Monday, January 14, 2008

கண்மணி டீச்சரும் ஜார்ஜ் புஷ்ஷும் மஞ்சூராரும்மொக்கை போட டீச்சரும் புத்தாண்டு சபதமெழுத மஞ்சூராரும் அழைத்த பின் என்ன எழுதுவதென யோசித்து மண்டை குளிர்ந்ததுதான் மிச்சம்.மொக்கைத் தழலாரின் பதிவுகள் ஆசிப்பின் ட்ரேட் மார்க் மொக்ககளை மேய்ந்தும் எந்த தலைப்பிலெழுத எனத் தோன்றவே இல்லை.மொக்கைத் தியரிகள் குறித்து உஷாவின் வரையறைகள் மொக்கைக்கான சாரங்களை மற்றும் அழகியலை மிக அழுத்தமாய் பதிவிக்கிறது.நாமெழுதுவதெல்லாமே மொக்கைகள்தான் என்கிற மங்கையின் உண்மை இத் தொடரின் நுண்ணரசியலை மிக அழுத்தமாய் நம் கண் முன் நிறுத்துகிறது.இத்தகைய சூழலில் கதிர் எழுதிய எறும்புகளின் தியரி மிகச் சிறந்த மாந்திரீக யதார்த்தவியல் மொக்கை குறிப்பு.காப்பிக் கோப்பைகளில் மதுவை சுவைக்கும் அவனுடைய பழக்கத்தையும் உள்நுழைத்திருப்பது செறிவான சம தள புனைவு.கப்பியின் முற்றுப்புள்ளிகள் குறைவான மொக்கை மிகச் சிறந்த அ புனைவு.

புத்தாண்டு சபதங்கள் எப்போதுமே இறுக்கமான ஒன்று புதிய வருடத்தில் எல்லாவற்றையும் அழித்துவிட்டு புதிதாய் துவங்கும் ஆவலில் டிசம்பர் இறுதிகளில் வழக்கத்திற்கதிகமாக விட வேண்டியவைகளை செய்து கொள்வது இதற்கு முந்தைய ஆண்டுகளின் வழக்கமாக இருந்தது.இந்த வருடத்தில அது போன்றெதுவும் இல்லை.குற்ற உணர்வுகள் என்பதிலிருந்து மீண்டெழுவதின துவக்கப் புள்ளியாக இதை நான் என்னிலிருந்து அணுகுகிறேன். சென்ற வருட அனுபவங்களைப் பகிர்வது உங்களுக்குப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நாளொன்றுக்கு 7 முதல் 8 சிகெரெட்டுகளை ஊதி தள்ளுவது வழக்கம்.கொளுத்தும் வெயிலில் ஒரு கையில் டீயும் இன்னொரு கையில் கிங்க்ஸுமாய் சென்னையில் எங்காவது ஒர் பொட் டீக் கடையில்(இந்த மனுசன ரொம்ப நாளாக் காணோம்) என்னைப் பார்த்திருக்கலாம். இங்கு வந்த பிறகு கிங்ஸின் பரம திருப்தியை இழந்து போனேன் மார்ல்ப்ரோ முதல் கொண்டு டன்ஹில், எலெம் வரை எல்லாம் முயற்சித்து எலெமில் நிற்கிறது.இங்கு வந்த பின் சிகரெட் புகைப்பதும் குறைந்து போயிற்று.நாளொன்றுக்கு இரண்டு (வார இறுதிகளில் சற்றுக் கூடலாம் ) மட்டும் என்பதால் இந்த வருட சபதங்கள் தேவை இல்லாத ஒன்றாய் போய்விட்டது.

அ.கதிரும் நானும் புகைப்பது எல் எம்
ஆ.கோபியும் சென்ஷியும் புகைப்பது மார்ல்ப்ரோ
இ.நண்பனும் முத்துக்குமரனும் ரோத்மன்ஸ்
ஈ.அபிஅப்பா புகைப்பது போன்
உ.குசும்பர்,லொடுக்கு,மின்னல் மற்றும் ஆசிப்புக்கான காஜா பிராண்டுகள் கிடைப்பது அபூர்வமாகிவிட்டதால் அவர்கள் புகைப்பதில்லை.

ஜார்ஜ்புஷ் துபாய் வந்திருப்பதால் நகரின் பிரதான சாலைகள் மூடப்பட்டு விட்டன. துபை வாழ் மக்களுக்கு இன்று விடுமுறை. லேசான தூறலும், மேகங்கள் சூழ்ந்த இருளும், வரவேற்பரையில் கவிழ்ந்திருக்கும் அமைதியும் மிகப் பரவசமான இன்னொரு நாளின் மிக அழகான மதியப் பொழுதில் என்னால் எழுதப்படுகிறது இம்மொக்கை.

கடைசிக்குறிப்பாய் ஒரு கிசுகிசு
ஊ.குசும்பர் டாவடிக்கும் பெண்ணின் பெயர் ம வில் தொடங்கி சு வில் முடியும் இடையில் ஒரே எழுத்து மட்டும்தான்.
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...