Friday, December 14, 2007

பில்லா - தலைல ராக்ஸ்நாவல்களைத் திரைப்படமாக்குவதில் தமிழ்சூழலில் இருக்கும் சிக்கலை விட ரீமேக் திரைப்படஙகளுக்கு அதிக சிக்கல்கள்.ஏற்கனவே தெரிந்த ஒரு கதையை வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தை மீண்டும் பார்ப்பதென்பது அலுப்புத் தட்டக்கூடிய ஒன்றே. இதை நேர்த்தியான திரைக்கதையின் மூலமே சரிகட்ட இயலும்.விறுவிறுப்பான காட்சியமைப்புகள், பொருத்தமான நடிகர்கள்,உடை,இடத்தேர்வு போன்றவைகள் ரீமேக திரைப்படங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற திரைப்படங்கள் மூலம் நேர்த்தியான வெகுசன இயக்குநர் என்ற அடையாளத்தைப் பெற்றிருந்த விஷ்ணுவர்த்தன் பில்லாவின் சொதப்பலான திரைக்கதையில் மற்றும் மேற்சொன்ன முக்கியமான விதயங்களில் சறுக்கியிருக்கிறார். திரைக்கதையில் ட்விஸ்ட் என மெனக்கெட்டிருப்பதற்கு பதிலாய் திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம்.

மலேசியாவின் தரமான ஓட்டல்கள் மற்றும் வசதியான அடிப்படைக் கட்டமைப்புகள் படத்திற்கான ரிச்னெஸை தானாகவேத் தருகிறது.ஓட்டல்களைத் தேர்வு செய்திருந்ததில் காட்டியிருந்த சிரத்தையை படமாக்கப் பட்ட இடத்திலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.ஏறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் அந்த இரட்டைக்கோபுர கட்டிடம் வருவது மகா எரிச்சல்.தமிழனுக்கு கூலிங்க் க்ளாஸ் மேல் அப்படியென்ன காதலோ? சண்டைக் காட்சிகளில், நள்ளிரவில் என எல்லா நேரங்களிலும் எல்லா கதா பாத்திரங்களும் கூலிங்க் க்ளாசோடு வலம் வருகிறார்கள்.அஜித்தோடு நமீதா, நயன், துணைநடிகர்கள் என எல்லாரும் கூலிங்க் க்ளாஸ் சகிதமாகத்தான் திரிகிறார்கள்.ப்ளாக் சூட், கச்சிதமான உடல் என அட்டகாசமாய் பொருந்தும் அஜித் பாடிலேங்க்வேஜ் வாய்ஸ் மாடுலேஷன் என எல்லாவற்றிலும் கோட்டை விட்டிருப்பது பரிதாபம். மனிதருக்கு இன்னும் நேரம் சரியாகவில்லையோ? ஒரு படம் ஓடினால் நான்கு படம் சறுக்குகிறது.

தமிழனின் காம வடிகாலான நமீதாவை நயன் ஓரம் கட்ட முயற்சித்திருக்கிறார்.சிம்புவின் மீதிருக்கும் கோபத்தை அவர் இப்படிக் காட்டியிருக்க வேண்டாம்.பில்லா கதாநாயகிக்களுக்கான படம் இல்லையெனினும் ஸ்ரீப்ரியாவின் கவர்ச்சியான முகமும் பெரிய்ய கண்களும் பழைய பில்லாவிற்கு ஒரு கிக்கைத் தந்தது.அந்த கிக் இதில் இல்லை.நயன் இறுக்கமான பனியனோடு கன் னை தூக்கிக் கொண்டு நடந்து போகும்போது இந்த அம்மணிக்கு ஏன்யா இதெல்லாம் என ஆசிப் முனகினார். நயன் அட்டகாசமாய் நடித்திருந்த ராப்பகல் திரைப்படம் கண்முன் வந்து போனதோ என்னமோ.சந்தானம் வந்துபோகும் ஓரிரு இடங்களில் சிரிப்பை வரவைக்கிறார்.சிரிப்பு போலிசாக வரும் பிரபு எல்லாக் காட்சிகளிலும் சிரிப்பை வரவைக்கிறார் (பிரபு டிஎஸ்பி யா? என்ன கொடும சார்!)

மை நேம் ஈஸ் பில்லா பாடலை கொன்றிருப்பதுதான் உச்சகட்ட எரிச்சல்.எஸ்பிபியின் அழுத்தமான குரலும் நடுநடுவில் சிரிப்புகளோடு கம்பீரமாய் பாடப்பட்டிருந்த அப்பாடலை ஏதோ ஒரு மென்மையானப் பாடகர் பாடிக் கேட்பதை விட கொடுமை வேறெதுவும் இருக்கமுடியாது.எஸ்பிபியின் கால்ஷீட் கிடைக்கவில்லையா என்ன? படத்தில் ஈர்க்கும்படியாய் எதுவுமே இல்லையா? என்பதற்கு படம் மிக நீளமாய் இல்லை என்கிற நிறையைத்தான் என்னால் சொல்லமுடிகிறது.படம் முடிந்து வெளியில் வந்தபிறகு படம் பார்த்ததிற்கான எந்த உணர்வும் இல்லை.

ஆரம்பக் காட்சிகளில் ஏஏஏ!! தல ராக்ஸ் என விசிலடித்தும் கைத்தட்டியுமாய் மகிழ்ந்த ஆசிப் படம் ஆரம்பித்த 10 நிமிடங்களில் அசாதாரண மெளனத்திற்கு போய்விட்டார்.ஒரு விடுமுறை நாளின் மாலை வேளையை வீணாக்கியதற்கு பரிகாரமாய் துபாய் திரைப்பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை திரையிடப்படும் அடூரின் நாலு பெண்கள் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை ஆசிப் வாங்கித் தந்துவிட்டார்.சந்தோஷ் சிவனின் ஆங்கிலப் படம் ஒன்றுக்கும் போவதாய் திட்டமிட்டிருக்கிறோம்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அஜித்...
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...