Monday, September 10, 2007

எழுதிச் செல்லும் விலங்குதலை வெடித்து விடும் போலிருக்கிறது.ஒரே சீராய் சென்று கொண்டிருக்கும் நாட்களிலிருந்து பிறழ்ந்து என்றாவதொரு நாள் ஏற்படும் சிறு மாற்றத்தைக் கூட ஏற்றுக்கொள்ள நான் தயாராய் இல்லை.ஆனால் வாழ்கிழிய சொல்லிக்கொள்வேன் ஒரே மாதிரியாய் இருக்க விரும்புவதில்லையென. மாற்றங்களை விரும்புபவனாய் நானே புனைந்து கொண்டதெல்லாம் எத்தனை அபத்தம்!எதுவும் மாறாதிருப்பது மிகவும் ஆசுவாசமானது.நிம்மதியாய் உள்ளிழுத்து விடும் காற்றைப் போன்றது.இன்றைய என் உணவிலோ, பயணத்திலோ, உறக்கத்திலோ எந்த மாற்றங்களும் இல்லாதிருப்பதும் நாளை இதே போன்ற ஒன்றினை என்னால் செய்ய முடியுமென்ற நம்பிக்கையோடு தூங்க செல்வதும் லேசில் யாருக்கும் வாய்ப்பதில்லை.
----------***----------------
பொதுப்பரப்பில் உலவுவதுதான் எத்தனை அசெளகரியம்..எனக்கான தனித்தன்மை குலைந்து போகிறது..தனித் தன்மையென்பது முன்பிருந்ததா?இப்போதிருக்கிறதா என்பதெல்லாம் தனிக்கதை இருப்பினும் என் இருப்பு பொதுப்படுகிறது ..ஜிகினா துணிகளை சுற்றியபடி இந்த மேடையில் நான் ஆடிக்கொண்டிருப்பதில் எனக்கு முன்பிருந்த வசீகரம் இப்போதில்லை.எல்லாக் கருமத்தையும் தலைமுழுகி விட்டு எங்காவது ஓடிவிடலாமா?
----------***----------------
எந்த ஒரு நொடி எனக்கான எல்லாக் கிளைத்தல்களையும் துண்டித்துவிட தூண்டுகிறதென்பது இதுவரை தெரியவில்லை.அந்த ஒரு நொடியை அந்த கணத்தில் வெறுக்க நேரிட்டாலும் பிறகெப்பாவது யோசிக்கையில் கிளைத்தல்களை அவ்வப்போது துண்டிப்பது செழிப்பான வளர்ச்சிக்கு உதவுமென்பதில் சந்தேகமில்லை.ஆனால் இந்த செழிப்பான வளர்ச்சி மட்டும் உன்னை எங்கிட்டுச் செல்லப்போகிறது என்பதற்கு என்னிடம் பதில்கள் இல்லை.பொதுவாய் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் நின்று கொண்டிருப்பதை விட சென்றுகொண்டிருப்பது மேலென….இதை யார் சொன்னது கல்யாணியா?
----------***----------------
சரியாய் தூங்காமல போன அடுத்த நாள் மதியம்..அரைப்போதையும் முழுசாய் தெளிந்த நள்ளிரவு..விடுமுறை நாளில் விழித்துக்கொண்ட அதிகாலை..இந்த மூன்று பொழுதுகளிலேயும் எழுதப்படும் கவிதை எல்லாருக்கும் பிடித்து தொலையலாம்.
மனம்
அகம்
உள்
வெளி
லூசி
பைத்தியமாதல்
----------***----------------
இந்த மனம் தொலைந்த கிறுக்கல்களுக்கு கீழ்கண்டவைகளை காரணமாய் சொல்லலாம்
1.புத்தகங்கள்
2.திரைப்படங்கள்
3.குடிகார நண்பர்கள்
4.பெண்கள்
5.துரோகிகள் (பெண்களுக்கடுத்து ஏன் துரோகிகள் என எழுத தோன்றுகிறது?)
6.முதுகில் குத்துவோர்
7.காறி உமிழ்வோர்
8.தோழிகள்
9.காதலிகள்
10.பழைய காதலி
11.புதிய காதலி
12.என்றைன்றுக்குமான காதல்
13.பல்வேறு புரிதல்களுடனான அன்பு
14.பன்முகம் கொண்ட உண்மை
15.ஜார்ஜ் லூயி போர்ஹே
16.பெண்ணியம்
17.விளிம்பு
18.மய்யம்
19.கூர்முனை
20.முன் தீர்மானங்கள்
21.கட்டவிழ்ப்பு
22.அலைவு
23.பிறழ்வு
24.எதுவுமில்லாது போதல்

அத்தோடு

கொக்கிகள் தளர்த்தப்படும் ப்ரா
----------***----------------
இதிலிருந்து மீண்டு வருவதற்கான மீட்சிகள் இவையென இதைத் துய்த்து கொண்டிருப்பவர்களால் சொல்லப்படுகிறது.

1.யாரையவது நேசி
2.அன்பு நிஜமானது
3.வாழ்வு நிஜமானது
4.காதலி / காதலிக்கப்படு
5.கல்யாணம் செய்து கொள்
6.பிள்ளை பெற்றுக்கொள்
7.சம்பாதிப்பதை சேமி
8.லோன் போடு
9.வீடு கட்டு
10.ஆபிசுல எவளாவது மாட்னா செட்டப் ஒண்ணு வச்சிக்கோ
11.என்ஜாய் லைஃப் மாமா!
----------***----------------
எல்லாவற்றையும் எழுதிக்கொண்டிருக்கிறது என் விலங்கு
----------***----------------
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...