Thursday, May 17, 2007

நாட்குறிப்புகளிலிருந்து தட்டப்பட்ட தூசி -1

இன்றென் காலை நேரம்

இன்றய விடியலில்
எந்த அவசரமுமில்லை
செய்யப்பட எதுவுமேயில்லாத
மற்றொரு நாளின்
சுகமான காலை

தேநீரை சுவைத்தபடி
என் பழைய தேசத்திலிருந்து
வெளிவரும் நாளிதழை
மேய்கிறேன்
வழக்கம்போல்..

மாவட்டந்தோறும் வன்புணரப்பட்ட
பெண்களின் விலாவரி கதைகளே
கட்டச் செய்திகளில்
என் சக இனத்தின் மீது தினமும்
குண்டுகள் போடப்படுகின்றன
குழந்தைகளை குறிபார்த்து
வீசப்படும் குண்டுகளுக்கு கைம்மேல் பலன்
நேற்றும் கடல் சில வீடுகளையும் பல உயிர்களையும்
ஏப்பம் விட்டிருக்கிறது
இந்த சட்டமன்ற தொடரில்
உடைந்த மண்டைகள்
வீசப்பட்ட செருப்புகள்
சென்ற கூட்டத்தொடரை
காட்டிலும் அதிகமாம்..
அரசிய…

ஆ!

தேநீர் தீர்ந்துவிட்டது
தேநீருக்குப்பின் உடனே
புகைக்க வேண்டும் எனக்கு
இரவு வந்து படித்துகொள்வேன்
நிறுத்திய இடத்திலிருந்து

வேர்கள் பிறழ்ந்து
வெகு தொலைவு வந்திருப்பினும்
நான் தமிழன்…

7 comments:

ALIF AHAMED said...

கவிதை அருமை

நாகு (Nagu) said...

புலம் பெயர்ந்தோரின் செயலின்மை(helplessness)யை நன்றாக வரைந்திருக்கிறீர்கள்.

கண்மணி/kanmani said...

வழக்கம் போல் கவிதை நன்றாக உள்ளது.அப்புறம் 70வயது அழகி காதலனுடன் ஓட்டம் போன்ற தினத்தந்தி படிப்பதில்லையா?
சிந்துபாத்?கன்னித்தீவு?

மஞ்சூர் ராசா said...

இன்னும் கொஞ்சம் நன்றாக தூசி தட்டப்படவேண்டும்.

Ayyanar Viswanath said...

மின்னல் ஏதாவது உள்குத்தா :)

Ayyanar Viswanath said...

நாகு நன்றிகள்

கண்மணி
உங்க மாணவர்கள் எல்லாம் பாஸா?

மஞ்சூர்

ஆமாங்க ..ரொம்ப பழசு சரியா தூசி போகல :)

அருண். இரா said...

ஹாய் அய்யனார்!!! நானும் வந்திட்டேன்..
இவ்ளோ நாள்..உன் கவிதைகள் படிப்பேன்.. என்ன எழுதுறதுனு தெரியாம குழம்பி போய்டுவேன்.. இப்பத் தான் தெளிவா இருக்கேன்..
இந்த கவிதைகள்,பழைய கவிதைகள்,விமர்சனங்கள் எல்லாம் தூள்!!!
தொடர்ந்து கலக்குங்க..
அய்யனார் சேவை..
தமிழுக்குத் தேவை..

Featured Post

test

 test