாளைக்கு பிறகு உங்க பதிவுல உண்மையான வரிகள் ;))

விமர்சனம்...புதிய நடை சூப்பர் தல ;))

Ayyanar Viswanath said...

குசும்பர்:அடங்கு ராசா

கார்த்திக்:மதன் சொன்ன படம் பத்தி நானும் கேள்விபட்டது தான் ..பார்க்கல..btw pm பத்தி சொன்னது ஒரு general statement எனக்கும் சேர்த்துதான்:) நன்றி

காந்த்:நன்றி

Ayyanar Viswanath said...

இளா:வீடு சதிலீலாவதி ரெண்டுமெ நல்ல படம்..ஆனா வீடு பொழுதுபோக்கு படம் இல்லையே :)

கோபி:டேங்க்ஸ்யா

Anonymous said...

//ஒருவேளை இதன் மறு பதிப்பு தான் 12B யாக இருக்குமென்று நான் எண்ணியதுண்டு.

//

12B is inspired by 'Sliding Doors'.

ஈழநாதன்(Eelanathan) said...

அய்யனார் திரைப்பட இயக்குனர்களில் உங்கள் விருப்பத் தேர்வுகளில் என்னோடொத்த அலைவரிசை இருக்கிறது.

பிறமொழிகளில் வந்த நல்ல திரைப்படங்களைப் பற்றிப் பேசும்போது விகடனில் வந்திருக்கும் குடிசை ஜெயபாரதி போன்றோரின் புலம்பலையும் ஒருங்கே கேட்க நேர்வது தமிழ் திரைப்படங்களின் சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும்

கோவை சிபி said...

புதுப்பேட்டை, வடசென்னை வாழ்க்கையை ஒரளவிற்கு உண்மையாக பதிவு செய்த திரைப்படம்.தனுஸ் கேரக்டரை தவிர்த்துவிட்டு பார்த்தால் நல்ல திரைப்படம்.

ஜமாலன் said...

//போர்னோகிராபி அப்படிங்கிரதலாம் என்னபொருத்தவரை குண்டான பொம்பளங்க ப்ரா ஊக்க அவிழ்க்கிறதோட முடிஞ்சிபோச்சி//

குண்டான பொம்பள்கள ரசிப்பது ஓடிபல் சிக்கல் என்கிறது பிராய்டியம். பெருமுலைகளின் பின்னிருக்கும் சிக்கல் பற்றியது. Passolini Odipus rex பார்த்திரப்பீர்கள்.

//அதுக்கும்மேல த ரியல் போர்னோ ..த ஒரிஜினல் போர்னோ அப்படிங்கிறதயெல்லாம் நுட்பமா சொன்னவர் pier paolo pasolini தான் இவரோட decemaron , edipo re , mammo roma படங்களில இவர் சொல்ல வர்ரதுலாம் கட்டுப்பாடற்ற காமம்தான்..அது தர்ர இன்பம், கிளர்வு, எல்லை மீறல், எல்லாத்தயும் தூரப்போடுறதூலாம் இன்னொரு சன்னல் திறப்பு..//

இவரோட படங்களில் முக்கியமானது "gospal according to st. mathew" "Theoram" "Solo. 120 days of sodomy" and "arabian nights" இவை எல்லாம் ஆங்கிலபபெயர்கள். அராபியன் நைட்ஸ் அருமையான படம். பசோலினி உடல் மற்றும் ஆன்மா எல்லாவற்றையும் அலசியவர். இறுதிப்பட கிளைமாக்ஸபோலவே தனது காதலனால் கொல்லப்பட்டவர். அவரது படங்கள் எல்லாம் உடல் குறித்த நுட்பமான போர்ணோ இலக்கியங்கள்தான்.

இதைவிடவும் classic porno Nagasimo Osama வின் in the realm of sense and in the realm of passion ம் வாய்ப்பிருந்தால் பாருங்கள் அய்யனார். கட்டற்ற கலவியின் உச்சம் அவை. பெண்ணிய நோக்கிலான படங்கள். விறைத்துநிற்கும் இராணுவ உடல்களுக்க எதிரான புணர்ச்சியில் கிளர்ச்சியுற்ற உடல் பற்றியவை. உங்கள் பட தேர்வுகள் அருமை.

மீண்டும் புத்தணர்ச்சியுடன் அய்யானரின் புனைவுகளுக்காக காத்திருக்கிறோம்.

Ayyanar Viswanath said...

தகவலுக்கு நன்றி அனானி

ஈழநாதன்: நன்றி

சிபி:தனுஸ் கேரக்டர்ல என்னங்க பிரச்சின?

Ayyanar Viswanath said...

ஜமாலன்
"gospal according to st. mathew" ப்டம் கேள்வி பட்டிருக்கேன் மத்ததுலாம் புதுசு... in the realm of sense and in the realm of passion ம் கேள்விபட்டதில்ல புதிய பல தகவல்களுக்கு நன்றி...ஒருவகைல தமிழ்நாட்ல பெரும்பாலானோருக்கு இந்த ஒடிபல் சிக்கல் இருக்கும்னு நெனக்கிறேன் :))

Featured Post

test

 test