Wednesday, May 16, 2007

துவக்கத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடும் விறீடல் - ஆல்பிரட் ஹிட்ச்காக்



சண்டைப் படங்கள் சலித்த ஒரு நாளில் நான் முதலில் கண்டெடுத்தது ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கை. சஸ்பென்ஸ்,கொலை,த்ரில்லர்,என்ற முன் தீர்மாணங்களுடன் இவரை அனுகின முதல் முயற்சியே தோல்வியில் முடிந்தது.திரைக்கதை என்பது தூய சினிமாவின் ஆதாரம் என்பதை ஆணித்தரமாய் சொல்லியிருப்பார்.கதையாடல்களை மட்டுமே வைத்துக்கொண்டு திகைப்பையும் விறுவிறுப்பையும் திரைக்கதையில் கொண்டுவர முடியும் என்பதெல்லாம் இவரால் மட்டுமே சாத்தியமான ஒன்று.ஆனால் விறுவிறுப்பான படங்கள் என்றால் நாம் இன்னமும் பின்னணி இசையைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். இவரின் the shadow of a doubt படம்தான் முதலில் பார்க்க நேர்ந்தது.படம் முழுவதும் ஒரு சந்தேகத்தன்மை மெல்லியதாய்,இயல்பாய் படர்ந்திருக்கும்.ஒரு புதுவித அனுபவத்தை எனக்கு தந்தது இந்த படம்.பின் எல்லாவிடங்களிலும் இவரை தேடத் தொடங்கினேன்.யாரை சந்திக்க நேரிட்டாலும் ஹிட்ச்காக் படமிருக்கா? இன்று ஏதேனும் டி.வி.யில் இவர் படமா? இப்படியெல்லாம் தேடி Black mail (1929) Murder (1930) the 39 steps (1939) போன்ற பிரிட்டிஷ் படங்களும் Rope (1948) I Confess(1953) psyco(1960),The birds(1963),Marnie(1964),Frenzy(1972) போன்ற அமெரிக்க திரைப்படங்களையும் கண்டுபிடித்தேன்.இன்னும் கண்டறிய 30 படங்களுக்கு மேல் இருக்கிற்து.

தூய சினிமா என்பது ஒன்றையொன்று இட்டு நிரப்புவதான பல துண்டு சினிமாக்கள் ஒன்று சேர்ந்தது என ஹிட்ச்காக் வரையறுக்கிறார் பல இசைக் குறிப்புகள் சேர்ந்து ஒரு இனிய இசையைத் தருவது போல வெட்டி ஒட்டும் உத்தியினால் விளையும் முக்கியப் பயன்கள் இரண்டு. ஒன்று கருத்தாக்கத்தை உருவாக்குவது. இரண்டாவது வன்முறை மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டுவது.இந்த உத்தியை இவர் சிறப்பாக கையாண்டார்.சினிமா பேச ஆரம்பிக்கும் முன்னரே ஹிட்ச்காக் தனது மிரட்டலை ஆரம்பித்துவிட்டார்.ஆகஸ்ட் 13 ,1899 ல் இலண்டனில் பிறந்த ஹிட்ச்காக் பொறியியலில் பட்டம் பெற்று பொறியியல் வரைபடம் வரைபவனாக தனது வாழ்க்கையை துவங்கினார் பின் புகைப்படத்துறையின் மீதிருந்த ஆர்வத்தினால் 1920 களில் சினிமா படக் கம்பெனிகளில் ஊமைப் படங்களுக்கு டைட்டில் எழுத வந்துவிட்டார்.1925ல் இவர் முதலில் இயக்கிய திரைப்படம் The pleasure Garden என்கிற ஊமைப்படம்.இந்த படத்தின் வணிக ரீதியிலான தோல்வி அவரது சினிமா எதிர்காலத்தின் அச்சுறுத்தலாக அமைந்தது பின்பு 1926 ல் The lodger.A Story of the London Fog என்கிற படத்தின் வெற்றி இவரை விறுவிறுப்பான படங்களில் நிலைபெற தூண்டியது எனலாம்.பதினோரு ஊமைப்படங்கள் பதினாறு பிரிட்டிஷ் படங்களுக்குப்பின் ஹிட்ச்காக்கின் ஹாலிவுட் பிரவேசம் நிகழ்ந்தது.இந்த காலகட்டத்தில் இவர் இயக்கிய 39 steps மற்றும் the man who knew too much படங்கள் பரவலாய் எல்லோர் கவனத்தையும் ஈர்த்த்து.

ஹாலிவுட்டில் 1940 ல் இவரின் இயக்கத்தில் வெளிவந்த Rebacca அந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.இது இவரின் முதல் அமெரிக்க திரைப்படம்.திரைப்படம் என்பது தயாரிப்பாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இயக்குனர்கள் எடுக்கும் ஒரு முயற்சி என்கிற பிம்பத்தை உடைத்த முதல் இயக்குனர் ஹிட்ச்காக்தான்.திரைப்படம் இயக்குனர்களின் பார்வையிலேதான் இயக்கப்பட வேண்டும் என்பதை அப்போதே வலியுறுத்தியதின் காரணமாக author theory என்கிற புது சித்தாந்தம் தோன்றவும் காரணமாக இருந்தார்.North by northwest,psycho,birds போன்ற படங்களின் பெரும் வெற்றி உலகம் முழுதும் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியது.Family plot(1976) படம் இவர் இயக்கிய கடைசித் திரைப்படம்.இறப்பதற்க்கு முன் நிலுவையில் இருந்த the short night என்கிற திரைக்கதை அவரின் மறைவுக்குப்பின் புத்தகமாக வெளிவந்தது ஏப்ரல் 29,1980 ல் தனது 80 வது வயதில் கலிபோர்னியாவில் சிறுநீரக கோளாறில் இறந்தார்.

சாதாரண மனிதர்களை அசாதாரண நிலைக்கு பொருத்துவதுதான் இவரது சிறப்பம்சமாக இருந்தது. இதனால பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிப்போக செய்து ஒரு திகில் அனுபவத்தை வெகு எளிதில் கடத்திவிட அவரால் முடிந்தது.மாடிப்படிக்கட்டு இவருடைய எல்லா படங்களிலும் பயன்படுத்தப்பட்ட ஒரு இடம்.அதில் மெல்ல மேலேறும்போது ஒரு அசாதாரண பயம் மெல்ல விரவும்.இவரது பெரும்பாலான படங்களில் அம்மா கதாபாத்திரம் புதிர் தன்மை நிரம்பியதாய் இருக்கும்.அம்மாவிற்க்கும் மகனிற்க்கும் உள்ள உறவு சிக்கல்தன்மை நிரம்பியதாய் இருக்கும்.போலிஸ்க்கு பயந்தவர்களாகவே இவரது கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்.சிறுவயதில் குறும்புத்தனமிக்கவராக இருந்த இவரை திருத்த வேண்டி இவர் அப்பா தன் போலிஸ்கார நண்பர் உதவியுடன் 5 நிமிடங்கள் சிறையில் வைத்திருந்தாராம் அந்த பயம் இவரின் எல்லா படங்களிலும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படும்.
மேலும் இவரது எல்லா கதாபாத்திரங்களும் பிராந்தி என்ற மதுவகை மட்டும்தான் பயன்படுத்துவர் :) ஹிட்ச்காக் படப்பிடிப்பு தளங்களில் திரையை மனதில் கொண்டே பணியாற்றுவார்.நீங்கள் ஏன் உங்கள் ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்குகளில் படம் பார்ப்பதில்லை? அவர்கள் திகிலில் விறீடுவதை கேட்காமலே இருக்கிறீர்களே?என்கிற கேள்விக்கு அவர் நான் படத்தை எடுக்கத் தொடங்கும்போது அந்த விறீடலை கேட்க ஆரம்பித்து விடுகிறேன் என்கிரார்.

ஒரு சம்பவத்தை,நிகழ்வை திகிலான காட்சியமைப்பாக ஹிட்ச்காக் இப்படி மாற்றியமைக்கிறார்
நீங்களும் நானும் ஒரு அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அங்கே வெடிகுண்டு இருக்கிறது. எதைப் பற்றியுமில்லாத ஒரு சாதாரணமான உரையாடலை மேற்கொண்டுள்ளோம். சலிப்பூட்டுகிறது. அது எதையும் அர்த்தப்படுத்தவில்லை. திடீரென பெரும் சத்தம். குண்டு வெடிக்கிறது. பதினைந்து வினாடிகளுக்கு. அவர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். இப்போது அதை நீங்கள் மாற்றுங்கள் அதே காட்சியை அமையுங்கள். வெடி குண்டை நடுவில் நுழையுங்கள். வெடிகுண்டு அங்கு இருப்பதைக் காட்டுங்கள். அது ஒரு மணிக்கு வெடிக்கப் போகிறதென்று உணரச் செய்யங்கள். இப்போது பன்னிரண்டே முக்கால். பன்னிரண்டு ஐம்பது. சுவரில் உள்ள ஒரு கடிகாரத்தைக் காட்டுங்கள். மறுபடியும் அதே காட்சிக்குத் திரும்புங்கள். இப்போது நமது உரையாடல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது அதிலுள்ள முட்டாள்தனத்தினால். ‘டேபிளுக்கு அடியில் பார் முட்டாளே.’ பதினைந்து வினாடிகளுக்கு அதிர்ச்சியூட்டுவதற்கு பதிலாக இப்போது அவர்கள் பதினைந்து நிமிடங்களுக்கு காட்சி அமைக்கிறார்கள்
உலகத் திரைப்படங்களுக்கு புதிதாய் செல்ல விரும்புவோர் ஹிட்ச்காக்கிலிருந்து துவங்குவது சரியாய் இருக்கும் என நான் நினைக்கிறேன்.திகில் படம் பார்ப்பதற்க்கு முன் அப்படத்தின் திரை விமரிசனத்தை படிப்பது எவ்வளவு அபத்தமானதோ அதை விட அபத்தமானது ஹிட்ச்காக் படங்களுக்கு விமர்சனம் எழுதுவது எனவே அதை நான் தவிர்க்கிறேன். இருப்பினும் அடுத்த இடுகையில் ஒரு 5 படங்களையாவது அறிமுகப்படுத்தலாம் என இருக்கிறேன்.அதற்க்கு எப்போதும் என்னுள் விழிப்பாய் இருக்கும் ஒரு சோம்பேறி மனது வைக்க வேண்டும்

ஒப்பீடு
1.http://www.keetru.com/puthuezhuthu/jul06/alfred.html
2.http://en.wikipedia.org/wiki/Alfred_Hitchcock

17 comments:

Anonymous said...

pathiva patikka mutiyala


M


summaa

ஃபஸ்டா

Anonymous said...

நாட்குறிப்புகளிலிருந்து தட்டப்பட்ட தூசி

குட்டிபிசாசு said...

birds,pscho பார்த்து இருக்கேன்! மத்தெல்லாம் பார்க்க சந்தர்ப்பம் வரல!!

நல்ல பதிவு!!

Jazeela said...

//ஒரு 5 படங்களையாவது அறிமுகப்படுத்தலாம் என இருக்கிறேன்.அதற்க்கு எப்போதும் என்னுள் விழிப்பாய் இருக்கும் ஒரு சோம்பேறி மனது வைக்க வேண்டும்// விழிப்பாய் இருக்கும் சோம்பேறியை தூங்க செய்துவிடும் ஆர்வம்.

//திகில் படம் பார்ப்பதற்க்கு முன் அப்படத்தின் திரை விமரிசனத்தை படிப்பது எவ்வளவு அபத்தமானதோ அதை விட அபத்தமானது ஹிட்ச்காக் படங்களுக்கு விமர்சனம் எழுதுவது எனவே அதை நான் தவிர்க்கிறேன். //
நிறைய பட சேகரிப்பு வச்சிருக்கீங்க போலருக்கே? எங்கிருந்து புடிக்கிறீங்க?

Anonymous said...

வர வர நீங்க சரியில்லை. ஏமாற்றமே எனக்கு மிஞ்சுகிறது.

Ayyanar Viswanath said...

யோவ் M நீ மின்னலா

குட்டி பிசாசு பேர் சொல்லவே நல்லாருக்கய்யா :)

Ayyanar Viswanath said...

ஜெஸிலா

கைவசம் 100 படம் இருக்கு ஆனா ஒரே ஒரு கண்டிசன் ஏற்கனவே சொன்னதுதான் புத்தகங்களுக்கு பதிலா குறுந்தட்டு இந்த ஆட்டம் ஓ கே வா
:)

Ayyanar Viswanath said...

அனானி கிர்ர்ர்ர்ர்ர்ர்

Anonymous said...

அய்யனார்,

நல்லதொரு ஆரம்பம்! விரிவாக எழுதியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது! :)

ஹிட்ச்காக்கின் படங்கள் சிலதைப் பார்த்திருக்கிறேன். அந்த வெடிகுண்டு வெடிக்கிறது தொடர்பான காட்சியை அருமையாக விவரித்து இருக்கிறீர்கள்.

அடுத்த பகுதி, அடுத்த கிழமை வந்திரும்ல?

-மதி

Ayyanar Viswanath said...

மதி நன்றிகள்

அந்த வெடிகுண்டு விரிவாக்கம் ஹிட்ச்காக் ஒரு நேர்முகத்தில சொன்னது நம்ம சரக்கில்ல :) புது எழுத்துல விரிவா வந்திருக்கே படிக்கலியா?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நான் அதை எங்கேயோ ஆங்கிலத்தில் படிச்சிருக்கேன் அய்யனார்.

புதுஎழுத்தில் வந்தது படிக்கல. :(

அடுத்த பாகத்தில் என்னவெல்லாம் எழுதுவீங்கன்னு காத்திருக்கேன்.

ஃப்ரான்ஸுவா த்ரூபோவின் ஹிட்ச்காக் மோகம் பற்றியும் சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன். இங்க கியூபெக்கில் ஒரு ப்ரெஞ்சுப்படம் வந்திருக்கு. Le Confessional. கியூபெக் சிட்டியில் ஹிட்ச்காக், I Confessனு ஒரு படம் எடுத்திருக்கார். அதையும் படத்தில் இணைச்சு ஒரு த்ரில்லர் எடுத்திருக்காங்க. சுவாரசியமாக இருந்தது.

-மதி

இளங்கோ-டிசே said...

நல்லதொரு பதிவு அய்யனார்.

Ayyanar Viswanath said...

/கியூபெக்கில் ஒரு ப்ரெஞ்சுப்படம் வந்திருக்கு. Le Confessional. கியூபெக் சிட்டியில் ஹிட்ச்காக், I Confessனு ஒரு படம் எடுத்திருக்கார்/

தகவலுக்கு நன்றி மதி I Confess நான் பார்த்திருக்கேன்.நிறைய ஹிட்ச்காக் மோகிங்க இருக்காங்க மதி..கண்டிப்பா எழுதுறேன்.நீங்க டிசே லாம் படிச்சதே சந்தோஷமா இருக்கு

Ayyanar Viswanath said...

நன்றி டிசே அந்த மதுவிடுதி கவிதை போன வருடம் எழுதினதா? :) நான் திகதி சரியா பாக்கல

காயத்ரி சித்தார்த் said...

நல்லா இருக்குங்க!! விமர்சனம் போலவே தலைப்பும்!!

Anonymous said...

அய்யனார் said...
யோவ் M நீ மின்னலா
///

ஏன் டவுட்டா..:)

என்ன எல்லாரும் பதிவு ஆஹா ஓஹோனு சொல்லுறாங்க

பதிவ படிக்கனுமோ...?


M

லேகா said...

ஹிட்ச்காக் என் மனம் கவர்ந்த இயக்குனர்....கிராபிக்ஸ் பிரபலம் அடையாத காலத்திலேயே..தம் படங்களில் தேர்ந்த யுக்தியை அவர் பயன்படுத்தி இருந்தது ஆச்சர்யம் கொள்ள செய்பவை.எனது வலை தளத்தில் ஹிட்ச்காக்கின் "சைக்கோ" மற்றும் "Birds" திரைப்படங்கள் குறித்து விரிவாய் பதிவு செய்துள்ளேன்..
உங்கள் நீண்ட விரிவுரை நன்று..

Featured Post

test

 test