Thursday, November 1, 2007

உள்ளேயிருந்து குரல்கள் அல்லது எண்ணங்களை எழுத்துக்களாக்குதல் அல்லது வாந்தியெடுத்தல்



இந்தப் பணியில் நீ ஒன்பது மாதங்களாக நிலைத்திருப்பது மிகவும் ஆபத்தானது.நல்லவேளையாக இரண்டு இருப்பிடங்களை மாற்றி விட்டிருக்கிறாய் இருப்பினும் வழக்கமாய் எதிர்கொள்பவர் சிரிக்க ஆரம்பித்து விட்டாலோ,ஒரே மனிதர்களை ஒரே நேரத்தில்,ஒரே இடத்தில் சந்திக்கத் துவங்கிவிட்டாலோ நீ! தேங்கிப் போவதை உணரத்தொடங்கு. உடனடியாக எங்காவது ஓடிப்போ! மேலும் இந்தப் பணியில் எந்த சுவாரஸ்யமில்லை.. இது என்ன எழவெடுத்த வேலை? ஒரு பிரயோசனமுமில்லை.. மேலும் இந்த சம்பளம்,பதவி எல்லாம் எத்தனை நாளைக்கு? உட்னடியாக எங்காவது கிளம்பு..
நீ! சற்று நிறுத்தேன் உன் பிரச்சினையால்தான் என் வாழ்வு இத்தனை அலைக்கழிப்பாய் இருக்கிறது.என்னால் நிம்மதியாய் மூச்சு விட முடியவில்லை.. இத்தனை ஓட்டங்களிலேயும் நான் அடைந்ததுதான் என்ன?ஒன்றுமில்லை. சற்று சும்மா இரு. என்னால் எந்த ஒன்றையும் மாற்றிவிடமுடியவில்லை.. எல்லாம் அப்படியேத்தான் இருக்கிறது.. மேலும் மாற்றிவிடமுடியும் என்கிற நம்பிக்கையும் எனக்குப் போய்விட்டது. இந்த அலைவுகளில் பல மோசமான மனிதர்களை சந்தித்தேன் என்பதைத்தவிர நான் சாதித்தது எதுவுமில்லை. என்னை விட்டுவிடு நான் எங்காவது நிலைபெற வேண்டிய தருணம் வந்துவிட்டது.இந்த இடம் சற்று ஆசுவாசமய் இருக்கிறது.அடுத்த மூன்று வருடங்களுக்கு நகர்வதாயில்லை.
உனக்கென்ன பைத்தியமா?இதுதான் சரியான தருணம் அலைவுகளின் மூலம்தான் உனக்கான மிகச் சரியான ஒன்றை நீ அடையமுடியும். யோசித்து பார் ஒரு காலத்தில் ஐந்தாயிர ரூபாய் தான் உன் கனவாயிருந்தது ஆனால் இப்போது பார் உன் வார இறுதிக்காக நீ செலவிடும் தொகை அதை விட அதிகம்.இது எதனால் வந்தது?
வாய மூடு ஐந்தாயிரம் வாங்கியிருந்தாலும் இதே போதையை ஏன் இன்னும் அதிக போதையைப் பெற்றிருக்க முடியும் இந்த கருமத்துக்காக எத்தன இழந்திருக்கிறேன்.
நான் ஐந்தாயிரம் என சொன்னது ஒரு உதாரணத்திற்காக நீ நேர்மையாக உன்னைப் பார்! எத்தனை வளர்ந்திருக்கிறாய்!..எத்தனை பண்பட்டிருக்கிறாய் என உனக்குத் தெரியாது.
இதன்மூலம் எனக்கென்ன வந்தது?என்ன பிரயோசனம் இந்த வடிவத்தில்? உனக்குத் தெரியுமா இந்த முறை ஊருக்கு போயிருந்தபோது நண்பர்களைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது.எல்லாரும் ஒரே இடத்தில்தான் இருக்கிறார்கள் மனைவி குழந்தை சகிதமாய் இரு சக்கர வாகனத்தில் வாடகை வீடாயிருப்பினும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.நான் பார் பைத்தியக்காரனை விட கேவலமாய் எதையோ கிறுக்கி கொண்டிருக்கிறேன்.
இதென்ன அபத்தம்! பசங்க சந்தோசமா இருக்காங்கன்னு யார் சொன்னது உனக்கு? அவன் பிரச்சின அவனவனுக்கு.. நீ! டொயட்டால சுத்துற டேய்! நீ! ரொம்ப அதிகமான வசதிகளோட இருக்க.. என்ன அசிங்கமா திட்ட வைக்காத!
எனக்கு போதும்யா! இந்த வாழ்க்கை.. என்னை விட்டுடு..
இதோ பார்! இந்த ஊர்ல கல்யாணம் பண்ணிட்டுலாம் சந்தோசமா இருக்க முடியாது.இப்பவே யோசிக்க ஆரம்பி வேற ஊருக்கு போ, வேற வேல தேடு, வேற எங்காவது செட்டில் ஆகு!
எனக்கு யோசிக்கவே பயமா இருக்கு.. என் தகுதிக்கு இந்த வேலை ரொம்ப அதிகம்..
யார்ரா! சொன்னது அப்படியெல்லாம் இல்ல.. உன் திறமை உனக்கு தெரியாது
எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கை இத்தன சிக்கலா இருக்கு? இது வர எதுவும் ஒழுங்கா நடக்கல.. எது தேவையோ அது எப்பவும் கிடைக்கல..
என்னா கிடைக்கல உனக்கு? எது உன் தேவை?
தெரியல
ஆனா என்னால எதையும் மாத்த முடியல... என்னால யாரும் சந்தோசமா இல்ல.. நானும் சந்தோசமா இல்ல..
டேய்! இது வெத்து சீன்
நல்லா யோசிச்சி பார்! நீ மாறி இருக்க நிறைய விசயத்தை மாத்தியிருக்க (இந்த 'விசய' கூட இப்ப மாத்தினதுதான்)
அய்யோ! என்ன விட்டுடு..
இதோ பார்! இந்த பொண்ன என்னா பண்ணலாம்னு இருக்க?
தெரில
இருக்கிற பிரச்சின பத்தாதுன்னு இது வேற
சரி அந்த பொண்ணு?
டேய்! சும்மா இர்ரா!! என்ன டார்ச்சர் பண்ணாத.. என் வாழ்க்கைல எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமே இந்த பொண்ணுங்கதான்..
பன்றதெல்லாம் பண்ணிட்டு இதென்னடா மொக்க ஸ்டேட்மெண்ட்
சரி அந்த வீட்ட என்னா பன்றது
தெரில ஆனா அந்த வீட்ல என்னால இருக்க முடியாது
சரி வேற வாங்கு
அய்யோ! என்ன விடு..
டேய்! யோசிடா! எதையும் யோசிக்க மாட்டன்னு அடம்புடிச்சா என்ன செய்ய
எதுக்கும் தீர்வு வரப்போறதில்ல
என் வாழ்க்கை இப்படித்தான் நான் இப்படியே இருந்துட்டு போறேன் விடு..

நீ உனக்கான ஒரு பொய்யான உலகத்தைப் புனைந்துகொண்டு அதன் கனவுத் தன்மையில் ஆழ்ந்துபோய்கொண்டிருப்பதை உன்னால் உணரமுடிகிறதா? இந்த பாழாய் போன எழுத்தை எப்போது துவங்கினாயோ அப்போதிலிருந்து பிடித்துவிட்டது சனி.இதெல்லாம் வேலையில்லாத சோம்பேறிகளின் கொட்டாரம்.என்னசெய்வதென்று தெரியாமல் கொட்டாவி விடுவதைப் போன்றது நன்றாக யோசித்துப் பார் இந்த உலகத்திற்கு வந்த பிறகு நீ! எதையாவது உருப்படியாய் செய்தாயா?புத்தகங்கள் திரைப்படங்களய் வாங்கி குவிப்பது,அதிமேதாவித்தனமாய் சிந்திப்பது, அதிகபட்சமாய் கிடைக்கும் மனிதர்களிடம் உன் மேதாவித்தனத்தத நிரூபிக்க முனைவது.இதைத் தவிர்த்து வேறேதாயினும் செய்தாயா?மெல்ல மெல்ல நீ! உனக்கான வாழ்க்கையை புனைவுகளுக்கு நகர்த்துகிறாய்.எல்லா நிகழ்வுகளையும் எழுத்துக்களாகிப் பார்க்கிறாய்.உன் உலகம் மெல்ல வடிவம்,நிறம்,எல்லாமிழந்து வெற்று சொற்களாகவும் எழுத்துக்களாகவும் மாறி விட்டதை உன்னால் உணரமுடிகிறதா?..இப்போதெல்லாம் உனக்கு பெயரோ,வடிவமோ,பின்குறிப்புகளோ, முன் குறிப்புகளோ தேவைப்படுவதில்லை தமிழெழுத்துக்கள் மட்டுமே பிரதானமாய் முன்நின்று உன்னை ஆகரமிக்கத் தொடங்குவதை உணரமுடிகிறதா? தம்பி நீ! உனக்கான வாழ்வை இழந்து கொண்டிருக்கிறாய்.விழித்துக் கொள்..நீ ஒரு வடிவமாக நான் உதவியிருக்கிறேன் நீ! தரையிலிருந்து மேலெழும்பி மிதக்க ஆரம்பிக்க நான்தான் தூண்டுதலாய் இருந்தேன்.அதே நான் இப்போது உன்னை மேலிருந்து இறக்க மிகவும் சிரமப்படுகிறேன் உனக்கு மிக பிரம்மாண்டமான இறக்கைகள் முளைத்துவிட்டன.அவை மிகுந்த ஆபத்தானவை அவை உன்னை கொண்டு செல்லும் இடம் மிகப்பெரிய பள்ளத்தாக்காய் இருக்கக்கூடும்.. மேலும் உன்னுலக மனிதர்கள் ஒவ்வொருத்தராய் நிறமிழந்து கொண்டே வருவதை உன்னால் உணரமுடிகிறதா?இப்படித்தான் கடைசியில் எல்லாம் வெளிறிப் போகும்.

எனக்குத் தலை சுற்றுகிறது என்ன செய்வதென்று தெரியவில்லை.நான் என்ன செய்ய? எங்கு போக?எதை ஆரம்பிக்க?எதை முடிக்க?எதையும் என்னால் செய்ய முடியதென தீர்மானமாய் தெரிந்த கொண்ட பிறகு என்னை எங்காவது தொலைத்துவிட முடிவுசெய்கிறேன்.எனக்கிந்த இருப்பு மிகுந்த பயத்தை தருகிறது. நானே ஒரு உலகத்தை புனைந்துகொள்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்களை அங்கே நான் சந்திக்கிறேன் என் சிந்தனை என் எண்ணவோட்டம் இவைகளோடு பெரும்பாலோர் ஒத்துப்போகிறார்கள். நான் மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறேன். உனக்கொன்று தெரியுமா? என் உயரங்கள் இருபத்தாறு வருடங்களாய் எனக்கே தெரியாமலிருந்தது.இப்போது என்னால் உணரமுடிகிறது.நான் சந்தோசமாயிருக்கிறேன் தயவு செய்து என்னை குழப்பாதே.. கொஞ்சம் சும்மா இரு போதும்...இன்று வார இறுதி வேறு.. தியாகுவோடு கராமா ஓட்டலுக்கு போகிறேன். தர்க்கோயெவ்ஸ்கி படங்கள் இரண்டு பார்க்காமல் இருக்கிறது. மெல்லிதான போதையும், பின்னிரவும், மிக மெதுவான திரைப்படமுமாய் எனக்கான உலகம் என்னை விழுங்க காத்திருக்கிறது. தயவு செய்து உன் கொழுத்த வாயை மூடிக்கொண்டு போ!

15 comments:

இம்சை said...

எனக்குத் தலை சுற்றுகிறது என்ன செய்வதென்று தெரியவில்லை.நான் என்ன செய்ய? எங்கு போக?

இம்சை said...

நல்லா கெளப்புரீங்கய்யா பீதி...

Unknown said...

வாழ்க்கை அதன் பாட்டையில் சுழன்று கொண்டே இருக்கிறது. வீணாய் தன்னைத்தானே வருத்திக் கொள்வதால் பயனேதுமில்லை. நேற்றும் இன்றும் போல் நாளை மற்றுமொரு நாள். இன்றைக்கு வாழ்வோம். சிறப்பாக வாழ்வோம். நாளை, நேற்றை நினைக்கையில் சுகமாயிருக்கட்டும். 'பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்கலாகாது' என்பதை மனதிலிருத்தி, நாளைக்கான நம் முயற்சிகள் இன்றே தொடங்கப்பட வேண்டும்தான். அதற்காக 'இன்றை' தொலைத்து விடக்கூடாது.

கதிர் said...

போய்யா போ போய் அந்த நல்ல மனுசன கெட்டு குட்டிச்சுவராக்கு.

கதிர் said...

நீங்க வாரயிறுதில பாருக்கு போறதும் அங்க ரெண்டு மூணு முலைபெருத்த பிகர்கள பாக்கறதும், விடிஞ்சி வந்து அஞ்சாறு கவிதைகள ஒரே நேரத்துல போடறதும், சலிப்பு வர்றதும், அதையே புனைவா எழுதி போடறதும், போட்ட உடனே நாங்க வந்து பின்னூட்டம் போடறதும் இதெல்லாம் வழக்கந்தான பாஸ்.
எங்களுக்கே சலிப்பாதான் இருக்கு...
என்ன செய்யற தமிழ்மணத்துல வேற எதுவும் உருப்படியான போஸ்ட் வர்றதில்லயே!

ilavanji said...

அய்யனார்,

நல்லவேளை! இரண்டையும் வேறவேற கலர்ல போட்டீங்க! :)

கடைசிக்கேள்விக்கு உங்களுக்காவது பதில் இருக்கு! ம்ம்ம்... :(

ஆடுமாடு said...

அய்யனார் அருமை. கடந்து போகிற எல்லா வழிகளிலும் பாதங்களில் வலி இருக்கிறது. பாய்வதோ பறப்பதோ அவரவர் விருப்பம் சார்ந்தது. ஒரு உலகத்தை நாமே புனைந்துகொள்வதும் நம் உயரங்களை நாமே அறிந்துகொள்வதும் அதிகம் படிப்பதால்தான். நன்றி

Ayyanar Viswanath said...

இம்சை
:)

நன்றி சுல்தான்

எலே தம்பி நாங்கதான் கெடுக்குறோமா போய்யாங்..

Ayyanar Viswanath said...

ஆஹா இளவஞ்சி அங்கயும் இதே பிரச்சினதானா...:)

உண்மைதான் ஆடுமாடு..இந்த புத்தகங்கள்தான் எல்லா எழவுக்கும் காரணம்:) நன்றி

cheena (சீனா) said...

மனம் ஒரு குரங்கு.
ideal mind is satan's workshop
தேவை இல்லாமல் மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். நடப்பது நடக்கட்டும். எல்லாம் நன்மைக்கே !!
நாளை நடப்பதை யாரறிவார் ?
நேற்று நடந்ததை மறந்துவிடு.
இன்றைய தினத்தின் இக்கணத்தின் இன்பத்தை அனுபவி. எல்லாம் சரியாய் விடும்.

இலக்கிலாத பட்டமாக பறப்பதாக நினைப்பா ?? தவறில்லை. இலக்கு தானாகவே கிட்டும்.

கோபிநாத் said...

இந்த புனைவு தாங்க உண்மையான புனைவு :))

கோபிநாத் said...

\தம்பி said...
நீங்க வாரயிறுதில பாருக்கு போறதும் அங்க ரெண்டு மூணு முலைபெருத்த பிகர்கள பாக்கறதும், விடிஞ்சி வந்து அஞ்சாறு கவிதைகள ஒரே நேரத்துல போடறதும், சலிப்பு வர்றதும், அதையே புனைவா எழுதி போடறதும், போட்ட உடனே நாங்க வந்து பின்னூட்டம் போடறதும் இதெல்லாம் வழக்கந்தான பாஸ்.
எங்களுக்கே சலிப்பாதான் இருக்கு...
என்ன செய்யற தமிழ்மணத்துல வேற எதுவும் உருப்படியான போஸ்ட் வர்றதில்லயே!\\

விடுய்யா...அடுத்த வாரம் நம்மளையும் கூட்டிக்கிட்டு போவாரு.:)

நாகை சிவா said...

ஒ வெள்ளிக்கிழமையா...

ஆகட்டும் ஆகட்டும்..

அனானி நண்பருடனா... நடக்கட்டும் நடக்கட்டும்...

நாகை சிவா said...

தம்பி!

தப்பா சொல்லுறியே... இவரு பின் நவீனத்துவாதி ஆச்சே... அப்ப பின்னாலே தானே... :)

chandru / RVC said...

அய்யனார், இதைப் படிக்கும்போது நேரங்கெட்ட நேரத்தில் விழிப்பு வந்து ஏதாவது புத்தகத்தை எடுத்து அமர்கையில் மனம் அதில் செல்லாமல் வாழ்வு குறித்த வாதங்களில் ஈடுபடும் மோசமான நீண்ட இரவுகளை நான் அவ்வப்போது கடப்பதை நினைவுபடுத்துகிறது. ஒன்று மட்டும் புரிகிறது, திருப்தியடைதல் மனிதர்க்கு சாத்தியமில்லை, சாத்தியப்படின் தேடல் ( எதைத் தேட..?) முற்றுப்பெறும்.

Featured Post

test

 test